பயனர் பேச்சு:Mdmahir
தலைப்பைச் சேர்இப்பரணில் முந்தைய உரையாடல்கள் உள்ளன
நன்றியும், உதவியும்
[தொகு]- உங்களுடைய பங்களிப்புகளுக்கு, javascript-களுக்கு மிக்க நன்றி.
- எனக்கு javascript-களை எப்படிப் பயன்படுத்துவது என்று இன்னும் தெரியவில்லை. நேற்று எனது vector.js-இல் உங்கள் editor.js இட்டுப் பார்த்தேன். ஒன்றும் ஆன மாதிரி தெரியவில்லை, மேலும் என்ன செய்வதென்று தெரியவில்லை. என்ன பிரச்சனையாக இருக்கும்?
- மேலும், ஒரு எண்ணை இட்டால் அதை எழுத்துவடிவில் மொழி பெயர்க்கும் மாற்றி js செய்து அதைப் வருனர்களுக்காக முதற்பக்கத்திலோ எல்லது வேறு ஒரு முக்கியமான இடத்திலோ இடவேண்டும், எடுத்துக்காட்டாக, 507 என்று இட்டால், “ஐநூற்று ஏழு, five-hundred and seven" என்று வரவேண்டும். பார்க்க: [1]. என்ன செய்யவேண்டும். அதற்கு நீங்கள் உதவமுடியுமா?
நன்றி.பழ.கந்தசாமி 15:36, 27 ஜூலை 2010 (UTC)
- இதற்கு எண்ணை இடமதிப்புக்கு ஏற்றவாறு பிரித்து (அது ஒன்றன் இடமா, பத்தின் இடமா, நூற்றின் இடமா என்று) அந்த எண்ணுக்கு ஏற்ற எழுத்துத்தொடர் (சொல், string) இட்டால் அப்படி வரும். ஒவ்வொரு இடத்துக்கும் உண்டான சொற்கள் 10 தானே இருக்கும். ஆனால் சரியாகச் செய்ய வேண்டும். 2010305069 என்னும் எண்ணை இட்டுப்பாருங்கள், தவறாக வருகின்றது (அவர்கள் பெரிய எண் எல்லை வகுக்க வில்லை என்று நினைக்கின்றேன்). சா'வா குறியல் வேண்டும் என்றால் மாகிரைக் கேட்பதே பொருந்தும். --செல்வா 22:02, 27 ஜூலை 2010 (UTC)
- Mahir. மிக மிக நன்றி. இது விக்சனரியில் இருக்கவேண்டும் என்பது எனது நீண்டநாள் ஆசை. மொழிமாற்றம் பேச்சுவழக்கில் உள்ளதுபோல் தெரிகிறது. எழுத்துவழக்குக்கு மாற்றவேண்டும். மேலும் மேலும் சோதிக்க வசதியாக நமது பொருள் தேடுசாளரத்தில் ஒரு சொல்லை இடுவதுபோல் எண்ணை இட்டு இவ்வாறு பெறமுடியுமா? அப்படி ஒரு சோதனைப் பெட்டி தற்காலிகமாக ஏற்படுத்தினால் சோதிக்க வசதியாக இருக்கும்.
