விக்சனரி:தினம் ஒரு சொல்/பெப்ரவரி 12

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

Writing star.svg

தினம் ஒரு சொல்   - பெப்ரவரி 12
மிடறு (பெ)
 1. தொண்டை, மென்னை
 2. கழுத்து
 3. மூச்சுக்குழல்; ஒலியெழும் கண்டவுறுப்பு
 4. மிடற்றுக்கருவி - தொண்டையில் குரலெழுப்பும் கருவி
 5. கீழ்வாய்
 6. ஒருவாய் கொண்ட நீர்மப் பொருள்
 1. throat
 2. neck
 3. trachea, windpipe
 4. throat, considered, a musical instrument
 5. lower jaw
 6. draught, a quantity of liquid taken at one swallow
 • ஒரு மிடறு தண்ணீர் குடித்தேன் - I took a draught of water.
 • அப்பா டீயை கொடுத்ததும் ஒரே மிடறில் உள்ளே இழுத்துவிட்டு, சக்கரத்தை வீசிப்போட்டுவிட்டு கிளம்பிச் சென்றார்.
 • கறைமிட றணியலுமணிந்தன்று (புறநா. 1).
 • தலையினு மிடற்றினுநெஞ்சினு நிலைஇ (தொல். எழுத். 83).
 • மிடறு மெழுமெழுத்தோட வெண்ணெய் விழுங்கி (திவ். பெரியாழ். 3, 2, 6).
 • நரம்பு நம்பியூழ் மணிமிடறுமொன்றாய் (சீவக. 728).
கழுத்து - தொண்டை - மூச்சுக்குழல் - வாய்


.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக