சீர்
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
- , (பெ)- சீர்
- 1) செல்வம் (பி.நி.).
- 2) அழகு
- 3) நன்மை(தி.நி)
- 4) பெருமை - சீர்கெழு கொடியும் (புறநானூறு 1)
- 5) புகழ் - ஆனாச்சீர்க் கூடலுள் (கலித்தொகை 30)
- 6) இயல்பு - கழற்பெய் குடத்தின் சீரே (நன்னூல் பொது. 32)
- 7) சமம் - உலகு சீர்பெற விருந்தான் (கம்பராமாயணம் அகத். 40)
- 8) கனம் - விழுச்சீ ரையவி (பதிற்றுப்பத்து 22)
- 9) ஓசை - (அ.நி.)
- 10) செய்யுளின் ஓருறுப்பு - யாத்தசீரே யடியாப்பெனா (தொல்காப்பியம். பொ. 313)
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம், (பெ)
- 1) wealth
- 2) beauty
- 3) goodness
- 4) superiority
- 5) fame
- 6) nature
- 7) evenness
- 8) heaviness
- 9)sound
- 10) metrical foot - thamizh
- 11)tidy
விளக்கம்
:*(இலக்கணப் பயன்பாடு)
- சீர்என்பது பல்பொருள் ஒரு மொழியாகும்.
- சீர் - சீர்மை
- சீருடை, சீரகம், சீர்வரிசை
- சீரழி, சீர்கெடு, சீர்திருத்து
- மாச்சீர், விளச்சீர், காய்ச்சீர், கனிச்சீர்
தகவலாதாரம்} ---> சென்னைப் பல்கலைக் கழக இணையப் பேரகரமுதலி - சீர்