உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர் பேச்சு:Shrikarsan

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
தலைப்பைச் சேர்
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

உங்கள் பதிவுகளை இங்கு காண்பதற்கு மகிழ்ச்சியாக இருக்கிறது.பிழைகள் களையத் தொடங்கியமைக்கு மிக்க நன்றி. ஒரு வேண்டுகோள். வழிமாற்று இல்லாமலே பகுப்பு மாற்றம் செய்யலாம். வழிமாற்றுடன் செய்வதும் பிழை என்று கருதுகிறேன். எனவே, இனி கலந்து ஆலோசனை செய்து, பதிவுகளைச் செய்யக் கோருகிறேன். ஆலோசனைக்காகப் பதிவுகளை தற்காலிகமாக நிறுத்தலாமா?.--தகவலுழவன் (பேச்சு) 16:51, 25 சூன் 2014 (UTC)Reply

//வழிமாற்று இல்லாமலே பகுப்பு மாற்றம் செய்யலாம்.// என்பது என் சிற்றறிவிற்குச் சரியாக விளங்கவில்லை. சற்று விளக்குவீர்களா?--ஸ்ரீகர்சன் (பேச்சு) 16:55, 25 சூன் 2014 (UTC)Reply
@தகவலுழவன் அவர்களே! பகுப்பு:ஆங்கிலம்-hypen நிறுத்தற் குறியுள்ளவை வழிமாற்றை நீக்கினேன். அதனையே நீங்கள் கூறுகின்றீர்கள் என நினைக்கின்றேன். சரிதானா:)--ஸ்ரீகர்சன் (பேச்சு) 16:58, 25 சூன் 2014 (UTC)Reply
ஒரு நிமிடத்திற்கு 4அல்லது 5பதிவுகளுக்கு மேல் அண்மையபக்கங்களில் செய்வதாக இருப்பின், நீங்கள் தானியங்கிக்கு விண்ணப்பிக்கவும். நானும் இதுபோல செயற்பட்ட போது, வழிகாட்டப்பட்டேன். இல்லையெனில் மேல்விக்கியில் உங்கள் பதிவுகளை எரிதமாக க் கருதுவர். இங்கு ஏராளமான பணிகள் உள்ளன. உரையாடி செயற்படுவதற்கான களம் இல்லாமையால், தனித்து நிற்கிறேன். எனவே, தற்போதைய பதிவு நேரத்தை மாற்றியமைக்கவும். முந்தைய உரையாடற்பக்கம் தேவைப்படின் தேடி எடுத்துத் தருகிறேன். 2,3 ஆண்டுகள் ஆகிய படியால், தேடித்தான் எடுத்துத்தரவேண்டும். நீங்கள் விரும்பினால், ஒவ்வொன்றாக கூற விரும்புகிறேன்.--தகவலுழவன் (பேச்சு) 17:05, 25 சூன் 2014 (UTC)Reply
நீங்கள் கூறியதைப் புரிந்துகொண்டேன். தானியங்கிக்கு விண்ணப்பிக்கின்றேன். //இங்கு ஏராளமான பணிகள் உள்ளன. உரையாடி செயற்படுவதற்கான களம் இல்லாமையால், தனித்து நிற்கிறேன்.// நிச்சயம் உங்களுக்குத் தோள்கொடுக்கக் காத்திருக்கின்றேன். தற்போது மேற்கொள்ளும் தொகுப்புக்களை இடைநடுவில் கைவிடாமல் அவற்றை முடித்துவிட்டுத் தானியங்கிக்கு விண்ணப்பிக்கவா?--ஸ்ரீகர்சன் (பேச்சு) 17:11, 25 சூன் 2014 (UTC)Reply

களைகள்

[தொகு]

தவறான சொல் உருவாக்கம் களைய உதவுக.

[தொகு]

a - battery , a-battery, a.c.-d.c. receiver இதிலுள்ள hyphen-ஐ காணவும். இதில் எது தவறு. எதுசரி. இதுபோல பலவித எழுத்துப்பிழைகள் சுந்தர் தானியங்கி, மற்றும் தமிழ் தானியங்கிகள் செய்துள்ளன. அதனை சீர் செய்யவே இப்பகுப்பு உருவாக்கப்பட்டது. பகுப்பு மாற்றம் செய்யும் போதே, இதனையும் களைந்து விட எண்ணுகிறேன். இல்லையெனில், அதற்கு ஒரு முறை பதிவுகளை ஓட விட வேண்டும். இவ்விதம் அனைத்து தேவைகளையும் உள்ளடக்கி பதிவு மாற்றத்தை செய்ய வேண்டும் என்று இரவி வழிகாட்டியுள்ளார். உங்களது எண்ணமென்ன? உங்களின் பதிவுகள் எவ்வித குறைபாடும் இல்லாமல் இருக்கவே இதனைக் கூறிக் கொள்ள விரும்புகிறேன். எனவே, தற்காலிகமாக இப்பகுப்பு மாற்றத்தை நிறுத்தக் கோருகிறேன். --தகவலுழவன் (பேச்சு) 17:14, 25 சூன் 2014 (UTC)Reply

பகுப்பு மாற்றம் செய்யும் போதே, கட்டுரைகளின் பெயரை மாற்ற முடியுமா என எனக்குத்தெரியவில்லை. அநேகமாக இவ்விதம் அனைத்து தேவைகளையும் உள்ளடக்கி பதிவு மாற்றத்தை செய்வதே சிறந்தது என நானும் நினைக்கின்றேன். hyphen பற்றிய சரியான கொள்கைகளை உருவாக்க வேண்டும் என நினைக்கின்றேன். இன்னும் சற்று நேரத்தில் தற்காலிகமாக இப்பகுப்பு மாற்றத்தை நிறுத்திக் கொள்கின்றேன்.--ஸ்ரீகர்சன் (பேச்சு) 17:26, 25 சூன் 2014 (UTC)Reply
நன்றி. உங்களின் திறனை விக்கிப்பீடியாவில் கண்டு மகிழ்ந்தேன். துடுப்பாட்ட வலைவாசலில் ஈடுபாடு கொண்டு இருப்பீர்கள் என்பதால், உங்களிடம் ஒரு வேண்டுகோளை முன் வைக்க தயங்கி நின்றேன். உங்களக்கு javascript ஆளுமை இருப்பதால், விக்சனிரிக்கென்று ஒரு சில தனித்தேவைகளை, விக்சனரி தொகுப்பானில் அமைக்க எண்ணுகிறேன். இது விக்சனரி திட்டம் முழுமைக்கும் பயன்படும் படி எனது அனுபவங்களை குவியப்படுத்தி உள்ளேன். உங்களுக்கு நேரம் இருக்கும் போது கூறுங்கள். விக்சனரித் தேவையைக் கூறுகிறேன். ஆவலுடன்..--தகவலுழவன் (பேச்சு) 17:33, 25 சூன் 2014 (UTC)Reply
javascript ஆளுமை என்றெல்லாம் சொல்ல முடியாது. உண்மையைச் சொல்லப் போனால் நான் முறையாக javascript கற்கக்கூட இல்லை. ஆனால் விக்கிப்பீடியாவிற்கு வந்தபின்னர் தான் javascript மேல் ஆர்வம் ஏற்பட்டது. முதலில் பிறமொழியிலிருந்த சாசிகளை மொழிபெயர்த்தேன். பின்னர் இரு சாசிகளிடை ஒற்றுமைகண்டு புதிய சாசிகள் வடிவமைத்தேன். தற்போது புதிய சாசிகள் அமைக்கும் அளவு முன்னேறியுள்ளேன்! அனைத்தும் அனுபவத்தின் விளைவே! எனக்கு நேரம் இருக்கும் வரை நீங்கள் காத்திருக்கத் தேவையில்லை, உதவி தேவையெனில் உடனே கேளுங்கள். முடிந்தவரை வேண்டுகோளை நிறைவேற்ற முனைவேன். அது எனது நுட்ப அறிவை வளர்க்கவும் விக்சனரிக்குப் பயன்பாடாகவும் இருக்கும்.--ஸ்ரீகர்சன் (பேச்சு) 07:37, 26 சூன் 2014 (UTC)Reply
மகிழ்ச்சி. en:eye என்பதன் மொழிபெயர்ப்புப் பெட்டியைக் காணவும். அதிலுள்ளதைப் போல, சொல் ஒன்றினை இணைக்கவும், நீக்கவும் அதிலுள்ள வசதியை இங்கு கண் அமைக்க வேண்டும். ஆங்கில விக்சனரியின் இடபக்கமுள்ள visibility வசதியை இங்கும் அமைக்க வேண்டும். ஆவலுடன்..--தகவலுழவன் (பேச்சு) 09:28, 26 சூன் 2014 (UTC)Reply
தற்போது மாத இறுதி ஆகையால் இணைய வேகம் சற்று மந்தமாக உள்ளது. அடுத்த மாதம் தொடங்கட்டும் விரைவில் உருவாக்க முனைகின்றேன்.--ஸ்ரீகர்சன் (பேச்சு) 02:24, 28 சூன் 2014 (UTC)Reply
சரிங்க. ஆவலுடன் காத்திருப்பேன். ஏனெனில், 2,3 வருடங்களாக இவ்வசதியைப் பற்றி எண்ணி வந்தேன்.--தகவலுழவன் (பேச்சு) 02:26, 28 சூன் 2014 (UTC)Reply

சுந்தர் தானியங்கியின் உசாத்துணை என்ற பகுதி

[தொகு]

ஏறத்தாழ ஒரு இலட்சம் பக்கங்கள் வெளியிணிப்பு இன்றி முறிந்து காணப்படுகின்றன. அதற்கு காரணம், தமிழ் இணையக்கல்விகழகத்தாரின் இணையபக்க மாற்றத்தால், அவற்றை களைய உங்கள் ஆலோசனை தருக. இதுவே பெரும்மாற்றத்தை செய்ய வேண்டிய பகுதியாகும்.--தகவலுழவன் (பேச்சு) 17:18, 25 சூன் 2014 (UTC)Reply

  • சிறப்பு:Contributions/SundarBot ~116928அனைத்து பங்களிப்பும் இவ்விதமே மாற்றப்பட வேண்டும்
  • எனது அனுபவத்தில் இந்த உசாத்துணை பகுதியை வார்ப்புரு:ஆங்கிலம்-ஆதாரங்கள் என மாற்றி அமைத்துள்ளேன். இது பிற ஆங்கில சொற்களில் உள்ளன. இதன் பலன் யாதெனில், இது உசாத்துணை போல தனி பக்க பதிவாக அல்லாமல் , வார்ப்புருவாக இருப்பதால் அனைத்து பக்கங்களிலு எளிமையான மாற்றத்தை, ஒரே மாதிரித் தோன்றச் செய்யுமெனக் கருதுகிறேன். உங்களின் எண்ணமென்ன?--தகவலுழவன் (பேச்சு) 17:28, 25 சூன் 2014 (UTC)Reply

திட்டம்

[தொகு]
  • இங்குள்ள hyphen ஆங்கிலச்சொற்கள் அனைத்தையும் ஆங்கில விக்சனரியில் பார்த்தேன். அவற்றில் பல அங்கு இல்லை. நாம் என்ன செய்யலாம்.? இங்குள்ளவை நீலமாகவும், சிவப்பாக உள்ளவை அங்கு இல்லாதவையும் ஆகும்.--தகவலுழவன் (பேச்சு) 03:46, 26 சூன் 2014 (UTC)Reply

  • இதுவரை நிகழ்ந்த கலந்துரையாடல்களின் விளைவாக அம்மா என்ற சொல்லைத் தமிழ் சொற்களுக்கு அடிப்படையாகவும், நேற்று உங்களுடன் கலந்த பிறகு, பிற உரையாடல்களையும் மனதில் கொண்டு, பல்வேறு தானியங்கி தேவைகளையும் கணக்கில் கொண்டு, சில மணிநேர ஆய்வுக்குப் பிறகு, bloody-sweat சொல்லை வடிவமைத்தேன். இதனால் சிறப்பானதொரு மருத்துவபடத்தை பொதுவகத்திலும் ஏற்படுத்தும் நிலை ஏற்பட்டது. அம்மா, bloody-sweat சொற்களைக் குறித்து அதன் பேச்சுப் பக்கத்தில் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். ஆவலுடன்..--தகவலுழவன் (பேச்சு) 05:46, 26 சூன் 2014 (UTC)Reply

விக்சனரி:தானியங்கிகள்

[தொகு]

இங்கு விண்ணப்பிக்கவும். அதுவரை 1நிமிடத்திற்கு 5,6 பதிவுகள் மட்டும் செய்யவும். இது அனைத்து விக்சனரியிலும் பின்பற்றப்படும் பொது விதி ஆகும்.--தகவலுழவன் (பேச்சு) 02:28, 3 சூலை 2014 (UTC)Reply

வேண்டுகோள்:பிறரை போல ஒப்பமிடுக

[தொகு]
  1. staying-power என்ற சொல்லை மாற்றி அமைத்துள்ளேன். ஏனெனில், நீங்கள் செய்யும் பகுப்பு மாற்றத்தோடு, இதிலுள்ள வார்ப்புருக்கள் மேலும் நமது பதிவுகளை எளிமையாக்குகின்றன. இதனால் உள்ளே இருக்கும் விக்கிநிரல்கள் பெருமளவு தவிர்க்கப்படுகின்றன. இம்மாற்றங்களையும் செய்யலாமா?
  2. மீடியாவிக்கி பேச்சு:Gadget-mySandbox.js
  3. பேச்சு:அம்மா
  4. ஆங்கில விக்சனரியின் வசதிகள் குறித்த, எனது முந்தைய வேண்டுகோளை தமிழ் விக்சனரிக்காக செயற்படுத்தவும்.ஆவலுடன்..--தகவலுழவன் (பேச்சு) 02:41, 3 சூலை 2014 (UTC)Reply

தொகுப்பானின் மேம்பாட்டிற்கு உதவிடுக

[தொகு]
குறிப்பிட்ட சொற்களுக்கு முன்னும் பின்னும் {{ இட வேண்டுமா அல்லது அனைத்துச் சொற்களின் முன்னும் பின்னுமா?--ஸ்ரீகர்சன் (பேச்சு) 09:44, 10 ஆகத்து 2014 (UTC)Reply
ஆம். தொகுப்பானில் கொடுக்கப்படும் அனைத்துச் சொற்களுக்கும் முன்னும் பின்னும் அக்கணக்குறியீடுகள் இடணும். இதுபோல சொற்சுருக்கங்கள் ஏறத்தாழ1500 சென்னைப் பேரகரமுதலியில் இருக்கின்றன. மேற்கண்ட பகுப்பில் ஒவ்வொன்றாக தேடி ஏறத்தாழ500 ஏற்படுத்தியுள்ளேன். இன்னும் ஏற்படுத்துவேன். ஒவ்வொரு வார்ப்புருவும், அதற்குரிய அச்சொற்சுருக்கம் உள்ள பகுப்பினையும், சொற்சுருக்க விரிவாக்கத்தினையும் காண்பிக்கும். எதிர்காலத்தில், அவற்றில் ஏதேனும் மாற்றம் ஏற்படுத்தினால், அவை உள்ள அனைத்துச் சொற்களிலும் காணலாம். எ. கா வார்ப்புரு:கம்பரா. இதுவரை சென்னைப் பேரகரமுதலியில் இருந்து ஏறத்தாழ9000சொற்கள் ஏற்படுத்தியுள்ளேன். இன்னும் ஏறத்தாழ 50,000சொற்கள் பதிவேற்ற உள்ளேன். அப்பொழுது, அப்பேரகரமுதலிக்கு, இன்னும் 1000வார்ப்புருக்கள் விளக்கப்பட வேண்டும். அதற்கான தரவுகளை தேடிபிடித்துள்ளேன். எனவே,இக்குறியீடுகள் இடுவது மிக முக்கியம். அப்பொழுது பின்வரும் குறிப்புகளை கையாளுங்கள்.
  1. அப்பேரகரமுதலியில் ஆங்கில, தமிழ் சொற்சுருக்கங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதில் தமிழ்ச்சொற்சுருக்கங்கள் அதிகம்.
  2. ஒவ்வொரு தமிழ்ச்சொல்லும், வளைவு (அடைப்புக்குறியுடன் தான் தொடங்கும். ஆனால், ஆங்கில சொற்சுருக்கங்கள் வளைவு அடைப்புக்குறிகள் இல்லாமலும் தொடங்கும்.
  3. ஒவ்வொரு தமிழ், ஆங்கில சொற்சுருக்கங்கள் புள்ளியுடன் தான் முடியும்.
  4. தமிழ்ச்சொற்சுருக்கத்தின் முதலாம் புள்ளிக்கு அடுத்து, பெரும்பாலும் }} குறியீடுகள் அமைந்து முடிவுறும்.
  5. இரண்டாம் புள்ளிக்கு அடுத்தும், 3ஆம்புள்ளிக்கு அடுத்தும் }}என்ற குறியீடுகள் அமைந்து முடிவுறும். காண்க:பயனர்:தகவலுழவன்/சொற்பதிவுச் சோதனை1
மற்றவை உங்கள் கருத்துகண்டு.--தகவலுழவன் (பேச்சு) 13:59, 10 ஆகத்து 2014 (UTC)Reply
Yஆயிற்று நீங்கள் கேட்டபடி கருவியை உருவாக்கிவிட்டேன். இதனைச் செயற்படுத்த உங்கள் common.js இல்
importScript('பயனர்:Shrikarsan/add template bracket.js');
என்ற வரியை இணையுங்கள். வார்ப்புரு என்ற tab இல் என்ற ஆழி காணப்படும். அவ்வளியை முதல் முறை சொடுக்கும் போது தொகுப்பானில் ஏற்கனவே உள்ள #, {{, }} ஆகிய குறியீடுகளை நீக்கும். இரணடாவது முறை சொடுக்கும் போது #, {{, }} ஆகிய குறியீடுகள் அனைத்துச் சொற்களிலும் சேர்க்கப்படும். பயனர்:தகவலுழவன்/சொற்பதிவுச் சோதனை1 இல் சோதித்துப் பார்த்தேன் <!--Words with two dots--> <!--words with three dots--> <!--words with four dots--> <!--remaining--> என்பவற்றுக்கும் {{ குறியீடுகள் சேர்க்கப்படுகின்றன. இதனைத் தடுப்பது எவ்வாறு எனத் தெரியவில்லை. மற்றும் படி கருவி சரியாக எனக்கு வேலை செய்கின்றது. நீங்களும் பயன்படுத்திப் பாருங்கள்.--ஸ்ரீகர்சன் (பேச்சு) 07:50, 12 ஆகத்து 2014 (UTC)Reply

மேம்பாடு-1

[தொகு]
நீங்கள் வழிகாட்டியபடி செய்து பார்த்தேன். முன்னும், பின்னும் குறியீடுகைள சேர்க்கிறது. பின்வரும் மாற்றங்களை செய்தால் இன்னும் நன்றாக இருக்கும் என்று எண்ணுகிறேன்.
  1. தொகுப்பானில் வரும் வார்ப்புரு என்பதற்கு மாற்றாக விக்சனரி3 எனசெய்தால், இதற்கு முன் 2 செய்யப்பட்டுள்ளது. இது 3வது ஆழி என ஒரு கோர்வை ஏற்படும்.
  2. புள்ளிக்கு அடுத்து, ஒரு வெற்று இடைவெளி இல்லாமல் இருந்தால், ஒரு வெற்று இடைவெளி (whitespace) ஏற்படுத்த வகை செய்யுங்கள். எ.கா. {{திருச்செந்தூர்.பிள்ளை.}}-->{{திருச்செந்தூர். பிள்ளை.}}
  3. சில சொற்களில் வெற்று இடைவெளி இருக்கும். ஆனால், புள்ளி இருக்காது. அங்கு எம்மாற்றமும் ஏற்படுத்தக்கூடாது. அங்குள்ள இடைவெளியை நீக்கக் கூடாது, {{திருவாய் நூற்.}}--->{{திருவாய்நூற்.}}
  4. ஆங்கிலச்சொற்களில் புள்ளிக்கு அடுத்து இடைவெளி இல்லாமலும் சொற்சுருக்கம் உள்ளது. {{N.A.}}(வடஆற்காடு மாவட்டம்) எனவே, அச்சுருக்கங்களில் புள்ளி அடிப்படையில் எம்மாற்றமும் ஏற்படுத்தக்கூடாது. ஆனால், முன்பு சொன்னபடி தமிழ் சொற்களுக்கு மட்டும், நடுவில்வரும் புள்ளிக்கு அடுத்து ஒரு இடைவெளி ஏற்படுத்தி விட்டு }} குறியீடுகள் இடணும். தமிழ் சொற்சுருக்கங்களுக்கு இறுதியில் புள்ளிக்கு அடுத்து இடைவெளி தேவையில்லை. அப்படியே வந்தாலும் அது பிழை காட்டுவதில்லை.{{திருச்செந்தூர். பிள்ளை. }}
ஆவலுடன்..--தகவலுழவன் (பேச்சு) 09:06, 12 ஆகத்து 2014 (UTC)Reply
Yஆயிற்று தகவலுழவன் அவர்களே நீங்கள் கேட்டபடி மாற்றங்களைச் செய்துவிட்டேன். எனக்குச் சரியாக வேலை செய்கின்றது. தற்போது மீண்டும் பயன்படுத்திச் சரி பாருங்கள். அடுத்து என்ன செய்ய வேண்டும்! ஆவலுடன்:)--ஸ்ரீகர்சன் (பேச்சு) 11:50, 13 ஆகத்து 2014 (UTC)Reply
'அவர்களே' என்ற சொல்லை இனி தயவுசெய்து பயன்படுத்த வேண்டாமென்று கேட்டுக் கொள்கிறேன். அசத்தி விட்டீர்கள், கர்சன். இதன் மூலம் வார்ப்புருக்கள் குறித்த மேலாண்மை எளிமையாகிறது. இந்த ஒழுங்கமைவு அமைவதற்கு, முன்பு ஒவ்வொரு சொல்லாக காண வேண்டியிருந்தது. இருப்பினும், பதிவேற்றம் நிகழும் போது, அவ்வப்போது சில தேவைகள் எழுகின்றன. இதோடு தொடர்புடையது என்பதால் கூறவிரும்புகிறேன். இப்பேரகரமுதலியில் புள்ளியை அடிப்படையாக வைத்து பலப்பல தட்டச்சு பிழைகள் அமைந்து இருக்கின்றன. அவற்றில் மிக அதிகமான தவறு என்னவென்றால், புள்ளி வர வேண்டிய இடத்தில் , (உறுப்பிசைக்குறி=comma) வருகிறது. (எ.கா) நாலடி,.
  1. எனவே, இதுபோல புள்ளிக்கு மாற்றாக , உறுப்பிசைக்குறி வரின் அதனையும் புள்ளியாக மாற்ற நிரல் மாற்றம் எழுதுக.
  2. சுருக்கமாகச் சொன்னால், புள்ளி மட்டுமே வரணும் வேறு குறியீடுகள் வரக்கூடாது. சில நேரங்களில் இந்த புள்ளிகூட இரண்டாக அமைந்து விடுகிறது.
  3. ஒன்றிற்கு மேற்பட்ட புள்ளிகள் வந்தாலும் நீக்க நிரல் எழுதுக. இத்தோடு இந்த சொற்சுருக்கங்களுக்கான நிரலாக்கம் முடிந்து விட்டது என்றே எண்ணுகிறேன்.

அடுத்த தேவையைக் குறிப்பிடுவதற்கு முன், ஒன்றை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். உங்கள் அன்றாட பணிகளுக்கே, முக்கியத்துவம் தாருங்கள். மீதமாகும் நேரத்தில் இந்நிரலாக்க மேம்பாட்டிற்கு உதவுங்கள் என கேட்டுக் கொள்கிறேன்.—முன்நிற்கும் கையொப்பமிடப்படாத கருத்து தகவலுழவன் (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனரால் பதிக்கப்பட்டது. .

தற்போது பாடசாலை விடுமுறையாகையால் ஒப்பீட்டளவில் அதிக நேரம் பங்களிக்க முடிகின்றது. தயவு செய்து "அவர்களே" என அழைக்க வேண்டாம் எனக் கூறாதீர்கள். எனக்கு இப்போது தான் 15 வயது. ஆயிரந்தான் இருந்தாலும் நீங்கள் வயதிலும் அனுபவத்திலும் அறிவிலும் என்னைவிட மூத்தவர் அல்லவா. உங்களுடன் பங்களிப்பது மகிழ்ச்சியாக உள்ளது. என்னால் முடிந்தளவு பங்களிப்பை விக்சனரிக்கும் வழங்கக் காத்திருக்கின்றேன்.--ஸ்ரீகர்சன் (பேச்சு) 13:46, 13 ஆகத்து 2014 (UTC)Reply
என்னை விட படிப்பிலும், வயதிலும் மூத்தவரிடம் நான் பழகிய போது, அவர்கள் பெயர் விட்டு, இங்கு விளித்தலை ஊக்குவித்தனர். (எ.கா) பேராசிரியர்: செல்வா, அவருக்கும் மூத்தவரான பவுல். அவர்கள் அளவு என்னால் செயற்பட விட்டாலும், ஓரளவு அவர்களின் நானும் பின்பற்றி, பிறரையும் பின்பற்ற வழிமுறைச் செய்வேன். இணையத்தமிழ் வளர்ப்பில் இருக்கும் நம் விக்கிக்குடும்பத்தில், அனைவரும் ஒருவரே. ஒருமுகமாக செயற்படுவதில், உங்களைப் போல எனக்கும் மகிழ்ச்சியே. உங்கள் விடுமுறையில் நீங்கள் உருவாக்கும் நிரல்கள், தமிழ் விக்சனரியின் திட்டங்களுக்கு மட்டும் உதவுவன அல்ல. விக்சனரி வரலாற்றில் ஒரு பதிவாகும். கரம் கொடுத்தமைக்கு மிக்க நன்றி.--தகவலுழவன் (பேச்சு) 15:58, 13 ஆகத்து 2014 (UTC)Reply
Yஆயிற்று தகவலுழவன் அவர்களே! உறுப்பிசைக்குறியை புள்ளியாக்க, தொடர்ந்து வரும் பல புள்ளிகளை ஒரு புள்ளியாக்க, அதனுடன் சேர்த்துத் தொடர்ந்து வரும் பல உறுப்பிசைக்குறிகளை ஒரு புள்ளியாக்க நிரலைச் சரிப்படுத்தி விட்டேன். எனக்குச் சரியாக வேலை செய்கின்றது. தற்போது மீண்டும் பயன்படுத்திச் சரி பாருங்கள். மேலும் மாற்றங்கள் அல்லது பிரச்சினைகள் இருப்பின் கூறுங்கள்.--ஸ்ரீகர்சன் (பேச்சு) 07:08, 14 ஆகத்து 2014 (UTC)Reply
வளைவு அடைப்புக்குறிகள் இல்லாத போது, எதிர்பார்த்தபடி செயற்படுகிறது. பிறகு, (நாலடி, 211). என்பதை உள்ளிட்டு செய்து பார்த்தேன். வளைவு அடைப்புக்குறிகள் இருப்பதால், இறுதியில் இரு புள்ளிகளோடு வார்ப்புருக்களாக மாறுகிறது. அவ்வாறு இல்லாமல், எப்பொழுதும், வளைவு அடைப்புகுறிகளை, எண்களை நீக்குவது போல, ஒரு புள்ளிக்குப் பிறகு }} குறியீடுகள் இட வழி செய்யுங்கள்.--தகவலுழவன் (பேச்சு) 11:37, 14 ஆகத்து 2014 (UTC)Reply
Yஆயிற்று தகவலுழவன் அவர்களே! இரு புள்ளிகளுக்கிடையிலோ அல்லது இரு உறுப்பிசைக்குறிகளுக்கிடையிலோ அல்லது புள்ளிக்கும் உறுப்பிசைக்குறிக்கும் இடையிலோ இடைவெளி காணப்படின் அவற்றை ஒரு புள்ளியாக மாற்றும் படி நிரலைச் சரிப்படுத்தி விட்டேன். எனக்குச் சரியாக வேலை செய்கின்றது. தற்போது மீண்டும் பயன்படுத்திச் சரி பாருங்கள்.--ஸ்ரீகர்சன் (பேச்சு) 06:05, 15 ஆகத்து 2014 (UTC)Reply
தகவலுழவன் அவர்களே! பல இடைவெளிகள் வந்தால் ஒரு இடைவெளியாக்கும் படி நிரலைச் சரிப்படுத்தியுள்ளேன் இவ்வசதி தேவையா அல்லது நீக்கிவிடவா. புள்ளியின் பின் பல இடைவெளிகள் இருப்பின் இது பயனுள்ளதாக இருக்கும் எனக் கருதுகின்றேன்.--ஸ்ரீகர்சன் (பேச்சு) 06:09, 15 ஆகத்து 2014 (UTC)Reply
//புள்ளியின் பின் பல இடைவெளிகள் இருப்பின் இது பயனுள்ளதாக இருக்கும் எனக் கருதுகின்றேன்.// அப்பயன்பற்றி கூறுங்கள். என்னால் புரிந்து கொள்ள இயலவில்லை. ஒரு சொற்சுருக்கத்தின் இறுதியில் வரும் முற்றுப்புள்ளியைக் கூறுகிறீர்களா? --தகவலுழவன் (பேச்சு) 08:13, 15 ஆகத்து 2014 (UTC)Reply
தகவலுழவன் அவர்களே! ஒருபுள்ளியின் பின்னர் ஒரு இடைவெளியே வரும் {{திருச்செந்தூர். பிள்ளை.}} தவறுதலாக இரண்டு இடைவெளிகள் வந்தால் {{திருச்செந்தூர். பிள்ளை.}} ஒரு இடைவெளியாக மாற்றும். இரண்டு இடைவெளிகள் இருப்பின் வார்ப்புரு தவறுதலாக உள்ளிடப்படாது. ஆனால் ஒரு ஒழுங்குமுறையைப் பேண இவ்வசதியை இணைத்தேன்.--ஸ்ரீகர்சன் (பேச்சு) 05:34, 16 ஆகத்து 2014 (UTC)Reply

// இரண்டு இடைவெளிகள் இருப்பின் வார்ப்புரு தவறுதலாக உள்ளிடப்படாது. // என்பது மகிழ்ச்சியான செய்தியே. நிரல் மாற்றம் எப்படி இருக்க வேண்டும் என்று நீங்கள் தான் முடிவு எடுக்க வேண்டும். எனவே, அதுபற்றிய எனது எண்ணம் ஒன்றுமில்லை. --தகவலுழவன் (பேச்சு) 07:32, 16 ஆகத்து 2014 (UTC)Reply

தகவலுழவன் அவர்களே! நன்றி இக்கருவிக்கான வேலை முடிந்துவிட்டது என நினைக்கின்றேன். அடுத்த கருவியை மேம்படுத்திச் சரிப்படுத்தும் பணியில் இணைகின்றேன். இக்கருவியில் மேலும் மாற்றங்கள் அல்லது பிரச்சினைகள் இருப்பின் கூறுங்கள்.--ஸ்ரீகர்சன் (பேச்சு) 04:22, 17 ஆகத்து 2014 (UTC)Reply
சரி. அடுத்து தரவுமாற்றியில் அக்காற்புள்ளிக்கான நிரலாக்கத்தை காண மிக மிக ஆவலுடன் காத்திருக்கிறேன்.--தகவலுழவன் (பேச்சு) 07:05, 17 ஆகத்து 2014 (UTC)Reply

தரவு மாற்றி

[தொகு]

ஏறத்தாழ 3, 000 தமிழ்ச் சொற்களை, ஒவ்வொன்றாக பதிவேற்றிய அனுபவத்தில் கீழ்கண்டவற்றை உணருகிறேன். தரவுகளில் பலவற்றை, விக்சனரிக்கு ஏற்ப மாற்ற வேண்டியுள்ளது. அதற்கு ஒரு ஆழி செய்தால் நன்றாக இருக்கும். அந்த புதிய ஆழியானது, பல சொற்களை ஒரேநேரத்தில் தேடி, அவற்றிற்கு ஈடாக தந்துள்ள தரவை மாற்ற வல்லதாக இருக்க வேண்டும். (Multiple Find&Replace button)எடுத்துக்காட்டாக, சிலவற்றைக்கூற விரும்புகிறேன். ஏனெனில், பெரிய பட்டியலே இடலாம். அவை அனைத்திற்குமான ஒரு எடுத்துக்காட்டாக கீழ்வரும் தரவை தருகிறேன். பதிவேறும் சொல் - அதன் ஆங்கில விளக்கம் - அதன் தமிழ் விளக்கம் என்றே தமிழ்ப்பேரகரமுதலியின் தரவுக்கட்டகம் உள்ளது என்பதை ஆழ்மனதில் நினைவில் கொள்க.

(எ.கா) - ஐஞ்ஞீலம் 1. Camphor;*** 2. Clove;*** 3. Cubeb;*** 4. Nutmeg; கற்பூரம்.*** இலவங்கம்.*** தக்கோலம்.*** சாதிக்காய்.
<பதிவேறும் சொல்>..<...பதிவேறும் சொல்லின் ஆங்கில விளக்கம்.......................>...<.........பதிவேறும் சொல்லின் தமிழ்விளக்கம்...................>

  • ஒரு சொல்லிற்கான ஆங்கில விளக்கங்களின் இறுதியில் வரும் காற்புள்ளி ;மட்டும், | ஆக மாற்ற இயலுமா? ஆனால், நடுவில் அப்புள்ளி வந்தால் எம்மாற்றமும் செய்யக் கூடாது.மேலும், வெற்று இடைவெளி(white space) இருந்தாலும் அதனையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
  1. ;| என வந்தால், | என மாற்றுக
  2. . (என வந்தால், ( என மாற்றுக
  3. ). என வந்தால், ) என மாற்றுக
  4. .*** என வந்தால், | # என மாற்றுக
  5. | 1. என வந்தால், | # என மாற்றுக
  6. | ***2. --->| # என மாற்றுக
  7. | ***3. --->| # என மாற்றுக
  8. இப்படி 19 எண் வரை
  9. | ***19. --->| # என மாற்றுக.

இதுபோல இன்னும் பல உண்டு. இவ்வசதியிருப்பின் அவ்வப்போது வரும் தட்டசுப் பிழைகளை வெகுவாகக் குறைக்கலாம் அல்லது மாற்றலாம். அப்படி மாற்றினால், கீழ்கண்டவாறு அத்தரவு விக்சனரியின் தானியங்கிப் பதிவேற்றிக்கு ஏற்ப மாறி இருக்கும்.
(எ.கா) - ஐஞ்ஞீலம் # Camphor # Clove # Cubeb # Nutmeg | கற்பூரம்# இலவங்கம் # தக்கோலம் # சாதிக்காய்
<..பதிவேறும் சொல்..><...பதிவேறும் சொல்லின் ஆங்கில விளக்கம்..>...<.....பதிவேறும் சொல்லின் தமிழ்விளக்கம்...>
செய்ய இயலுமா? என்பதற்கு, பதில் ஒரு வரி எழுதி விடுங்கள். பிறகு உங்களுக்குப் போதுமான நேரம் எடுத்துக்கொள்ளுங்கள். மிகுந்த ஆவலுடன்.. --தகவலுழவன் (பேச்சு) 13:12, 13 ஆகத்து 2014 (UTC)Reply

முயன்றால் முடியாதது எதுவும் இல்லை:)--ஸ்ரீகர்சன் (பேச்சு) 13:47, 13 ஆகத்து 2014 (UTC)Reply
மிக்க மகிழ்ச்சி. அடிகோலுங்கள் வளர்த்து விடுகிறேன். இதுதான் பல மொழி விக்சனரியிலும் தேவைப்படும் முக்கிய ஆழி. இதன் மூலம் பல இந்திய மொழிகள் வளரும். மற்றவை அவ்வப்போது, ஆவலுடன் காத்திருப்பேன்.--தகவலுழவன் (பேச்சு) 16:01, 13 ஆகத்து 2014 (UTC)Reply

இறுதியில் வரும் காற்புள்ளி

[தொகு]

தகவலுழவன் அவர்களே இக்கருவிக்கான வேலையை ஆரம்பித்துள்ளேன். ஒரு சொல்லிற்கான ஆங்கில விளக்கங்களின் இறுதியில் வரும் காற்புள்ளி ;மட்டும், | ஆக மாற்ற இயலும். கருவியைப் பயன்படுத்திப் பாருங்கள். இன்னும் வேலை முடியவில்லை.--ஸ்ரீகர்சன் (பேச்சு) 08:09, 15 ஆகத்து 2014 (UTC)Reply

இதற்குரிய சோதனைப் பக்கத்தை அமைத்துள்ளேன்.--தகவலுழவன் (பேச்சு) 08:42, 15 ஆகத்து 2014 (UTC)Reply
இறுதியில் வரும் காற்புள்ளி ;க்கு அடுத்து தமிழ் எழுத்துக்களே அமையும். ஆங்கில எழுத்துக்கள் வராது என்பதை நினைவில் கொள்க. ஒரு தமிழ் சொல்லுக்கு ஒன்றிற்க்கு மேற்பட்ட, ஒரே பொருளுடைய ஆங்கில விளக்கம் இருக்கும் போதே, இடையில் இக்காற்புள்ளி வரும். அதனை மாற்றவேகூடாது.
(எ.கா) {.{subst:noun-ta|Retort ; reply ; பதிற்சொல். சங்கத்தார்க்கு ஒரு போதும் எதிர்வார்த்தை சொல்லார்களே (தமிழறி. 32).}}--தகவலுழவன் (பேச்சு) 07:42, 16 ஆகத்து 2014 (UTC)Reply
தகவலுழவன் அவர்களே நீங்கள் ஐஞ்ஞீலம் 1. Camphor;*** 2. Clove;*** 3. Cubeb;*** 4. Nutmeg; கற்பூரம்.*** இலவங்கம்.*** தக்கோலம்.*** சாதிக்காய். என்ற ஒழுங்கில் சொல் அமைந்திருக்கும் எனக் கூறினீர்கள். அந்த ஐஞ்ஞீலம் பக்கத்திற்கான இணைய இணைப்பைத் தந்தால் கருவி வடிவமைப்பிற்கு உதவியாக இருக்கும்.--ஸ்ரீகர்சன் (பேச்சு) 08:50, 18 ஆகத்து 2014 (UTC)Reply
Yஆயிற்று தகவலுழவன் அவர்களே! கருவியின் அரைவாசிப் பணி நிறைவடைந்துவிட்டது. ஐஞ்ஞீலம் 1. Camphor;*** 2. Clove;*** 3. Cubeb;*** 4. Nutmeg; கற்பூரம்.*** இலவங்கம்.*** தக்கோலம்.*** சாதிக்காய். என்பதை வெற்றாக உள்ள தொகுப்புப் பெட்டியில் உள்ளிட்டு இரண்டாவது ஆழியை சொடுக்கி அதன்பின் முன்தோற்றத்தைப் பாருங்கள். எனக்குச் சரியாக வேலை செய்கின்றது. நீங்களும் பயன்படுத்திப் பாருங்கள். எனைய மாற்ரங்களையும் விரைவில் செய்கின்றேன்.--ஸ்ரீகர்சன் (பேச்சு) 09:05, 18 ஆகத்து 2014 (UTC)Reply
பெருமகிழ்ச்சி அடைந்தேன். பக்கஅமைப்புச் சூத்திரத்துடன் தேவைக்கேற்ற அமைப்பு வருகிறது. இருப்பினும் ஒரு விண்ணப்பம். ஏற்கனவே தானியங்கி நிரலுக்கான மாற்றமொன்றை எனது நண்பர் செய்து வருகிறார். நீங்கள் படிவம் இடாமல், எந்த வரிமாற்றமும் செய்யாமல், அந்த இறுதி காற்புள்ளியை மட்டும் நெடுங்குத்துக்கோடாக ( | = pipeline) மாற்ற 3வது ஆழியை அமைக்க வேண்டுகிறேன்.இதனைத் தொடர்ந்து வரும் தமிழ் விளக்கத்திலும் மாற்றம் தேவை. அது குறித்து இது முடிந்தவுடன் கூறுகிறேன். ஆவலுடன்..--தகவலுழவன் (பேச்சு) 13:06, 18 ஆகத்து 2014 (UTC)Reply
அதாவது தற்போது அமைத்த 2வது ஆழியானது, ஒவ்வொரு சொல்லாக உள்ளீடு செய்யும் போது மிகவும் நேர்த்தியாக நமது தேவையை நிறைவடையச் செய்கிறது. நான் கேட்க விரும்பும் 3வது ஆழியானது, இம்மாற்றத்தை ஏற்படுத்திய பின்பு, முன்பு இருந்தது போலவே, ஒரே வரியில் இருக்க வேண்டும். ஏனெனில், 100சொற்களை இவ்விதம் மாற்றிய பிறகு, அதனை தானியங்கிக்குக் கொடுத்து, பதிவேற்றலாம். தற்போது ஒவ்வொரு சொல்லாக மட்டுமே மாற்ற வேண்டி வரும். அது தவறில்லை. எனினும், நமக்கு பதிவேற்றக் கூடிய நபர்கள் குறைவு. எனவே, நாம் தானியங்கிக்கும் செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். அதனால் தான் \n பயன்பாட்டினை எடுத்து விட்டு , 3வது ஆழி அமையுங்கள். அப்பொழுது தான் 100வரிக்கு, 100சொற்கள் அமைந்து, தானியங்கி பதிவேற்றத்தை வேகப்படுத்தலாம். உங்களது skype முகவரி அல்லது உங்களது அலைப்பேசி எண் தரவும். உகந்த நேரத்தைச் சொன்னால் பேசுகிறேன். ஆவலுடன்..

3வது ஆழியால் நமக்கு கிடைக்க வேண்டிய தரவு

[தொகு]
  • மூல இணையப்பக்கம் - ஐஞ்ஞீலம், n. (அக. நி.) 1. Camphor; கற்பூரம். 2. Clove; இலவங்கம். 3. Cubeb; தக்கோலம். 4. Nutmeg; சாதிக்காய்.
  • பாதி மாறியத் தரவு - ஐஞ்ஞீலம்1. Camphor;*** 2. Clove;*** 3. Cubeb;*** 4. Nutmeg;கற்பூரம்.*** இலவங்கம்.*** தக்கோலம்.*** சாதிக்காய்.
  • முழுமையாக மாறியத் தரவு - ஐஞ்ஞீலம் {.{subst:noun-ta| Camphor # Clove # Cubeb # Nutmeg|கற்பூரம் # இலவங்கம் # தக்கோலம் # சாதிக்காய் }}

--தகவலுழவன் (பேச்சு) 16:29, 18 ஆகத்து 2014 (UTC)Reply

தகவலுழவன் அவர்களே! {{subst:noun-ta| Camphor # Clove # Cubeb # Nutmeg |கற்பூரம் # இலவங்கம் # தக்கோலம் # சாதிக்காய் }} என ஒரே வரியில் உள்ளிட்டால் எண்வரிசையை உருவாக்கும் # குறியீடு எண்ணாக மாற்றப்படாமல் # ஆகவே காட்சியளிக்கும். (காண்க) இதனைத் தவிர்க்கும் வண்ணமே # குறியீடு புதிய வரியில் அமையும் வகையில் நிரலை அமைத்தேன். தானியங்கியாகப் பதிவேற்றும் போது இது சரிசெய்யப்பட்டுமா? அத்துடன் பாதி மாறியத் தரவை எவ்வாறு செய்கின்றீர்கள் என அறியத்தந்தால் உதவியாக இருக்கும்.--ஸ்ரீகர்சன் (பேச்சு) 10:39, 19 ஆகத்து 2014 (UTC)Reply
பாதி மாறியத் தரவை என்பதை என் நண்பர் மாற்றியனுப்பினார். ஏறத்தாழ 5000 மாற்றி தந்துள்ளார். அதற்கான செயலி ஒன்றை இன்னும் ஒரு மாதங்களில் செய்து தருகிறேன் என்று கூறியுள்ளார். தந்தவுடன் உங்களுக்கு அனுப்பி வைக்கிறேன்.

3வது ஆழியின் தேவை மிகவும் அவசியம். ஒரு சொல் ஏற்கனவே விக்சனரியில் உள்ளதா என,மாதரசன் கருவி உதவும். அவ்வாறு கணிக்க பின்வரும் அமைப்பு அவசியம். ஆனால், உங்கள் ஆழி அத்தகையை வரிசையை நீக்கிவிடும். #குறியால் வரும் எண்சீராக்கமானது, தானியங்கி செயற்படும் போது, அது பாத்துக் கொள்ளும். (எ. கா.)

  1. முதாலம் சொல் -அதற்குரிய ஆங்கில விளக்கம்+ தமிழ்விளக்கம்
  2. இண்டாம் சொல் -அதற்குரிய ஆங்கில விளக்கம்+ தமிழ்விளக்கம்
  3. மூன்றாம் சொல் -அதற்குரிய ஆங்கில விளக்கம்+ தமிழ்விளக்கம்
  4. நான்காம் சொல் -அதற்குரிய ஆங்கில விளக்கம்+ தமிழ்விளக்கம்
'--தகவலுழவன் (பேச்சு) 11:39, 19 ஆகத்து 2014 (UTC)Reply
தகவலுழவன் அவர்களே! வேலையைத் தொடங்கிவிட்டேன் சில வழுக்கள் உள்ளன விரைவில் சரிசெய்கின்றேன்.--ஸ்ரீகர்சன் (பேச்சு) 11:44, 19 ஆகத்து 2014 (UTC)Reply

மகிழ்ச்சி. தம்பி! அநேகமாக சொல்லப்போகும் தேவைதான் இறுதி என்றே எண்ணுகிறேன்.

(எ.கா) {.{subst:noun-ta|Retort ; reply ; பதிற்சொல். சங்கத்தார்க்கு ஒரு போதும் எதிர்வார்த்தை சொல்லார்களே (தமிழறி. 32).}}

என்பதில்
'பதிற்சொல்' அடுத்துக்கு வரும் முற்றுப்புள்ளி #:{{எ.கா}} என மாறணும். அதேநேரத்தில் அது (வளைவு அடைப்புக்குறியினுள்) இருக்கும் புள்ளிகளை எதுவும் மாற்றக்கூடாது. அதாவது ஒரு தமிழ் பொருளுக்கு ஏதாவது மேற்காட்டியது போல, இலக்கிய மேற்கோள் இருந்தால் மட்டும் அவ்விதம் மாற வேண்டும். ஏனெனில், இலக்கிய மேற்கோள் இல்லாமல் #:{{எ.கா}} இடுவது பொருத்தமில்லாதுதானே? இன்னும் சில நேரங்களில், வளைவு அடைப்புகுறிகள் மட்டும், எந்த ஒரு இலக்கியமேற்கோள் இல்லாமலும் வரும். கீழ்கண்டவை போல, கவனித்தில் கொள்ளவும்.

(எ.கா) {.{subst:noun-ta|Retort ; reply ; பதிற்சொல். }}
(எ.கா) {.{subst:noun-ta|Retort ; reply ; பதிற்சொல். (தமிழறி. 32).}}
--தகவலுழவன் (பேச்சு) 11:57, 19 ஆகத்து 2014 (UTC)Reply
தகவலுழவன் அவர்களே! 3 ஆவது அழியை அமைத்துவிட்டேன். தற்போது ஒரே வரியில் உள்ளிடுகின்றது. #:{{எ.கா}} ஆக மாற்றும் வசதியை விரைவில் ஏற்படுத்துகின்றேன்.--ஸ்ரீகர்சன் (பேச்சு) 11:59, 21 ஆகத்து 2014 (UTC)Reply
தகவலுழவன் அவர்களே! //3வது ஆழியின் தேவை மிகவும் அவசியம். ஒரு சொல் ஏற்கனவே விக்சனரியில் உள்ளதா என,மாதரசன் கருவி உதவும். அவ்வாறு கணிக்க பின்வரும் அமைப்பு அவசியம். ஆனால், உங்கள் ஆழி அத்தகையை வரிசையை நீக்கிவிடும்.// நீங்கள் குறிப்பிடுவதை என்னால் புரிந்து கொள்ள இயலவில்லை. சற்று விளக்குவீர்களா?--ஸ்ரீகர்சன் (பேச்சு) 12:02, 21 ஆகத்து 2014 (UTC)Reply
ஸ்ரீகர்சன் ! கீழுள்ள வரிகளை எடுத்துக் கொள்ளவும்.
  1. முதாலம் சொல் - #ஆங்கிலவிளக்கம்#ஆங்கிலவிளக்கம் + #தமிழ்விளக்கம்#தமிழ்விளக்கம்
  2. இண்டாம் சொல் - #ஆங்கிலவிளக்கம்#ஆங்கிலவிளக்கம் + #தமிழ்விளக்கம்#தமிழ்விளக்கம்
  3. மூன்றாம் சொல் - #ஆங்கிலவிளக்கம்#ஆங்கிலவிளக்கம் + #தமிழ்விளக்கம்#தமிழ்விளக்கம்,
    இதில் 2வது சொல் இருப்பதாக எண்ணிக்கொள்ளவும். அதன் விளக்கங்கள் அத்தற்கு நேராக இருக்கிறது. அது மாறாமல் இருக்க வேண்டும். #குறியீடு அடிப்படையில் பின்வருமாறு மாறினால், வரிசை மாற்றம் ஏற்பட்டு விடும் அல்லவா?
  4. இரண்டாம் சொல் -
  5. ஆங்கிலவிளக்கம்#ஆங்கிலவிளக்கம் |
  6. தமிழ்விளக்கம்#தமிழ்விளக்கம்
ஏனெனில், மாதரசன் ஆழியானது, ஒரு தலைப்புச்சொல்லுக்கு நேராக இருக்கும் தரவையே எடுத்துத் தரும். எனவே, தான் ஒருசொல்லுக்குரிய தரவானது, அடுத்த வரிக்கு செல்லக்கூடாது என்பதைச் சொல்லவந்தேன். சுருக்கமாகச் சொன்னால், குறியீடுகளை இடும் போது, எந்த ஒரு வரிமாற்றமும் செய்யக்கூடாது. அவ்வளவே.உங்கள் அலைப்பேசி எண் தருக. நான் தொடர்பு கொள்கிறேன்.--தகவலுழவன் (பேச்சு) 17:11, 21 ஆகத்து 2014 (UTC)Reply

பயனர் பேச்சு:Shrikarsan/விக்சனரி 3.js என்ற பக்கத்தில், இதுபற்றி, இனி தொடர்ந்து உரையாட விரும்பி ஒரு வே்ண்டுகோளை முன்வைத்திருக்கிறேன். ஆவண செய்க. வணக்கம்.--தகவலுழவன் (பேச்சு) 03:03, 27 ஆகத்து 2014 (UTC)Reply

"https://ta.wiktionary.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Shrikarsan&oldid=1253194" இலிருந்து மீள்விக்கப்பட்டது