- மேலும், இது இந்திய முறைப்படி இலட்சம், கோடு என்றும் வரவேண்டும் (அமெரிக்க முறையும் இருக்கலாம்). ஆமாம், உங்களுடைய Number to Word--இன் தமிழாக்க மாறுபாடுகளை எப்படிக் காண்பது? பழ.கந்தசாமி 07:06, 28 ஜூலை 2010 (UTC)
மாகிர், மிக அருமை. சில சிறு திருத்தங்கள் செய்ய வேண்டியிருக்கலாம். எண்பத்து என்று இருக்க வேண்டியது என்பத்து (என்று தவறுதலாக இரட்டைச் சுழி னகரம் வருகின்றது). எண்ணூற்று என்பதில் சரியாக உள்ளது (ஆனால் எண்நூற்று என்று உள்ளது - இது பெரிய தவறல்ல). பத்தாயிரத்துக்கான இடத்திலும், பத்துக்கான இடத்திலும் இவ்வாறு வருகின்றது. எளிதாகச் சரி செய்யலாம். நிரலில் இரண்டு இடத்தில் எழுத்துத்தொடரை மாற்றினால் போதும். மிக்க நன்றி--செல்வா 13:12, 28 ஜூலை 2010 (UTC)
- திருத்தியிருக்கிறேன். எண்பத்தி ஏழு
இருபத்தி எட்டு ஆயிரத்து, எண்ணூற்று எண்பத்தி ஏழு -- Mahir78 14:06, 28 ஜூலை 2010 (UTC)
மிக்க நன்றி, மாகிர். இப்பொழுது சரியாக உள்ளது! --செல்வா 03:13, 31 ஜூலை 2010 (UTC)
அணுக்க உதவி
[தொகு]மீடியாவிக்கி_பேச்சு:Common.js#.E0.AE.B5.E0.AE.B4.E0.AF.81 பார்க்கவும்.--த*உழவன் 06:57, 30 ஜூலை 2010 (UTC)
js இயக்க உதவி
[தொகு]மாஹிர்; தங்களின் சிறப்பான உதவிகளுக்கு நன்றி. எனக்கு இன்னும் editor.js போன்றவற்றை எப்படி பக்கங்களுக்குள் உள்ளடக்குவது எனத் தெரியவில்லை. எங்கிருந்து, எப்படி ஆரம்பிப்பது என்று உதவமுடியுமா? சிலபல பக்கங்களைத் தேடி, அரைகுறை முயற்சிகள் செய்தும் பார்த்தேன். ஆனால், இன்னும் வெற்றி என்னைத் தழுவவில்லை, நன்றி. பழ.கந்தசாமி 18:14, 1 ஆகஸ்ட் 2010 (UTC)
மீடியாவிக்கி:Common.js
[தொகு]மீடியாவிக்கி:Common.js என்பதில் /*</pre>சேர்த்துள்ளேன். சரியா?
/*</pre> அடுத்து, இடைவெளி விட்டு ===Cookies=== வருகிறது. அதனையும் நெருக்கமாக இடவா?அல்லது அப்படியே இருக்கட்டுமா?
{{--த*உழவன் 16:46, 4 ஆகஸ்ட் 2010 (UTC)}}
monobook
[தொகு]மாகிர், நீங்கள் சொன்னமாதிரி செய்து பார்த்தேன் (Monobook.js என்பதற்க்கு மாறாக monobook.js என்பதில் நீங்கள் குறிப்பிட்டவாறு செய்தேன். ஆனால் கண் என்னும் பக்கத்தில் என்ன மாறுதல் வரும்(உடல் உறுப்பு என்னும் தொங்குபட்டியில், அல்லது மேலே உள்ள தொகு என்னும் பொத்தானை அமுக்கினால்) என்று தெரியவில்லை. முன்பு இருந்தது போலவே இருப்பதாகவே நினைக்கின்றேன். என் விருப்பத்தேர்வில் சென்று வேண்டிய மாறங்களையும் செய்தேன்.--செல்வா 20:53, 15 ஆகஸ்ட் 2010 (UTC)
அரபிய அரிச்சுவடி
