அந்தரம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ்[தொகு]

(கோப்பு)
அந்தரம்:
வெளி--திறந்தவெளி
அந்தரம்:
உள்வெளி
அந்தரம்:
இருள்
அந்தரம்:
ஆகாசம்-சிறு மேகங்களோடு.
அந்தரம்:
இடுப்பு

பொருள்[தொகு]

 • அந்தரம், பெயர்ச்சொல்.
 1. வெளி
 2. உள்வெளி
  (எ. கா.) பந்த ரந்தரம் வேய்ந்து (பதிற்றுப். 51).
 3. இருள் (பிங்.)
 4. ஆகாசம்
  (எ. கா.) அந்தரம் பாரிடமில்லை (திவ். திருப்பள்ளி. 7).
 5. நடு
  (எ. கா.) மற்றோ ரந்தர விசும்பில் (சீவக. 836).
 6. இடம்
  (எ. கா.) அந்தரமி தல்லவென (பாரத. ஒன்பதாம். 22).
 7. இடுப்பு
  (எ. கா.) அந்தர மேற்செம்பட்டோடு (திவ். திருவாய். 7, 6, 6).
 8. நடுவுநிலை
  (எ. கா.) அந்தரந் தீர்ந்துல களிக்கு நீரி னால் தந்தையுங் கொடியன் (கம்பரா. மந்தரை. 60).
 9. தேவலோகம் (பிங்.), விசும்பு
 10. பேதம்
  (எ. கா.) அந்தரம் பார்க்கி னன்மை யவர்க்கிலை (கம்பரா. மாரீச. 75).
 11. விபரீதம்
  (எ. கா.) விரிகோவண நீத்தார் சொல்லும் அந்தர ஞானமெல்லாம் (தேவா. 74, 10).
 12. தேவாலயம் (பிங்.)
 13. தீமை
  (எ. கா.) என்மனை வாழும் பெண்ணால் வந்த தந்தரம் (கம்பரா. கைகேசி. 40).
 14. கூட்டம் (பிங்.)
 15. முடிவு (பிங்.)

விளக்கம்[தொகு]

மொழிபெயர்ப்புகள்[தொகு]

 • ஆங்கிலம்
 1. openspace
 2. interior space
 3. darkness
 4. sky,firmament
 5. intermediate space
 6. place
 7. waist
 8. impartiality
 9. heaven
 10. difference
 11. contrariety, unsoundness
 12. temple
 13. evil
 14. crowd
 15. end, [[close]( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) Nuvola apps bookcase.svg+ DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=அந்தரம்&oldid=1898429" இருந்து மீள்விக்கப்பட்டது