காமம்
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
காமம்(பெ)
- பாலின்ப விருப்பு
- புணர்ச்சியின்பம்
- காமநீர்
- உறுதிப்பொருள்களுள் ஒன்றான இன்பம்
- விருப்பம்
- விரும்பிய பொருள்
- இலக்கினத்துக்கு ஏழாமிடம்
- காமமரம்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- lust, sexual desire; amorousness; lasciviousness, libidinousness
- sexual pleasure
- venereal secretion
- happiness in love
- desire
- object of desire
- (Astrol.) the seventh house from the ascendant
- sagofern palm, cycas circinalis
விளக்கம்
பயன்பாடு
- அவருக்குள் அடங்காத காமம் எப்போதுமே கொந்தளித்துக் கொண்டிருக்கிறது. வாடிக்கையாக வியாழக்கிழமை தோறும் வேசைகளைத் தேடி சென்று சுகித்து வருவது வழக்கம். (கசக்கும் காமம், எஸ். ராமகிருஷ்ணன்)
(இலக்கியப் பயன்பாடு)
- காமத்திற் செம்பாக மன்று (குறள், 1092).
- மெய்பொடித் திருங்காமமிக்கொழுக்கும் (உபதேசகா. அயமுகி. 25).
- காமத்தின் மன்னும் வழிமுறையே நிற்றுநாம் (திவ். இயற்.பெரியதி. ம. 37).
- காமம் வெகுளி மயக்கம் (குறள், 360).
- தாம்வேண்டுங் காமமேகாட்டுங் கடிது (திவ். இயற். 2, 92).
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---காமம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +