விக்சனரி:தினம் ஒரு சொல்/நவம்பர் 22

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தினம் ஒரு சொல்   - நவம்பர் 21
கதுப்பு (பெ)
கூந்தல்
கரும்புத்தோகை
பழக்கதுப்பு

பொருள்

  1. கூந்தல், மயிர்
  2. தோகை
  3. தடித்த சதை
  4. பழம், காய் ஆகியவற்றின் மையப் பகுதி
    நெய்கனிந்து இருளிய கதுப்பு; கதுப்பு என மணிவயின் கலாபம் (சிறுபாணாற்றுப்படை)
    ஒலியிருங் கதுப்பின் ஆயிழை கணவன் (புறநானூறு)

மொழிபெயர்ப்பு

  • ஆங்கிலம்
  1. lock, hair, tress
  2. feathers of peacock
  3. lobe
  4. fleshy part of fruits and vegetables

சொல்வளம்

கது - உப்பு - காது
.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக