உள்ளடக்கத்துக்குச் செல்

கொடுமை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


கொடுமை (பெ)

ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
 1. கடுமை
 2. குரூரம்
 3. தீமை
 4. வளைவு
 5. மனக் கோட்டம்
 6. முரட்டுத் தன்மை
 7. அநீதி
 8. பாவம்
 9. வக்கிராந்த பாஷாணம்
 10. வேண்டா வார்த்தை
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

 1. cruelty, tyranny, inhumanity
 2. severity, harshness
 3. roughness, uncouthness
 4. vileness, wickedness
 5. crookedness, obliquity
 6. partiality, bias
 7. injustice
 8. sin
 9. harsh words, slander
 10. a mineral poison


பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

 1. கொடுமைபல செய்தன (தேவா. 945, 1)
 2. கூனுஞ் சிறிய கோத்தாயுங் கொடுமை யிழைப்ப (கம்பரா. மந்திரப். 1)
 3. கொடு மையுஞ் செம்மையும் (பரிபா. 4, 50)
 4. கொடியோர் கொடுமை (தொல். பொ. 147)


விமர்சனப்பார்வை

[தொகு]

கொடுமை என்ற சொல் " கஷ்டம் , சிரமம் " என்ற பொருளில் கையாளப்படுகிறது. இதன் வேர்ச்சொல் ''கொடு" . 'கொடு" என்ற சொல்லுக்கு "வழங்குதல் , Give " என்று பொருள். ஆனால் பண்புப்பெயர் விகுதி மை சேர்ந்த கொடுமை என்ற சொல்லுக்கு முற்றிலும் ஒட்டாத பொருள் வழங்கப்படுகிறது. கொடியோர் என்ற சொல் "Bad person, crookedness, obliquity" என்ற பொருளில் வழங்கப்படுகிறது.  இதுவும் தவறான வழக்கம்.

கொட்டு = Punch on head, pour

கொடி = Wine ( தாழ்ந்து கொடுத்து நிற்பதால் 'கொடி' )

சரியான சொல்:

கடு = Severe

கடி = Bite

கடிமை = Being hard, Aggravation

கட்டி = Hard thing

( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கொடுமை&oldid=1968714" இலிருந்து மீள்விக்கப்பட்டது