சீர்பாதம்
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
சீர்பாதம்(பெ)
- கடவுள், குரு முதலானோர் திருவடி
- கோயிலில் சுவாமிக்குரிய வாகனத்தை (பல்லக்கை) தாங்கிச் செல்பவர்; சீபாதந்தாங்கி
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- மதுரை வைகையாறு தேனூர் மண்டபத்தில், மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் கொடுத்து புறப்பட்ட அழகரை, சீர்பாதங்கள்(பல்லக்கில் சுவாமியை தூக்கிச் செல்பவர்கள்) அவசரப்பட்டு தூக்கி கவிழ்த்தனர். பல்லக்கில் அம்பி பட்டர் நின்றுகொண்டிருக்க, சீர்பாதங்கள் அவசரப்பட்டு ஒருபுறம் மட்டும் தூக்க, கருட வாகனத்துடன் அழகரும், பட்டரும் கவிழ்ந்தனர். அவசரப்பட்டு தூக்கிய சீர்பாதங்களிடம் கோபப்பட்ட பட்டர்கள், "இனி அவசரப்பட்டு தூக்கக் கூடாது என தெரிவித்தனர். (தினமலர், 19 ஏப் 2011)
(இலக்கியப் பயன்பாடு)
- குரு சீர்பாத சேவையும் (திருப்பு. 94).
(இலக்கணப் பயன்பாடு)
- சீபாதம் - சீபாதந்தாங்கி - நிமிந்தர் - சீபாதக்கூலி - சீபாதாங்காதனம் - திருவடி - #
ஆதாரங்கள் ---சீர்பாதம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +