தாபம்
Appearance
ஒலிப்பு
|
---|
பொருள்
தாபம் , (பெ)
- வெப்பம்
- கனன்று எரியும் ஆசை
- தாகம் மான்கணம் . . . தாபநீங்காதசைந்தன (திருவாச. 3, 82).
- துன்பம் தாபஞ்செய் குற்றம்(அருட்பா. i, நெஞ்சறி. 201).
- பஞ்சசம்ஸ்காரத்தினுள் ஒன்றான முத்திராதாரணம்.
- காடு
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- heat, burning
- burning desire
- thirst
- sorrow, distress, anguish
- branding the shoulders with the marks of conch and discus of Viṣṇu
- jungle, forest
விளக்கம்
பயன்பாடு
- மோகம், தாபம், விரகம், போகம், காமம் இந்த வார்த்தைகள் எல்லாமே அடிப்படையில் ஆசை சார்ந்த சொற்கள். 'மோகம்’ என்றால் சித்தம் கலங்குவது. 'யாரைப் பார்த்து?’ என்பதெல்லாம் அதற்கு அவசியம் இல்லை! 'தாபம்’ என்றால், காதல் தாகத்தால் துன்புறுவது-அதன் காரணமாக உடலில் வெப்பம் அதிகரிப்பது! விரகம் - பிரிவினால் ஏற்படும் (காதல்) துன்பம்! போகம்-சிற்றின்பங்களை அனுபவிப்பது. காமம்-உடற்கூறு சம்பந்தப்பட்டது-Physical. (மதன் கேள்வி - பதில், ஆனந்தவிகடன், 8 டிச 2010)
- கோபதாபம் - heat of anger, fury, rage - மிகுசினம்
- பச்சாத்தாபம் - compassion, pity, sympathy - இரக்கம்
- மனத்தாபம்
-
- grief, heart-burning, sorrow - துக்கம்
- displeasure, aversion - வெறுப்பு
- Being ill-disposed, being on unfriendly terms - இணக்கமின்மை.
- regret, remorse, compunction, contrition, repentance - மனந்திரும்புகை
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +