பட்டறை
Appearance
தமிழ்
[தொகு]
|
---|
பொருள்
[தொகு]- பட்டறை, பெயர்ச்சொல்.
- தொழிற்கூடம், தொழிற்சாலை
- குவியல்
- தானியமிடுற்கு ஓலைகளாலமைத்த படுக்கை
- கரையிலிருக்கும்போது பூமி யிற் பதியாதபடி அடியில் வைக்குந் தோணிதாங்கி
- தலையணையாக உதவும் மணை
- அடைகல்
- இயந்திரம்
- நெல்லுக் குத்தும் இயந்திரம்
- வீட்டின் உத்திரம்
- வீட்டின் தளத்திலிருந்து எழுப்ப வேண்டும் அளவில் எழுப்பிய சுவர்.
- சுவரிலிடும் மண்படை
- அதிர்வேட்டுக் குழாய்கள் பதிக்கப்பட்ட கட்டை
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- workshop, factory
- stock, heap, pile, as of straw, firewood or timber
- layer or bed of olas for grain
- frame of timbers to place under a dhoney when ashore, to keep it from the ground
- support for the head in place of a pillow
- anvil
- machine
- rice-hulling machine
- beam of a house
- wall of the required height from the flooring of a house
- a layer or course of earthwork, as in raising mud-wall
- block of wood provided with iron-tubes for explosion of gun-powder
விளக்கம்
பயன்பாடு
- வீடுகளுக்குப் பட்டறை மட்டம் ஒன்பதடி உயரத்துக்குக் குறையாமல் (சர்வா. சிற். 48).
- கிழவனாரின் கைகளில்தான் அவ்வளவு பலம் எப்படி வந்ததோ? தெரியவில்லை! கொல்லுப் பட்டறையில் சம்மட்டி அடித்த கையல்லவா? வாளை வீசிக் கொண்டு இடசாரி வலசாரியாகச் சுற்றிச் சுற்றி வந்தார். (பார்த்திபன் கனவு , கல்கி)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---பட்டறை--- DDSA பதிப்பு + வின்சுலோ +
:தொழிற்கூடம் - கசை - தொழிற்சாலை - இயந்திரம் - #