[தொகு]- பகுப்பு பேச்சு:அரபு மொழி என்ற பகுப்புரையினை வளர்தெடுத்தால் நல்லது. எனக்கு அரபி தெரியாது. கற்கும் ஆர்வத்தில் இருக்கிறேன். என்னுடைய பழைய நண்பர் இரகுமானைப் பார்த்தே 5,6 வருடங்கள் ஆகிறது. அவருக்கு உருதும், அரபியும் தெரியும். இயன்றால் அவரை இங்கு வர வைக்கிறேன். நீங்களும் செல்வாவும், அவரும் சேர்ந்து சிறப்பாக பணியாற்ற முடியுமெனக் கருதுகிறேன். நன்றி--த*உழவன் 00:33, 19 ஆகஸ்ட் 2010 (UTC)
- உங்களது அரபி எழுத்துக்களின் தொடக்கம் கண்டேன். எனது கருத்திட்டுள்ளேன். காப்புரிமையில்லா இத்தளத்தில், பல தகவல்கள் உள்ளன. இயலுமாயின் இச்சொற்களையும் சேர்க்கவும். புதுச்சொற்கள் பதிவேற்றம் செய்வதில் உங்களுக்கு நேரம் இல்லையெனில், உங்களுக்கு உதவ, பயனர்:TamilBOT (பொதுக்கணக்கு) காத்திருக்கிறான். உங்களின் பதிவேற்ற நேரத்தைக் குறைக்க உதவி தேவைப்படின், அங்கு மின்னஞ்சலுடன் பதியவும். நன்றி. --த*உழவன் 02:00, 20 ஆகஸ்ட் 2010 (UTC)
அரபி எழுத்துகள்
[தொகு]நீங்கள் பணி செய்யும் பொழுது இடையிடையே நான் மாற்றாமல் இருப்பது நல்லதென்று நினைக்கின்றேன். கூடியமட்டிலும் தமிழ் எழுத்துகளிலும், தமிழ் சொற்களாலும் விளக்க வேண்டுகிறேன். நீங்கள் ஓரளவுக்குச் செய்த பிறகு வந்து மாற்றுகிறேன். மெல்லொலிகளுக்கு மேலொட்டு எண் 3 தாருங்கள் இது தேவநாகரியில் ग, ज ड, द ब ஆகியவற்றுக்கு ஈடானவை. தொண்டை காற்றொலிகள், உரசொலிகளுக்கு, அரபி ஒலிப்புக் குறிகள் என்பதைப் பாருங்கள். இவற்றில் திருத்தங்கள் செய்ய வேண்டியிருந்தால் சொல்லுங்கள் செய்துவிடலாம். --செல்வா 18:59, 20 ஆகஸ்ட் 2010 (UTC) செய்துகொள்ளலாம்.
த.இ.ப. சொற்கள்+மொழிபெயர்ப்பு பெட்டி
[தொகு]en:emperor penguin உள்ளது போல, மொழிப்பெயர்ப்பு இணைப்பு வசதி அமைந்தால் மிக நன்றாக இருக்கும். அதன் மூலம் மொழிபெயர்ப்பு இருக்கும் சொற்களை மட்டும் படிக்கலாம். இணைப்பதும், புதியவருக்கும் எளிது.
தற்பொழுதுள்ள பெட்டியில், நாம் மொழிபெயர்ப்பினை எங்கு இடுவது என்று தேட வேண்டியுள்ளது. இவ்வசதி தமிழ் சொற்களுக்கு மட்டுமே பொருந்தும். எனவே, பிறகு தொடரலாமென்று நினைக்கிறேன். த.இ.ப.சொற் பதிவுகளுக்கு முன்னுரிமைத் தாருங்கள். உங்களின் இறுதி கட்ட சொல்லினைத் தாருங்கள். அது 90% முடிவடைந்து விட்டதாகக் கருதுகிறேன். நன்றி. வணக்கம்--த*உழவன் 17:33, 21 ஆகஸ்ட் 2010 (UTC)
மாஹீர்!வருகிறது.படிமம்:Dainsyng.gif. உங்கள் மின்னஞ்சல் (அ) அலைப்பேசி எண் (please prefer sms - எனது அலைப்பேசி எண் 90 95 34 33 42) தாருங்கள். எந்த நேரத்தில் பேசுவது, உங்களுக்கு வசதியாக இருக்கும். ஐந்து நிமிடங்கள் போதும். மிக்க நன்றி. வணக்கம்.
- படிமம்:Mahir test 1.PNG,
- படிமம்:Mahir test 2.PNG,
- படிமம்:Mahir test 3.PNG...
- Wiktionary:Transliteration(இப்பக்கத்திற்கும் போகிறது.அதில் தமிழ் மூலம் ஒலிகளைப் புரிந்து கொள்ள உதவும் செல்வாவின் குறிப்புகளை எளிதாக இடமுடியும்Wiktionary:ஒலிப்புதவி)
- பகுப்பு:Script templates (தெரன்சு அரபிக்கும் செய்துள்ளார்}
--த*உழவன் 01:12, 22 ஆகஸ்ட் 2010 (UTC)
{.{ஆங்கில ஆதாரங்கள்}} வழு
[தொகு]வார்ப்புரு பேச்சு:ஆங்கில ஆதாரங்கள் காணவும். {.{ஆங்கில ஆதாரங்கள்}} மூலம், ஆங்கில கூட்டுச்சொற்களுக்கும் புற இணைப்புகளுக்கான வழு நீக்கப்பட்டு அதற்குரியத் தொடுப்புகள் அருமையாக வருகிறது. நன்றி. இருப்பினும் சிறப்பு குறியீடுகள்(en:Category:English spellings by character) உள்ள ஆங்கிலச்சொற்களுக்கு பொருத்தமாக வருவதில்லை. வழக்கம் போல, இதனையும் சீர் செய்வீர்கள் என்ற நம்பிக்கையில் இதனைத் தெரியப் படுத்துகிறேன். --த*உழவன் 05:38, 24 ஆகஸ்ட் 2010 (UTC)
Hotcat
[தொகு]- drop down menu ( English Vs Tamil) என்பதனைக் காணவும்.
- Wiktionary_பேச்சு:த._இ._ப._சொற்கள்_பதிவேற்றத்_திட்டம்{.{trans-top|வசதி)}} என்பதற்கு மாற்றாக உள்ள கட்டுரைச்சுருக்க வசதி என்ன? தமிழ் விக்கிப்பீடியாவில் நீண்ட கட்டுரையில் இருப்பதாக முன்பு கூறியிருந்தீர்கள். அதுகுறித்து வழிகாட்டவும். --த*உழவன் 11:56, 27 ஆகஸ்ட் 2010 (UTC)
தந்துகைகள்(gadgets)
[தொகு]தந்துகையில் கடிகார வசதியை கொண்டு வர இயலவில்லை. அதற்குரியவைகளை வழமை போல சொல்லித்தரவும். gmailலின் அரட்டையில் சந்திப்போம். அதற்கு 15நிமிடங்களுக்கு முன், என் அலைப்பேசிக்கு குறுஞ்செய்தி அனுப்பவும். நான் கணினியில் அமர அது உதவும். நன்றி. வணக்கம்--த*உழவன் 03:37, 31 ஆகஸ்ட் 2010 (UTC)
ஒலிக்கோப்பு+HOTCAT
[தொகு]- HOTCATல் பகுப்பு என்பதனை category என்று ஆங்கில மொழியாக்கம் செய்யும் பொழுது நன்கு வேலை செய்கிறது. தமிழில் இருப்பின் வழு வருகிறது.
- ஒலிவார்ப்புருவில் கோப்பு இல்லையெனில் noicon என்று வராவண்ணம் செய்யமுடியுமா?(வார்ப்புரு பேச்சு:audio) இல்லை|150px}} படத்தில் இருப்பது போல, noicon என்ற சொல்லுக்கு மாற்றாக, இல்லை என்பது வரவேண்டும். (வார்ப்புரு பேச்சு:audio) என்பதில் விரிவாக அத்தேவையைக் குறிப்பிட்டுள்ளேன். --த*உழவன் 03:45, 16 செப்டெம்பர் 2010 (UTC)
பகுப்பு நீக்கல்
[தொகு]இப்பேச்சுப் பக்கத்தில் பகுப்புகளை நீக்குதல் பற்றி, ஐயமொன்றைக் கேட்டுள்ளேன். --த*உழவன் 15:30, 19 செப்டெம்பர் 2010 (UTC)
தானியங்கிச் சோதனை-1
[தொகு]இப்பக்கத்தில் தங்களது வாக்கினை அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். மேலும் தங்களது ஆலோசனைகளை, அதன் உரையாடற்பக்கத்திலும் தெரிவித்தால் அது மறுசீரமைப்பில் கவனத்தில் கொள்ளப்படும். நன்றி. வணக்கம்.--த*உழவன் 05:06, 8 அக்டோபர் 2010 (UTC)
- கோப்பு இல்லை என்பதனை ஒரே வரியிலும் , speaker iconனும் இணைத்தால் நன்றாக இருக்கும். ஆங்கில மேலெழுத்துபற்றி பின்னர் தெரிவிக்கிறேன். அதில் இன்னும் சிலவற்றை கவனிக்க வேண்டும். தொடரும் உங்கள் உதவிக்கு மிக்க நன்றி.--த*உழவன் 01:17, 20 அக்டோபர் 2010 (UTC)
முதற்பக்கத்தில் ---பின்னணியில்--- பகுதி
[தொகு]- மாகிர் அவர்களுக்கு வணக்கம்.
