பேய்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
 • ஒருவர் இறந்த பின்பு அவரின் எதோ ஒரு வகை எச்சம் இருந்து அவர் வசித்த இடங்களில் அலைந்து கொண்டிப்பதான ஒரு வகை நம்பிக்கை; பிசாசு
 • தீமை
 • வெறி
 • காட்டுத்தன்மை
 • இல்லை யென்னும் பொருள்கொண்ட சொல்
மொழிபெயர்ப்புகள்
 • ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
 • பேயைப் பார்த்தது போல் நடுங்கினான் (he shivered as if he saw a devil
 • பேய்த்தனமாகத் தாக்கினான் (he attacked furiously like a devil)

(இலக்கியப் பயன்பாடு)

 • முதலில் தியாகுதான் வேனைப் பேய் போல ஓட்டி வந்தான் (ரெ. கார்த்திகேசு சிறுகதைகள்)
 • பேய் போல்திரிந்து பிணம்போல் கிடந்து பெண்ணைத் தாய்போல் நினைத்து தவம் முடிப்பது எக்காலம்?(மெய்ஞ்ஞானப் புலம்பல்)
 • கப்பலின் பாய் மரங்கள் பேய் பிசாசுகளைப் போல் பயங்கரமான சப்தமிட்டுக் கொண்டுஆடின. (பொன்னியின் செல்வன், கல்கி)
 • மனிதர் உலகுக்குப் புறம்பான பேய் உலகத்துக்கு வந்திருக்கிறோமோ என்று எண்ணி மனதில் திகில் (பார்த்திபன் கனவு, கல்கி)
 • மயானத்தின் நினைவோடு பேய் பிசாசுகளின் நினைவும் சேர்ந்துவந்தது (சிவகாமியின் சபதம், கல்கி)

ஆதாரம்} --->

விக்கிப்பீடியாவின்
கட்டுரையையும் காண்க:

வின்சுலோ

"https://ta.wiktionary.org/w/index.php?title=பேய்&oldid=1900420" இலிருந்து மீள்விக்கப்பட்டது