கொல்லன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


கருமான்
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

கொல்லன்(பெ)

  1. கருமான் - இரும்பைக் காய்ச்சி அடித்து பொருட்கள் செய்யும் தொழிலாளி
  2. வேல் வடிப்பவன்
  3. கஜானாக்காரன்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. blacksmith
  2. custodian of treasure
விளக்கம்
  • கொல்லன் வேறு, கொல்பவர் (கொலையாளி) வேறு.
  • கொல்லன் = இரும்புக்கடியைக் கொன்று, பொன்னுருக்கி அணி செய்பவன். கொல்லுதல் ( சிதைத்தல் ) என்ற வேர்ச்சொல்லில்லிருந்து உண்டான தொழில் ஆகுபெயர் கொல்லன்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • கொல்லன் உலைபோலக் கொதிக்குதடி யென்வயிறு
நில்லென்று சொன்னால் நிலைநிறுத்தக் கூடுதில்லை (அழுகணிச் சித்தர் பாடல், மதுரைத் திட்டம்)
  • மென்றோன் மிதியுலைக் கொல்லன் (பெரும்பாண். 207).

(இலக்கணப் பயன்பாடு)

தட்டான் - பொற்கொல்லன் - கலாதன் - கருமான் - கன்னான் - கன்னம் - தச்சன்

ஆதாரங்கள் ---கொல்லன்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கொல்லன்&oldid=1968770" இலிருந்து மீள்விக்கப்பட்டது