சுனை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

சுனை (பெ)

சுனை:
மலை ஊற்று
சுனை:
150px
ஒலிப்பு
பொருள்
  1. மலை ஊற்று
  2. நீர்நிலை
  3. நீர்நிலையும் நிழல்மரமுமுள்ள பசும் புல்தரை

மொழிபெயர்ப்புகள்[தொகு]

ஆங்கிலம்

  1. spring or a pool on a mountain
  2. tank, reservoir
  3. pasture-ground with tanks and shady trees
விளக்கம்
  • குளிர்ந்த குகை அருகே ஊற்று நீர் தேங்கும் இரு சுனைகள். (தஞ்சை தரிசனம் 1, ஜெயமோகன்)
  • பசிக்கு உணவும், தாகத்துக்குச் சுனை நீரும், தங்கியிருக்க மலைக்குகையும் அவளுக்கு இருந்தன (பொன்னியின் செல்வன், கல்கி)
  • குற்றாலம் மலையில் மரப் பாலத்துக்குச் சமீபத்தில், அருவி விழுந்து விழுந்து ஒரு சிறு சுனை ஏற்பட்டிருக்கிறது (சுசீலா எம்.ஏ, கல்கி)

(இலக்கியப் பயன்பாடு)
1.பூவமன் றன்று சுனையுமன்று (கலித்தொகை, 55)

2.வான்கண் அற்றஅவன் மலையே வானத்து மீன்கண் அற்றஅவன் சுனையே ஆங்கு (புறநானூறு, கபிலர், 109)

3.தீநீர்ப் பெருங்குண்டு சுனைப்பூத்த குவளை (புறநானூறு, கபிலர், 116)

சொல் வளப்பகுதி


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) Nuvola apps bookcase.svg+ DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=சுனை&oldid=1187788" இருந்து மீள்விக்கப்பட்டது