- முதற்பக்கத்தில் ---பின்னணியில்--- பகுதியை இடது பக்கம் தெரியும்படி (left side display) செய்தால் 'ஒரு நாள் (தினம்) ஒரு சொல்' சரியாக பொருந்திவரும் என்பது எனது கருத்து. தங்களால் இதனை செய்யமுடியும் என்று எண்ணுகிறேன்.--திருச்சி-பெரியண்ணன்---TRYPPN 06:57, 18 டிசம்பர் 2010 (UTC)
toolserver
[தொகு]முன்பு இப்பக்கத்தின் (in it select - Usernames usage) மூலம், எனது ஒட்டுமொத்த விக்கி பங்களிப்புகளை காண முடிந்தது. இப்பொழுது காண முடியவில்லை. ஏன்? ஆங்கிலத்தில் பயனர் கணக்கு வைத்திருப்பவருக்கு நன்றாகத் தெரிகிறது.(எ. கா.) Mahir78 --த*உழவன் 01:30, 3 ஜனவரி 2011 (UTC)
மகிழ்ச்சி
[தொகு]மாகிர், நீங்கள் தமிழ் விக்கி தொடர்புடைய பல்வேறு நுட்பப் பணிகளில் ஈடுபாடு காட்டுவது மகிழ்ச்சி அளிக்கிறது. தொடர்ந்து செயல்பட வாழ்த்துகள்--ரவி 01:19, 6 சனவரி 2011 (UTC)
தமிழ் தட்டச்சும், சீர்ப்பகுப்பாக்கி
[தொகு]தமிழ் விக்கிப்பீடியாவின் தட்டச்சு மூலங்களை அப்படியே எடுத்து, இங்கு தமிழ் தட்டச்சு வசதியை உருவாக்கினேன்.
- மீடியாவிக்கி பேச்சு:Monobook.js என்பதில் சிறு ஐயமுள்ளது. சீர்ப்பகுப்பாக்கியில் (hotcat) தமிழை தட்டச்ச முடியவில்லை? அதிலும் இதே தட்டச்சு வசதியைக் கொண்டு வர இயலுமா? வந்தால் நன்றாக இருக்கும்.
- கண்காணியில் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளேன்.
- toolserver தமிழ் ஒருங்குறித் தரவுகள் வர, எடுத்த முயற்சிக்கு நன்றி. நான் ஏதேனும் செய்ய வேண்டுமா? என்று அதனை சீர் படுத்துவர் என அறிய ஆவல்.--தகவலுழவன் 06:01, 21 பெப்ரவரி 2011 (UTC)
தினம் ஒரு சொல்
[தொகு]விக்சனரி:தினம் ஒரு சொல்/பெப்ரவரி 25 என்பதில் பலுக்கல் ஏன் வலப்பக்கம் மூலையில் சென்றுவிட்டது. ஆனால், பலுக்கல் மூலச்சொற்பக்கத்தில்(courtyard ) சரியாக அமைந்துள்ளது.
பலரின் பங்களிப்பை முதற்பக்கத்தில் காட்சி படுத்தும் போது, இது போன்ற பிறழ்வுகள் ஏற்பட்டு விடுவதால், அப்பங்களிப்பாளரின் பதிவை மாற்ற வேண்டி உள்ளது. அப்படி மாற்றினால், அவர்களின் பங்களிப்பு எனத் தெரிவிக்க இயலாதே. ஏற்கனவே, என் குறுக்கீடு அதிகம் உள்ளதாக ஒரு பேச்சு உள்ளது.
