கடைக்கால்
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
கடைக்கால் (பெ)
- செய்க்குத் தூரமான வாய்க்கால்
- அடித்தளம்; அஸ்திவாரம்
- மிகத்தாழ்ந்த கீழிடம்
- ஊழிக்காற்று
- பின்வருங்காலம்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- channel that is far away from a field
- foundation
- lowest place
- final tempest, destructive wind that prevails at the end of the world
- future time
விளக்கம்
- கடைக்கால் = கடை + கால்(வாய்)
- கடைக்கால் = கடை + காலம்
பயன்பாடு
- கடைக்கால் தோண்டாமலேயே மூன்றாம் தளக்கட்டுமானத்தில் இறங்கினார்கள் (நெடுஞ்சாலை, நாஞ்சில் நாடன்)
- சோழர் கால அளவுகளின்படி கோயிலின் திட்டமிடப்பட்ட உயரம் என்ன, கடைக்கால்கள் எந்த அடிப்படையில் திட்டமிடப்பட்டன. கட்டப்பட்டன, பாரந்தூக்கிகள் முதலியன இல்லாத ஒரு காலத்தில் சுமார் 60 மீட்டர் உயர கோபுரம் எவ்வாறு கட்டப்பட்டது (பெரிய கோவில் கட்டப்பட்டது எப்படி? முனைவர் அ. சற்குணன், தினமணி, 26 செப் 2010)
(இலக்கியப் பயன்பாடு)
- கடைக்கா றலைக்கண்ண தாகி (நாலடி,368)
- கடைக்கால் . . .செங்கோல் செலீஇயினான் (பழ. 239)
- கடைக்கால் எடுத்துக் கல்லை அடுக்கி
- இடையிடைச் சேற்றை இட்டுப் பரப்பி (கொத்தனார், இளைஞர் இலக்கியம், பாரதிதாசன்)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---கடைக்கால்--- DDSA பதிப்பு + வின்சுலோ +