விக்சனரி:ஒழுங்குப் பிறழ்வுகள்
Appearance
விக்கிபீடியாவின் புது வருனர்கள் விதி மீறல்கள் (faux pas) புரிந்துவிட வாய்ப்புகள் அதிகம் என உணரக்கூடும்.தவறொன்றுமில்லை - தவறு செய்யாதார் யாருளர்? பின்வரும் சில பொதுவான பிறழ்வுகளைத் தவிர்க்க முயலவும்:
- கலைக்களஞ்சியம் போன்ற கட்டுரைகளைத் தவிர்க்க. விக்சனரி ஒரு கலைக்களஞ்சியம் இல்லை. கலைக்களஞ்சிய வடிவிலான பக்கங்களுக்காக இன்னொரு விக்கி திட்டமான விக்கிபீடியாஉள்ளது.
- பயனுள்ள உள்ளடக்கத்தை அழித்துவிடுதல். உள்ளடக்கத்தின் ஏதேனும் ஒரு பகுதி பயனுடையதாக இருந்தபோதும் சரியாக எழுதப்படாதிருக்கலாம். அதை நீக்கிவிடுவதைவிட சரிசெய்ய, தெளிவாக மாற்ற முயலுங்கள். அப்பகுதி பொருந்தாமல் நிற்பதாகவோ, சரியான பாகுபாடு செய்யப்படாததாகவோ கருதினால் உரிய பக்கத்திற்கோ தேவைப்பட்டால் புதிய பக்கத்திற்கோ மாற்றுங்கள்.
- அறிவிக்காமலே அழித்துவிடுவது. சுருக்கம் பெட்டியில் குறிப்பு விட்டுச்செல்லுங்கள். இல்லையெனில் அப்பக்கத்தின் வளர்ச்சி குறித்து ஆர்வமுடையவர்கள் கவனத்திற்கு வராமல் நீங்கள் வேண்டுமென்றே மறைத்திருப்பதாகக் கருத இடமுண்டு.
- காரணங்களைக் கூறாமல் அழித்துவிடுதல். பொருட்படுத்தத்தக்க எதையும் அழிக்குமுன் அதற்குரிய நியாயங்களை "சுருக்கம்" பெட்டியில் அல்லது பேச்சுப் பக்கத்தில் விட்டுச்செல்லவும்.பேச்சு பக்கத்தில் உரிய விளக்கம் தந்திருந்தால் "பார்க்க:பேச்சு" என்று மட்டும் சுருக்கத்தில் குறிப்பிடலாம்.
- விக்சனரி பக்கங்களை அரட்டைக்குப் பயன்படுத்தல். பேச்சுப் பக்கத்தை தவறாகப் பயன்படுத்துவதைத் தவிர்ப்பது எப்படி? பார்க்கவும்.
- "இயற்றியவருக்கு" அதீத மரியாதை அளித்தல்
- தொகுப்பதற்குப் பதில் விமர்சித்தல். கட்டுரைகளுக்கு தனிப்பட்ட ஆசிரியர் (single author) என்று எவருமில்லை. ஆலோசனையோ, விமர்சனமோ பேச்சுப் பக்கத்தில் விட்டுச்செல்வது உதவிகரமானதே என்றாலும் நீங்களே தொகுத்துவிடுவது இன்னும் விரைவானது.
- துணிந்து செயல்படத் தவறுதல். ஏதேனும் குழப்பம் விளைவித்துவிடுவோம் என்று தயங்காதீர்கள். அடுத்து வருபவர்கள் சரிசெய்து விடுவார்கள். எனவே, துணிந்தபின் மனமே துயரம் கொள்ளாதே!. ஆகவே தாங்கள் துணிந்து செயல்படலாம்.
- மல்லுக்கு நிற்றல். விக்சனரி என்பது பொதுநலம் விழைகின்ற, மனச்சான்றின்வழி நிற்கிறவர்கள் அடங்கிய தனித்துவம் மிக்க ஒரு சமூகம். சண்டை பிடிக்க அது ஒன்றும் பயனர்வலை(usenet) இல்லை, சொல்லம்பு தொடுத்தலுக்கு (flaming) இங்கு இடமில்லை. விக்சனரி நடத்தைகள் பற்றிய மேல்விவரங்களுக்கு பார்க்க:விக்கி நெறி.
- விக்கிமயமாக்கல்- சற்று அதிகமாகவே. விக்சனரி உள் இணைப்பு மூலம் செழுமை பெறுவது உண்மை தான் என்றாலும் , அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சுதானே?
- சரியாகத் தொகுக்கப்படாத பக்கங்கள் கண்டு தெறித்தோடுவது. விக்சனரி தொடர்ந்து நடைபெறும் ஒரு பணி. (தற்காலிகமான) குறைகளைப் பொறுத்துக்கொண்டு மேம்பாட்டுக்கு உதவுங்கள் . இங்கு திறமையானவர்கள் நிறையவே உண்டு. ஒவ்வொருவரும் தங்களாலான பங்களிப்பைச் செய்து வருகின்றனர். உங்கள் ஐயம் நீங்கவில்லையென்றால் பார்க்க:பொது ஆட்சேபங்களுக்கான பதில்கள்.
- தங்கள் பயனர் பேச்சு பக்கத்தை அழித்துவிடுதல் அல்லது அதிலிருந்து சிலவற்றை நீக்கிவிடுதல். பேச்சுப் பக்கங்கள் விக்சனரியின் வரலாற்று ஆவணங்களில் ஓர் அங்கம். தங்கள் பயனர் பேச்சு பக்கமே பிறர் தங்களுடன் உரையாடும் வழி. பழையவற்றைப் பரணுக்குத் தள்ளுவது சரியே என்றாலும் பயனர் பேச்சிலிருந்து எதையும் நீக்குமுன் கவனமாக இருங்கள்: நீங்கள் விமர்சனத்தை மறைக்க முயலுவதாகக் கருத வாய்ப்பு ஏற்படும்.