விக்சனரி பின்னிணைப்பு:இயற்பியல் கலைச் சொற்கள் (தமிழ் - ஆங்கிலம்)

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

இயற்பியல் என்பது "Physics" என்பதற்குச ஈடாகத் தமிழ்நாட்டில் வழங்கும் தமிழ்ச் சொல்லாகும். இலங்கையில் மாணவர்கள் பௌதீகவியல் என்னும் சொல்லைப் பயன்படுத்திவருகின்றார்கள். இவ்வாறே பல கலைச் சொற்கள் வெவ்வேறாக இவ்விரு இடங்களிலும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. "பயன்படும் இடங்கள்" என்பதன் கீழ்த் தரப்பட்டுள்ள இல என்பது இலங்கையில் பயன்படுத்தப்படும் சொல் என்பதையும், தநா என்பது தமிழ்நாட்டில் பயன்படுத்தப்படுவது என்பதையும் குறிக்கும்.

தமிழ் ஆங்கிலம் பயன்படும் இடம்
அகலம் width இல, தநா
அடர்த்தி density இல
அமர்முடுகல் deceleration இல
அழுத்தம் pressure இல
அணுத்திணிவு atomic mass இல
அணுவெண் atomic number இல
அலை wave இல
ஆடி mirror இல
ஆர்முடுகல் acceleration இல
இயக்க சக்தி kinetic energy இல
இலத்திரன் electron இல
இழுவை tension இல
கதி,#வேகம் speed இல,தநா
குவியாடி convex mirror இல
குழியாடி concave mirror இல
உயரம் height இல, தநா
உராய்வு Friction இல
உருகுநிலை melting point இல
ஊடகம் medium இல
ஒலி sound இல
ஒளி light இல, தநா
ஒளித் தெறிப்பு light reflection இல
ஒளி முறிவு light refraction இல
கடத்தல் conduction இல
கதிர்வீச்சு radiation இல
கதிரியக்கம் radioactivity இல
கன அளவு volume இல
கானல் நீர் mirage இல
குவியம் focus இல
கொதிநிலை boiling poin இல
சடத்துவம் inertia இல
சடத்துவத் திருப்பம் moment of inertia இல
தடை (மின்னியல்) resistance இல
தன்னீர்ப்பு specific gravity இல
திணிவு mass இல
நியூத்திரன் neutron இல
நீளம் length தநா, இல
பரப்பளவு area இல
பாரமானி barometer இல
புவியீர்ப்பு gravity இல
புவியீர்ப்பு மையம் centre of gravity இல
புரோத்தன் proton இல
பௌதீகவியல், இயற்பியல் Phycics இல,தநா
மின்சாரம் electricity இல
நிலைமின்சாரம் static electricity இல
ஓட்ட மின்சாரம் current electricity இல
மின் தூண்டல் induction இல
மின்னியல் -- இல
மின்னோட்டம் electric current இல
நேரோட்ட மின்சாரம் direct current இல
ஆடலோட்ட மின்சாரம் alternate current இல
மீடிறன்,அதிர்வேண் frequency இல,தநா
மேற்காவுகை convection இல
வளி,காற்று air இல,தநா
காற்றழுத்தம் atmospheric pressure இல
வளிமண்டலம் atmosphere இல
விசை force இல
படிமம் image இல
உண்மை பிம்பம் real image இல
மாய பிம்பம் virtual image இல
வில்லை lense இல
குவி வில்லை convex lens இல
குழி வில்லை concave lens இல
வெப்பம் heat இல
வெப்பநிலை temperature இல
வெப்பக் கொள்ளளவு Heat Capacity இல