அரவணை
Appearance
பொருள்
அரவணை(வி)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
- அரவணை = அரவு + அணை. அரவு எனில் பாம்பு
- அரவணைத்தல் - பாம்புகள் ஒன்றோடு ஒன்று தழுவிக்கொண்டு அணைத்து இன்புறுமாம். (அரவு + அணைத்தல்) அதனால் அரவணைத்தல் என்னும் தொடர், அன்புடன் தழுவி வாழ்தலுக்குக் கூறப்படுகிறது. (வேருக்கு நீர் வார்த்தவர்கள், தமிழ்மணி, 30 அக். 2011)
பயன்பாடு
- தாய் தனது பிள்ளையை அன்போடு அரவணைத்தாள்.
- உறவுகள் இருந்தும் யாருமற்றவளாக, நண்பர்கள் இருந்தும் நண்பர்கள் இல்லாதவளாக, மனிதர்கள் சூழ இருந்தும் தனிமையாகவே இருந்து வருகிறேன். அம்மா வீரம்மாள் மட்டுமே எனக்கு முழு அம்மாவாக அரவணைத்தாள். ([1])
- மனையாள் அவள் ஓடிவந்தாள் மகனைத்தூக்கி அரவணைத்தாள்
- உணவு கொடுத்து உறங்க வைத்தாள் (பொன்னான வாழ்வைத்தேடி)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
பொருள்
அரவணை(பெ)
- விஷ்ணுவின் பாம்புப் படுக்கை
- விஷ்ணு கோயில்களில் அர்த்தசாமத்தில் நிவேதிக்கும் சருக்கரைப்பொங்கல்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- Viṣṇu's serpent bed, formed of the coils of the serpent Adiseshaa
- preparation of rice, sugar and some other ingredients offered to Viṣṇu at night, before bed time;
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- அரவணை மேல் வீற்றிருப்பானை (தேசிகப்பிர.)
- அரவணை துயிலு மரிதிரு மருக(திருப்பு.)
(இலக்கணப் பயன்பாடு)
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +
:அணை - தழுவு - ஆதரி - அரவணையான் - அரவணைச்செல்வன்