விரிவாக்கம்
Appearance
விரிவாக்கம் (பெ)
- ஒன்றை விரிவுபடுத்துதல்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- சாலை விரிவாக்கம் - expansion/widening of road
- விமான நிலைய விரிவாக்கம் - expansion of the airport
- மனிதப் பெருக்கம், கால்நடைப் பெருக்கம், வேளாண் விரிவாக்கம், சாலைகள், இரயில் பாதைகள் இன்னும் முன்னேற்றம் என்ற வகையில் தொழிற்சாலை மாசுபாடுகள் யாவும் எதிர்காலத்தில் அரிய ஆசியச் சிங்கங்களைக் காப்பாற்ற இயலுமா என்ற கேள்வியை உரத்து எழுப்பியுள்ளன. (சிங்... சிங்கம்... அரிமா...?, ச. முகமது அலி)
- நம் இசை பண்ணிசை - பண் விரிவாக்கம் என்ற ஆளத்தி முறை (ஆலாபனை) நம் இசையின் தனிச்சிறப்பு (பண்பாடும் பண்பாடு, நா. மம்மது)
- ஒவ்வொருவரும் கோயிலை விரிவாக்கம் செய்து கட்டியிருக்கிறார்கள். (சுசீந்திரம், ஜெயமோகன்)
- இனக்குழுக்களுக்குள் தனியாக நெறிகள் புழங்கலாம். ஒட்டுமொத்த சமூகத்திற்காக அவற்றில் சில நெறிகள் விரிவாக்கம் செய்யப்படுகின்றன. (நீதியும் நாட்டார் விவேகமும் : பழமொழி நாநூறும், ஜெயமோகன்)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
:விரிவு - ஆக்கம் - மேம்பாடு - அபிவிருத்தி - பெருக்கம்