இழவு
Appearance
பொருள்
இழவு(பெ)
- சாவு, உயிரிழப்பு, இழப்பு, துக்கம்
- சரமகிரியை
- இழப்பு, நஷ்டம்
- கேடு
- தொந்தரவு
- உண்டபின் தட்டில் மிஞ்சிய எச்சில்
- வறுமை
மொழிபெயர்ப்புகள்
- death, bereavement
- funeral
- loss, deprivation, detriment
- destruction, ruin
- trouble, worry
- leavings in plates after eating
- destitution
விளக்கம்
பயன்பாடு
- இழவு வீடு
- இழவு ஊர்வலம்
- இழவுக்கு வந்தவள் தாலியறுப்பாளா?
- இழவு விழுந்த வீடு. பெருங்குரலெடுத்து அழுதவர்களும், அழுதழுது ஓய்ந்தவர்களும், ஒய்ந்தவர்களுக்கு காபி கலந்தவர்களும் காபி கலந்து சலித்தவர்களும் சலசலக்கச் செய்திருந்தனர் சாவு வீட்டை. (இழவு விழுந்த வீடு, சந்தியா, உயிர்ம்மை)
- இழவு வீட்டில் களவு கூடாது (ஜூனியர் விகடன், 03-ஏப்ரல் -2011)
- என்ன இழவுக்குப் பேருந்தில் வந்து கழுத்தறுக்கிறார்கள் எனும் வெறுப்பை உடல்மொழி உமிழ உட்கார்ந்திருப்பார்கள். ((ஏன் இந்த) வன்மம்?, நாஞ்சில்நாடன்)
(இலக்கியப் பயன்பாடு)
- உனக்கிங் கிழவென்றான் (கம்பரா.ஊர்தேடு. 83).
- செந்தொடை இழவுபடுமென மறுக்க (தொல். பொ. 406, உரை).
- பேறிழ வின்பமோடு . . . ஆறும் (சி. சி. 2, 9).
:இழ - இழப்பு - துக்கம் - சாவு - உயிரிழப்பு - #
ஆதாரங்கள் ---இழவு--- DDSA பதிப்பு + வின்சுலோ +