திருவடி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

திருவடி:
என்றால் திருமாலின் வாகனமான கருடன்--பெரிய திருவடி
திருவடி:
என்றால் திருமாலின் சேவகனான அனுமான்--சிறிய திருவடி
திருவடி:
பட்டம் உள்ள ஒரு திருவிதாங்கூர் அரசர் கார்த்திகைத் திருநாள் இராம வர்மன்--(1758 - 1798)
(கோப்பு)
 • திரு + அடி = திருவடி--பொருள் 1 முதல் 6 வரை
 • திரு + வடு = திருவடி--பொருள் 7 க்கு
 • prob.திருகு- = பொருள் 8 க்கு

பொருள்[தொகு]

 • திருவடி, பெயர்ச்சொல்.
 1. சீபாதம்
  (எ. கா.) திருவடி யென் றலைமேல் வைத்தார் (தேவா. 415, 1).
 2. சுவாமி
  (எ. கா.) திருவடிதன் னாமம் (திவ். இயற். நான்மு. 68).
 3. முனிவர்
  (எ. கா.) படாரத் திருவடி ((T. A. S.) ii, 139)
 4. அனுமான் * [திருமாலின் பாதஸ்தானமாயுள்ளவர்]
  (எ. கா.) உவமை யாலுந் திருவடியென்னுந் தன்மை யாவர்க்குந்தெரிய நின்றான் (கம்பரா. மகேந். 26).
 5. கருடன் * [திருமாலின் பாதஸ்தானமாயுள்ளவர்]]
  (எ. கா.) திருவடியொருவனுமாயிருந்த தோ (ஈடு. 1, 4, 6)
 6. திருவிதாங்கூர் அரசர்
  (எ. கா.) இராமன் கோதைவர்மத் திருவடி ((T. A. S.) i, 290).
 7. நோவில்லாத புண் (J.)
 8. கோமாளி விகடம் (J.)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

 • ஆங்கிலம்
 1. sacred feet, as of a deity, saint, etc.,
 2. the deity
 3. ascetic, saint, sage
 4. hanumān regarded as the feet of Viṣṇu
 5. garuḍa, regarded as the feet of Viṣṇu
 6. title of the kings of Travancore
 7. indolent sore
 8. tricks of a buffoon

பயன்பாடு[தொகு]

 • இங்கு உன்னவதாரம் ஒவ்வொன்றிலும் தான் உன் தாரம் ஆனேன்
உன் திருவடி பட்டால் திருமணமாகும் ஏந்திழை ஏங்குகிறேனே! (திரைப்பாடல்)

இலக்கியமை[தொகு]

 • கானகத்தே நடக் குந் திருவடி (திருவாச. 40, 8)
 • வான வருந் தானவரும் பொன்னார் திருவடி தாமறியார் (திரு வாச. 13, 17).
 • பாதுகை திருவடி தொடக்கி (விநாயகபு. 80, 278).

விளக்கம்[தொகு]
( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +


சீபாதம் - சீர்பாதம் - அடி - பாதம் - பாதபூசை - # - #
"https://ta.wiktionary.org/w/index.php?title=திருவடி&oldid=1969077" இலிருந்து மீள்விக்கப்பட்டது