உள்ளடக்கத்துக்குச் செல்

துங்கம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

துங்கம்(பெ)

  1. உயர்ச்சி
    துங்கமுகமாளிகை (திவ். பெரியதி. 3, 4, 6).
  2. நுனி
  3. பெருமை
  4. அகலம்
  5. மலை
  6. துங்கமந்தோச்சம்
  7. பரிசுத்தம்
  8. வெற்றி
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. height, elevation
  2. tip, edge
  3. dignity, exaltedness, excellence
  4. breadth
  5. mountain
  6. (Astron.)apogee of the moon
  7. cleanliness, purity
  8. victory
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • தங்க மதலைகள் ஈன்றமு தூட்டித்
தழுவிய திந்நாடே - மக்கள்
துங்கம் உயர்ந்து வளர்கெனக் கோயில்கள்
சூழ்ந்ததும் இந்நாடே - (பாரதியார்)
  • துங்கக் கரிமுகத்துத் தூமணியே - (நல்வழி)
பெருமை மிகுந்த யானை முகத்தைக் கொண்ட விநாயகக் கடவுளே! என்பது இதன் பொருள்.

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---துங்கம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

துங்கமந்தோச்சம் - உயர்ச்சி - பெருமை - தங்கம்

"https://ta.wiktionary.org/w/index.php?title=துங்கம்&oldid=1015838" இலிருந்து மீள்விக்கப்பட்டது