அர்ச்சை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

அர்ச்சை:
உத்சவர்...திருமால் தம் தேவியர்களுடன் தரிசனம்
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • அர்ச்சை, பெயர்ச்சொல்.
  • (புறமொழிச்சொல்--சமசுகிருதம்---आर्च---அர்ச1---மூலச்சொல் )
  1. விக்கிரகம்...வழிபாட்டுக்குறியது
  2. இறைவன் திருமாலின் ஐந்தாவது நிலை.

விளக்கம்[தொகு]

  • அர்ச்சை என்பது பரம்,வியூகம், விபவம், அந்தர்யாமித்துவம், அர்ச்சை என்ற ஐவகைத் திருமால் நிலைகளில் கடைசியானது...வடமொழி आर्च...அர்ச என்றால் பூசை/உருவம்/விக்கிரகம் என்றுப் பொருள்...உருவ வழிபாடு உள்ள இந்துச் சமயத்தில், திருமாலை அவரின் முதல் நான்கு நிலைகளில் வழிபடமுடியாது... கடைசி நிலையான அர்ச்சையில்தான் வழிபடமுடியும்...திருத்தலங்களிலுள்ள வைணவக் கோயில்களில் அநேக திருநாமங்களுடன் தரிசனம் தரும் உயிரூட்டப்பட்ட, திருமாலின் திருவுருவங்கள் அர்ச்சை எனப்படுகின்றன...இவை அசையா நிலையிலுள்ளவை மூலவர் என்றும் திருவிழாக்காலங்களில் வெளியே எடுத்துச் செல்லக்கூடியவை உத்சவர் என்றும் அழைக்கப்படுகின்றன...இவற்றை அர்ச்சாவதாரம்/திருப்பெயரோடு சேர்த்து அர்ச்சாமூர்த்தி என்றும் சொல்வர்...வைணவர்களின் புனிதத் தலங்களிலுள்ள விக்கிரகங்கள் அனைத்தும் அர்ச்சை அல்லது அர்ச்சாமூர்த்திகளே...இவற்றிற்கே வேத/ஆகம/சாத்திர முறைப்படி பூசைகளும், திருவிழாக்களும் நடைபெறுகின்றன...
  • இதையும் காண்க...திருமால்நிலை

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. idol, as worshipped
  2. last and final manifestations of vishnu, called arccai out of five forms viz., param, viyūkam, vipavam, antaryāmittuvam, arccai



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=அர்ச்சை&oldid=1986279" இலிருந்து மீள்விக்கப்பட்டது