பொது

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொது:
எனில் சிதம்பரம் கோயிலின் ஒரு பகுதியான தில்லையம்பலம்..படம்: தில்லையம்பலம் ?
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

 • பொது, பெயர்ச்சொல்.
 1. பொதுமையானது
  (எ. கா.) பொதுநோக்கான் வேந்தன் வரிசையா நோக்கின் (குறள். 528).
 2. சிறப்பின்மை
  (எ. கா.) பொதுக்கொண்ட . . . வதுவை (கலித். 66).
 3. சாதாரணம்
  (எ. கா.) பொதுவின் மன்னுயிர்க் குலங்களும் (கம்பரா. வருணனை. 30).
 4. சகசம்
  (எ. கா.) உரை பொதுவே (கம்பரா. முதற். 172).
 5. நடுவுநிலை
  (எ. கா.) அவன் எந்தப் பக்கத்திலுஞ் சேராது பொதுவாயிருக் கிறான்.
 6. ஒப்பு
  (எ. கா.) ஒன்றொடு பொதுப்படா வுயர் புயத்தினான் (கம்பரா. நாகபாச. 75).
 7. குறிப்பான பொருளின்மை (பேச்சு வழக்கு)
 8. பகிரங்கமானது (W.)
 9. மன்று
  (எ. கா.) பொது விற் றூங்கும் விசியுறு தண்ணுமை (புறநா. 89).
 10. தில்லையம்பலம்
  (எ. கா.) கோலமார் தருபொதுவினில் வருகென (திருவாச. 2, 128).

மொழிபெயர்ப்புகள்[தொகு]

 • ஆங்கிலம்
 1. that which is common or shared by many; generality, opposite to ciṟappu-சிறப்பு
 2. lack of distinction
 3. that which is ordinary or general
 4. that which is usual or natural
 5. neutrality
 6. likeness, equality
 7. vagueness
 8. that which is public
 9. public place, assembly
 10. the hall in the temple at Chidambaram


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

சொல்வளம்[தொகு]

பொது
பொதுமக்கள், பொதுவுடைமை, பொதுக்கூட்டம், பொதுக்குழு, பொதுச்சொத்து, பொதுச்செயலாளர்
பொது நிறுவனம், பொது மேலாளர், பொது அறிவிப்பு, பொது வாக்கெடுப்பு, பொது நிகழ்ச்சி, பொது ஏலம், பொதுமகளிர்


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பொது&oldid=1635849" இலிருந்து மீள்விக்கப்பட்டது