சூனியம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

சூனியம்:
பூஜ்ஜியம்
சூனியம்:
மாரணவித்தை
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
 • புறமொழிச்சொல்---சமசுகிருதம்--शून्य--ஸூன்ய--வேர்ச்சொல்

பொருள்[தொகு]

 • சூனியம், பெயர்ச்சொல்.
 1. இன்மை
  (எ. கா.) யாவையுஞ் சூனியஞ் சத் தெதி ராகலின் (சி. போ. 7)..
 2. பூச்சியம்(கணிதம் )
 3. வறிதாயிருக்கை
  (எ. கா.) அவள் கழுத்துச் சூனியமாயிருக்கிறது
 4. பயனற்றது (W.)
 5. மாயை (W.)
 6. மாரணவித்தை
  (எ. கா.) சூனியங்கொள் செயலார் (திருப்பு. 787)
 7. சூனியப்பொருள்
 8. அசுசி (W.)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

 1. non-existence, vacuity, vacuum, non-entity, nothingness
 2. cipher..(கணிதம் )
 3. bareness
 4. that which is useless, unproductive or unpropitious
 5. that which is unreal, unsubstantial or illusory
 6. witchcraft causing evil, sorcery, black art
 7. articles of witchcraft
 8. ceremonial defilement

விளக்கம்[தொகு]( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=சூனியம்&oldid=1912446" இருந்து மீள்விக்கப்பட்டது