செஞ்சோற்றுக்கடன்
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
செஞ்சோற்றுக்கடன் (பெ)
- உணவு, உடை முதலியன கொடுத்துத் தம்மை வளர்த்து ஆளாக்கிய ஒருவருக்குத் தம் உயிரையும் கொடுத்து நன்றிக் கடனாற்றுதல்
- (நடக்கின்ற போரில் தமக்கு உணவளித்துக் காத்த மன்னனின் பக்கம் நயன்மை இல்லையெனத் தெரிந்திருந்த போதிலும்) மன்னனுக்காகப் போரிட்டு உயிர்ஈகம் செய்தல்.
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- அவருக்கு எதிராக நின்று போர் புரிவதில் மனப்பூர்வமான ஈடுபாடு நம்மைப் போன்ற ஜாதி மறவர்களுக்கு இருக்க முடியாது. வேண்டுமானால் உண்ட உணவுக்குச் செஞ்சோற்றுக் கடன் கழிக்கலாம் (ராணி மங்கம்மாள், நா. பார்த்தசாரதி)
- நானும் கவசகுண்டலம் இல்லாத கர்ணனாக என்னை பாவித்துக் கொண்டு, செஞ்சோற்றுக் கடன் தீர்க்க முற்பட்டேன்!! (வெகுண்டு, பாலா)
- செஞ்சோற்றுக் கடன் தீர்க்கச் சேராத இடம் சேர்ந்து
- வஞ்சத்தில் வீழ்ந்தாயடா, கர்ணா!
- வஞ்சகன் கண்ணனடா!! (பாடல்)
(இலக்கியப் பயன்பாடு)
- செஞ்சோற்றுக்கட னீங்கி (சீவக. 2240).
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---செஞ்சோற்றுக்கடன்--- DDSA பதிப்பு + வின்சுலோ +