கேள்விக்குறி
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
கேள்விக்குறி(பெ)
- ஒரு வாக்கியம் கேள்வி என்பதற்காக அடையாளமாக அதன் முடிவில் இடப்படும் நிறுத்தல் குறி...(? இதுவே கேள்விக்குறி)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
- சந்தேகத்திற்குரிய/முடிவு எட்டப்படாத விடயங்கள் என்பதைத் தெரிவிக்கும் போதும் கேள்விக்குறி எனும் சொல் பயன்படுத்தப்படுகிறது.
பயன்பாடு
- இன்றைய காலத்தில் வேலை கிடைப்பது கடும் போராட்டமாக இருக்கிறது. கிடைத்த வேலையும் நிரந்தரமானதாக இருக்குமா என்பது கேள்விக்குறி (நிலையான வேலை வேண்டுமா?, யாழவன், ஈகரை)
- காதல் சுகமா அல்லது சுமையா என்பது தான் கேள்விக்குறி (மனிதனை மறுபடியும் மனிதனாக்கும் காதல், ஈகரை)
( சொற்பிறப்பியல் )
:கேள்வி - குறி - நிறுத்தல் குறி - ஆச்சரியக்குறி - காற்புள்ளி