கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஆடி:
எனில் கூத்தாடுபவன்--படம்:ஆந்திர கூச்சிப்பூடிக் கூத்து {நடனம்}
என்ற
தமிழ் விக்கிப்பீடியாவின் விரிவான கட்டுரையையும் காண்க.
- புறமொழிச்சொல்--சமஸ்கிருதம்--आषाढक--ஆஷாட4(க1)--மூலச்சொல்-பொருள் 4 & 5 க்கு
- ஆடு-
- கூத்தாடுபவன்
- (எ. கா.) மணிப்பை யரவி னாடி (பாரத. அருச்சுனன்றவ. 113).
- கண்ணாடி
- (எ. கா.) பொன்னி னாடியிற் பொருந்துபு நிற்போர் (மணி. 19, 90).
- நுண்பொருட்களை தெளிவுற காண உதவும் கண்ணாடித் துண்டு
- பளிங்கு
- (எ. கா.) விதிமா ணாடியின் வட்டங் குயின்று (மணி. 8, 47)..
- நான்காம் மாதம்
- தமிழ்நாட்காட்டி ஆண்டில் நான்காவது மாதம் (பெரும்பாலும், ஜூலை 17 முதல் ஆகஸ்ட் 16 வரையான காலம்).
- உத்திராடநாள் (திவா.)
- பகலில் 12 நாழி கைக்குமேல் இரண்டு நாழிகை கொண்ட முகூர்த்தம் (விதான. குணா. 73.)
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- dancer
- metallic mirror
- lens
- crystal
- The fourth Tamil month July-August
- autumn
- The day, having uththiraadam,the 21st nakṣatra.
- Muhūrtam of 48 minutes, from 4 h-48 m. to 5 h. 36 m. after sunrise
ஆடு - ஆடி
ஆடிமாதம், ஆடிப்பெருக்கு, ஆடிப்பட்டம், ஆடிக்காற்று
கூத்தாடி, காற்றாடி
கண்ணாடி, குவியாடி, குழியாடி
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)
+ DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +