வாசகம்
Appearance
வாசகம் (பெ)
- வார்த்தை
- செய்தி
- சொற்றொடர்
- செய்யுள்
- பிறர் கேட்கச் செபிக்கை
- வசனநடை
- வாய்பாடு
- கடிதம்
- தோத்திரம்
- திருவாசகம்
- வாசகதீட்சை
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- speech, word of mouth
- message
- sentence, composition
- poetical composition, verse
- audible muttering of a mantra
- prose
- form of speech, grammatical or otherwise
- letter, epistle
- words of praise
- the celebrated poem in praise of Siva by Manicka Vasagar
- (Saiva)A way of initiation, in which the guru teaches his disciple how to pronounce the pañ-cākṣaratīṭcai
விளக்கம்
பயன்பாடு
- 'வாய்மையே வெல்லும்' என்ற ஒரு வாசகம், அவனிடம் யாசகம் செய்வது போல் கெஞ்சியது. (ஊருக்குள் ஒரு புரட்சி, சு. சமுத்திரம்)
- "சிற்றப்பா இறந்து விட்டார்! உடனே புறப்பட்டு வரவும்" என்பது தான் தந்தியில் கண்டிருந்த வாசகம். (குறிஞ்சி மலர், தீபம் நா. பார்த்தசாரதி)
- ”குடி குடியைக் கெடுக்கும்” - மதுப்புட்டியின் மேலுள்ள வாசகம்
- கன்னித்தமிழ் தந்ததொரு திருவாசகம் காலைக்கனியாக்குமுந்தன் ஒரு வாசகம் (திரைப்பாடல்)
- முராரிகள் என்பது பன்மை வாசகம்
(இலக்கியப் பயன்பாடு)
- சிறியோர்க் கருளிய வுயர்மொழி வாசகம் (பெருங். வத்தவ. 13, 116)
- மல்குநீர்க் கண்ணேற்கோர் வாசகங் கொண்டருளாயே (திவ். திருவாய். 1, 4, 5)
- வடமொழி வாச கஞ்செய்த நல்லேடு (சிலப். 15, 58)
- வாசகஞ் செய்யநின்ற திருமாலை (திவ். பெரியாழ். 4, 1, 5)
- வள்ளுவர் சீரன்பர்மொழி வாசகம் (தனிப்பாடல்.)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---வாசகம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +