அணங்கு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
அணங்குகிற/வருந்துகிறச் சிறுவன்

தமிழ்[தொகு]

பொருள்[தொகு]

 • அணங்கு, பெயர்ச்சொல்.
 1. அழகு; வடிவு
 2. தெய்வம்; தெய்வமகள்; தெய்வத்திற்கு ஒப்பான மாதர்
 3. வருத்திக் கொல்லும் தெய்வமகள்; தீண்டி வருத்தும் தெய்வப்பெண்
 4. வருத்தம்; நோய்; மையல்நோய்
 5. அச்சம்
 6. வெறியாட்டு
 7. பத்திரகாளி
 8. தேவர்க்காடும் கூத்து
 9. விருப்பம்
 10. மயக்க நோய்
 11. கொலை
 12. கொல்லிப்பாவை
 13. பெண்
 14. தேவதை

மொழிபெயர்ப்புகள்[தொகு]

 • ஆங்கிலம்
 1. beauty
 2. goddess
 3. demoness
 4. sadness
 5. fear
 6. frantic dance

விளக்கம்[தொகு]

 • அணங்குதல் என்னும் வினைச்சொல் ஒலித்தல், விரும்புதல், அண்டுதல், அஞ்சுதல், வருந்தல், வருத்துதல், நோயுறுதல் போன்று பல பொருள்களில் இலக்கியத்தில் வழங்கப்படுகிறது.

பயன்பாடு[தொகு]

 • அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை
  மாதர்கொல் மாலும்என் நெஞ்சு (குறள் 1081)
 • நோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல் தாக்குஅணங்கு
  தானைக்கொண் டன்னது உடைத்து (குறள் 1082)
 • பெருந்துறைக் கண்டிவ ளணங்கி யோனே (ஐங்குறு. 182)( மொழிகள் )

சான்றுகள் ---அணங்கு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=அணங்கு&oldid=1899877" இருந்து மீள்விக்கப்பட்டது