பாண்டில்
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
பாண்டில், (பெ).
- வட்டம்
- விளக்குத் தகழி
- கிண்ணி
- கஞ்சதாளம்
- குதிரை பூட்டிய தேர்
- இரண்டு உருளுடைய வண்டி
- தேர்வட்டை
- வட்டக் கட்டில்
- கண்ணாடி
- வட்டத்தோல்
- நாடு
- குதிரைச் சேணம்
- எருது
- இடபராசி
- விளக்கின் கால்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- circle
- bowl of a lamp
- small bowl or cup
- a pair of cymbals
- horse-drawn chariot
- two-wheeled cart
- felly of the wheel of a chariot
- circular bedstead or cot
- glass, mirror
- circular piece of hide used in making a shield
- country, territory
- saddle
- bull
- taurus of the zodiac
- stand of a lamp; standard
விளக்கம்
பயன்பாடு
- (இலக்கியப் பயன்பாடு)
- பொலம்பசும் பாண்டிற்காசு (ஐங்குறு. 310).
- கழற் பாண்டிற் கணைபொருத துளைத்தோ லன்னே (புறநா. 97).
- இடிக்குரன் முரசமிழுமென் பாண்டில் (சிலப். 26, 194).
- பருந்துபடப்பாண்டிலொடு பொருத பல்பிணர்த் தடக்கை (நற். 141).
- வையமும் பாண்டிலும் (சிலப். 14, 168).
- பேரள வெய்திய பெரும்பெயர்ப்பாண்டில் (நெடுநல். 123).
- ஒளிரும் . . . பாண்டினிரை தோல் (பு. வெ. 6,12).
- புள்ளியிரலைத் தோலூனுதிர்த்துத் தீதுகளைந் தெஞ்சிய திகழ்விடு பாண்டில்(பதிற்றுப். 74).
- பாண்டி லாய்மயிர்க்கவரிப் பாய்மா (பதிற்றுப். 90, 35).
- மன்னிய பாண்டில் பண்ணி (சீவக. 2054).
- நற்பலபாண்டில் விளக்கு (நெடுநல். 175)
- (இலக்கணப் பயன்பாடு)
( மொழிகள் ) |
சான்றுகள் ---பாண்டில்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற