நத்து

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

நத்து(பெ)

  1. விருப்பம்
  2. மூக்கணி
  3. சங்கு
  4. கூகை வகை
  5. ஈயமணல்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. desire
  2. a kind of nose ornament
  3. chank
  4. a kind of owl
  5. sand containing lead
விளக்கம்
பயன்பாடு
  • நத்தாசை காட்டு - show a desire
  • திருமணம் அன்று எடுத்துக்கொண்ட, பெரிதுபடுத்தப்பட்ட, சட்டம் கட்டி சுவரில் மாட்டப்பட்ட, கறுப்பு - வெள்ளைப் புகைப் படத்தில் இருந்த அல்கா பாயியைச் சில நாட் கள் நெடு நேரம் பார்த்துக்கொண்டு இருப்பார் புட்டா நாத்ரே. மூக்கில் முத்துக்கள் கோத்த நத்து, பெரிய தோடுகள் செவியில், வட்டப் பொட்டு, மராத்திப் பெண்களுக்கேயான தார் பாய்ச்சிய புடவைக் கட்டு. (ஆத்மா, நாஞ்சில் நாடன் )

(இலக்கியப் பயன்பாடு)

  • நத்தையணி நாசிவள்ளி (தனிப்பா. ii, 234, 557
  • நான் நத்தாக (திருப்புகழ்த். 84)

(இலக்கணப் பயன்பாடு)


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

நத்து(வி)

  1. விரும்பு, ஏங்கு
  2. ஆவலோடு பின்செல்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. desire, long for, hanker after, love
  2. pursue with desire
விளக்கம்
பயன்பாடு
  • நத்தி வரும் மச்சானுக்கு முத்துச்சரம் நாணாவேன் (திரைப்பாடல்)
  • நடுவரசை நத்திப் பிழைக்கும் பிழைப்புத்தான் இன்றைய இந்தியாவில் என்றென்றும் மாநில அரசிற்கு வாய்த்திருக்கிறது. எனவே எந்த மாநில அரசுக் கட்சியும் நடுவரசை எதிர்த்துக் கொள்ளாது. (வளவு)

(இலக்கியப் பயன்பாடு)

  • நாரியார் தாமறிவர் நாமவரை நத்தாமை (தமிழ்நா. 74).

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---நத்து--- DDSA பதிப்பு + வின்சுலோ +

 :விருப்பம் - விரும்பு - ஏங்கு - ஆவல் - மூக்கணி - பேசரி

"https://ta.wiktionary.org/w/index.php?title=நத்து&oldid=1979997" இலிருந்து மீள்விக்கப்பட்டது