தினம் ஒரு சொற்பக்கத்தில் பலரின் உழைப்பை அப்படியே இட்டு, கீழே அவர்களின் பெயரை இட்டால் நன்றாக இருக்குமென எண்ணியே, இதனை உங்களிடம் கேட்கிறேன். ஆவலுடன்.. --தகவலுழவன் 02:07, 24 பெப்ரவரி 2011 (UTC)
- த. உழவன், விக்கியில் "be bold" தைரியமாக முடிவெடு என்பது பற்றி நீங்கள் தெரிந்திருப்பீர்கள். தினம் ஓரு சொல்லில் தொகுத்தவரின் பெயர்கள் இடுவது சரியல்ல. அந்தப் பகுதியே சொற்களை அறிமுகப்படுத்தி சேர்த்தல், திருத்தங்களை ஊக்குவிப்பதே. பயனர்களை அல்ல. தவியில் இருப்பது போன்று பயனர் அறிமுகம் பெட்டியை உருவாக்கி அதில் பயனர் அறிமுகம் தரலாம். -- மாகிர் 03:17, 1 மார்ச் 2011 (UTC)
விக்சனரி நிருவாகி தேர்தலில் வாக்களிக்க வேண்டல்
[தொகு]வணக்கம். நடைபெறும் விக்சனரி நிருவாகி தேர்தலில் தங்கள் வாக்கு அல்லது கருத்தைத் தெரிவிக்க வேண்டுகிறேன். நன்றி--ரவி 06:50, 4 மே 2011 (UTC)
தொழில்நுட்ப வசதி தேவை
[தொகு]- Auto-redirect வசதி.
- நீங்கள் எடுத்த முயற்சிக்கு நன்றி.
- கனடிய நண்பரின் சொற்கோவைப் பதிவேற்றத்தை, நாம் துவங்கலாமா? இங்கு உங்கள் ஆலோசனையையும் தரக் கோருகிறேன்.
- அனைத்துச் சொல்லுக்குமான கிரியா அகரமுதலி வார்ப்புருவிலுள்ள வழுவை நீக்கித் தருக!.
- பல பள்ளிச் சிறுவரிடம் வினவிய போது, தற்போதுள்ள பக்கப்படிவம் அவர்களுக்குக் குழப்பத்தை தருகிறது. மேலும், தினம் ஒரு சொல்லுக்கும் அது பொருந்துவதாக இல்லை என்பது எனது எண்ணம். அதிலுள்ள வடிவத்தை அடிப்படையாகக் கொண்டு, மானெலி என்ற பக்கத்தை அமைத்துள்ளேன். அது பற்றியும் விவரிக்கவும். ஆவலுடன் முடிக்கும். --12:51, 23 மே 2011 (UTC) த♥உழவன் (Info-farmer)+உரை..
- ஒரு சொல்லுக்குரியப் பக்கவடிவமானது, எப்படி இருக்க வேண்டும்? வடிவமைத்துத் தருக! பின்வரும் பக்கங்கள் சரியான வடிவமா?
- மீடியாவிக்கி:Common.css என்பதில் h1என்பதனை வெளிர் சாம்பல்நிறமாக மாற்றினேன். h2 என்பதனையும்,h4என்பதனையும் வெளிர்நீல நிறமாக மாற்ற என்னசெய்யணும். h2இல் அதற்கான நிரல்களை இட்டும், வெளிர் நீல நிறம் ஏன் தோன்றவில்லை.? h2 என்பதனை, வெளிர்நீலநிறமாக மாற்றுவதால், ஆலமரத்தடியின் தலைப்புகள் மட்டும் கண்ணுக்கு எளிதில் புலனாகும். h4 நிறமாற்றம் செய்வதால், இது போன்ற தமிழ்--->மொழிபெயர்ப்பு பக்கம்(எ. கா.) (மானெலி) எளிதில் புலனாகும்.--07:00, 16 சூன் 2011 (UTC) த♥உழவன் (Info-farmer)+உரை..
தகவலுழவன்,
h1{ background-color:#EEEEEE;font-size:1em;font-weight:bold;padding-left:5px }, h2{ background-color:#EEEFFF;font-size:1em;font-weight:bold;padding-left:5px }, h3, h4, h5, h6 { width: auto; } இதனை தனித்தனி வரியாக எழுதினால் பயனிருக்கும். கலர் கோடு சரியா என்று சோதித்து கொள்ளுங்கள்.
h1{ background-color:#EEEEEE;font-size:1em;font-weight:bold;padding-left:5px }
h2{ background-color:#EEEFFF;font-size:1em;font-weight:bold;padding-left:5px }
h3, h4, h5, h6 { width: auto;
background-color:#EEEEEE;font-size:.8em;font-weight:bold;padding-left:5px }
--மாகிர் 06:52, 19 சூன் 2011 (UTC) மிக்க நன்றி மாகிர். மற்றவரின் கருத்துக்கு இணங்க, நேரமறிந்து மாற்றி விடுகிறேன். வணக்கம்--01:48, 25 சூன் 2011 (UTC) த♥உழவன் (Info-farmer)+உரை..
தகவற்பெட்டிகளின் இரு வேறுபட்ட வடிவங்கள்
[தொகு]en:shark என்ற ஆங்கிலவிக்சனரிப் பக்கத்தில், அப்பக்கம் தோன்றும் பொழுதே, மூடியநிலைப் பெட்டியும், திறந்தநிலைப் பெட்டியும் உள்ளன.அதே வசதியை இங்கு கொண்டு வர, இச்சொல்லில் செய்து பார்த்தேன். வரவில்லை. ஏன்?--01:46, 25 சூன் 2011 (UTC) த♥உழவன் (Info-farmer)+உரை..
சொற்பிறப்பியல்
[தொகு]rural என்ற சொல்லில் சொற்பிறப்பியல் குறித்த வார்ப்புருவைப் பயன்படுத்தியுள்ளேன். நீங்கள் இட்டத்தலைப்பை கூட்டுச் சொற்கள் என்று மாற்றலாமா? அத்தலைப்புடன் இங்கு சொற்களை உருவாக்கியுள்ளேன். தங்கள் கருத்தறிய ஆவல்--06:05, 30 சூலை 2011 (UTC) த♥உழவன் (Info-farmer)+உரை..
Invite to WikiConference India 2011
[தொகு]
இந்திய விக்கி மாநாடு -- மும்பை -- நவம்பர் 18-20 2011 |
---|
வணக்கம் Mdmahir,
முதல் இந்திய விக்கி மாநாடு மும்பையில் 2011 நவம்பர் 18 முதல் 20 வரை நடைபெறவுள்ளது. மாநாட்டுக்கான 100 நாள் பரப்புரை தொடங்கவுள்ளது. நீங்கள் தமிழ் விக்கி சமூகத்தின் அங்கத்தினராக இருப்பதால், மாநாட்டிற்கு வருகை தந்து உங்களின் விக்கி அனுபவத்தை பகிர்ந்துகொள்ள அழைக்கிறோம். உங்களின் பங்களிப்புகளுக்கு நன்றி. உங்களை 18-20 நவம்பர் 2011 இல், மும்பையில் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம். |
css-இல் மாற்றம்+ api விளைவு
[தொகு]மதிப்பிற்குரிய மாகிர்!
உங்களின் கருத்துப்படி செயற்பட்டு, h5-இல் மாற்றங்களை முடித்துள்ளேன்.இப்பொழுது, h5பயன்படுத்தினால், (எடுத்துக்காட்டு - =====பொருள்=====) இங்கு நீங்கள் கூறியபடி api கொண்டு பொருள் எடுப்பதில் தடை வராதல்லவா?கருத்திடுக. நன்றி. வணக்கம்.--07:22, 20 ஆகத்து 2011 (UTC) த♥உழவன் (Info-farmer)+உரை..
ஊடக உரிம வேண்டுகோள்
[தொகு]நீங்கள் பதிவேற்றிய ஊடகங்களுக்கு உரிய உரிமம் தர வேண்டுகிறோம். முழுக்க முழுக்க உங்களின் சுயமுயற்சியால் உருவாக்கப்பட்ட ஊடகம் எனில், . {{GFDL}} என்ற உரிமத்தை இடலாம். (எ. கா.) படிமம்:DSAL-neechalkaran-spreadsheet-customised-model-word.png. மேற்கண்ட உரிமம் வழங்க உங்களுக்கு உகப்பெனில், அவ்வூடகபக்கத்தினைத் திறந்து, {{GFDL}} என்று ஒட்டினால் போதும். அவ்வாறு உரிமத்தை வழங்கவில்லையெனில் அவை நீக்கப்பட பெருமளவு வாய்ப்புள்ளது. ஐயமிருப்பின் வினவவும் .--தகவலுழவன் (பேச்சு) 04:35, 3 சூலை 2014 (UTC)