அபிவாதனம்
Appearance
பொருள்
அபிவாதனம்(பெ)
-
- அபிவாதனத்தாற் பெரியோரை வணங்கல் (கூர்மபு. வியாதர்கரும. 8).
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
- respectful salutation which describes the name and lineage of the person who salutes
விளக்கம்
பயன்பாடு
- அறிவைப் புகட்டிய குரு, காயத்ரியை உபதேசித்த ஆச்சார்யனான தகப்பன், உணவுக்கு முதன்முதலில் பி¬க்ஷ அளிக்கும் அன்னை ஆகியோருக்கு அபிவாதனம் செய்ய வேண்டும். மேலும், அபிவாதனத்தை ஏற்று அனுக்கிரகம் செய்யும் தகுதி கொண்ட வேத வித்துக்களுக்குச் செய்யலாம்.
- வயதில் மட்டும் முதிர்ச்சி அடைந்தவர்கள் அல்லது வயதில் சிறியவர்கள் ஆகியோருக்கு அபிவாதனம் செய்யத் தேவையில்லை. அதேநேரம்... வயதில் சிறியவர், அறிவிலும் வேதத்திலும் சிறந்தவர், ஒழுக்கத்துடன் இருப்பவர், தர்ம காரியங்களுக்கு வழிகாட்டியாக இருப்பவர் ஆகியோருக்கு அபிவாதனம் செய்யலாம். பொதுவாக, இரண்டு பேர் சந்திக்கும்போது, "நமஸ்காரம்" என்று சொல்லி, கை கூப்பி வரவேற்கலாம். அது, அபிவாதனம் ஆகாது. பரஸ்பரம் பரிச்சயம் ஆவதற்கு அந்த நமஸ்காரம் என்ற சொல் உதவும். (கேள்வி-பதில் : சேஷாத்ரிநாத சாஸ்திரிகள், சக்திவிகடன், 29-நவம்பர்-2011)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---அபிவாதனம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +
வாதனம், ஆராதனம், வணக்கம், நமஸ்காரம், தொழுகை, மரியாதை, ஆராதனை