நடு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

நடு:
zenith--வானுச்சி
படிமம்:Woman Measuring Waist.jpg
நடு:
waist--இடுப்பு
நடு:
equity,justice--நடுநிலை, நீதி
நடு:
earth---பூமி
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

 • நடு, பெயர்ச்சொல்.
 1. இடை
  (எ. கா.) நடுவூரு ணச்சு மரம் பழுத்தற்று (குறள். 1008).
 2. மையம் (அரு. நி.)
 3. இடைப்பட்டது
 4. வானத்தின் உச்சி
  (எ. கா.) காலைக்கதிரோ னடுவுற்றதொர் வெம்மை காட்டு| காட்டி]] (கம்பரா. நகர்நீங்கு. 123).
 5. அந்தரியாமி யான கடவுள்
  (எ. கா.) கெடுவில் கேள்வியு ணடுவாகுதலும் (பரிபா. 2, 25).
 6. இடுப்பு
  (எ. கா.) நடுங்க நுடங்கு நடுவுடைய விடங்கா லயிற்கண்ணி (திருக்கோ. 31).
 7. நடுநிலை
  (எ. கா.) நடுவாக நன்றிக் கட் டங்கியான் றாழ்வு (குறள். 117).
 8. நீதி (W.)
 9. மிதம்
 10. வழக்கு (W.)
 11. பூமி
 12. நடுதல்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

 • ஆங்கிலம்
 1. middle
 2. centre
 3. that which is intermediate, as in place or time; that which intervenes
 4. zenith, topmost part of the heavens
 5. god as immanent being
 6. waist
 7. impartiality, uprightness
 8. equity, justice
 9. medium, moderation
 10. lawsuit
 11. earth, as the middle world

சொல்வளம்[தொகு]

நடு - நடுவன் - நடுவம் -நடவு
நடுநிலை, நடுவர், நடுகல்


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=நடு&oldid=1901815" இலிருந்து மீள்விக்கப்பட்டது