விரகம்
Appearance
பொருள்
விரகம் , (பெ)
- பிரிவு
- காதலர் இடையே ஏற்படும் பிரிவு வேதனை; விரகநோய்; விரகதாபம்;
- காமம்
- உலர்த்துகை. மண்முதலைந்திற்கும் . . . வியாபாரம் பொறைபிண்டீகரணம் பாகமொடு விரக மிடங்கொடையாகும்(வேதா. சூ. 77).
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- separation, especially of lovers
- distress or sorrow of lovers due to separation from each other
- lust; lasciviousness
- drying up
விளக்கம்
பயன்பாடு
- மோகம், தாபம், விரகம், போகம், காமம் இந்த வார்த்தைகள் எல்லாமே அடிப்படையில் ஆசை சார்ந்த சொற்கள். 'மோகம்’ என்றால் சித்தம் கலங்குவது. 'யாரைப் பார்த்து?’ என்பதெல்லாம் அதற்கு அவசியம் இல்லை! 'தாபம்’ என்றால், காதல் தாகத்தால் துன்புறுவது-அதன் காரணமாக உடலில் வெப்பம் அதிகரிப்பது! விரகம் - பிரிவினால் ஏற்படும் (காதல்) துன்பம்! போகம்-சிற்றின்பங்களை அனுபவிப்பது. காமம்-உடற்கூறு சம்பந்தப்பட்டது-Physical. (மதன் கேள்வி - பதில், ஆனந்தவிகடன், 8 டிச 2010)
- பருவ வயதிலே இரவும் பகலும் விரகம் நரகம் சரணம் சரணம் (திரைப்பாடல்)
- விரகம் போலே உயிரை வாட்டும் நரகம் வேறேது (திரைப்பாடல்)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---விரகம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +