உள்ளடக்கத்துக்குச் செல்

பரம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பரம்:
என்றால் திருமால் உறையும் வைகுந்தம்..திருமாலின் முதல் நிலை
பரம்:
என்றால் உடல்
பரம்:
என்றால் உடற்கவசம்
பரம்:
என்றால் கேடயம்
பரம்:
என்றால் குதிரைக்கலனை/குதிரையின் மீது உட்காரும் ஆசனம்
பரம்:
என்றால் அத்தி
(கோப்பு)

பொருள்

[தொகு]
  • பரம், பெயர்ச்சொல்.
  • (புறமொழிச்சொல்--சமசுகிருதம்--परम्/पर--ப1ரம்/ப1ர--1 முதல் 14 வரையிலான சொற்களுக்கும்...भार -பா4ர--15 முதல் 19 வரையிலான சொற்களுக்கும்---उडुम्बर-உடு3ம்ப3ர--சொல் 20 க்கும் மூலச்சொற்கள்)
  1. மேலானது
    (எ. கா.) விரதமே பரமாக . . . சாத்திரங் காட்டினர் (திருவாச. 4, 50).
  2. திருமால்நிலை ஐந்தனுள் ஒன்று (அஷ்டாதச. தத்வத். 3, 41.)---முதல் நிலை
  3. கடவுள்
    (எ. கா.) காணலாம் பரமே (திருவாச. 5, 44).
  4. மேலுலகம்
    (எ. கா.) இகபரமாகி யிருந்தவனே (திருவாச. 6, 17).
  5. திவ்வியம்
  6. மோட்சம் (பிங். )
  7. பிறவி நீக்கம் (W.)
  8. முன் (பிங். )
  9. மேலிடம்
    (எ. கா.) அகிற்புகை . . . பரங்கொடு போகி (இரகு. நகர. 4).
  10. அன்னியம்
  11. சார்பு
    (எ. கா.) தெவ்வ ரென்பார் பரமொருங்குவதலால் (கம்பரா. யுத்த. மந்திரப். 90).
  12. தகுதி
    (எ. கா.) தம்பரமல்லன வாண்மைகளை (திவ். பெரியதி. 10, 7, 13).
  13. நிறைவு (நாமதீப. 774.)
  14. நரகம் (பிங். )
  15. பாரம் (பிங். )
    (எ. கா.) மிசைப்பரந் தோண்டாது (புறநா. 30).
  16. உடல்
    (எ. கா.) இப் பரந் துடைத்தவர் (கம்பரா.கடிமண. 69).
  17. கவசம் (சூடாமணி நிகண்டு)
  18. கேடகவகை
    (எ. கா.) புளகத்தோற்பரம் (சீவக. 2218).
  19. குதிரைக்கலனை (பிங். )
  20. காண்க...அத்தி (அக. நி.)

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. That which is pre-eminent, excellent
  2. A manifestation of Viṣṇu, one of five tirumāl-nilai
  3. God
  4. heaven
  5. That which is celestial, divine or heavenly
  6. final bliss
  7. liberation from births
  8. The front
  9. upper portion
  10. That which is different or alien
  11. side, party
  12. fitness
  13. completeness, fulness
  14. hell
  15. burden, weight heaviness
  16. body
  17. armour for the body
  18. A kind of shield
  19. saddle of a horse
  20. red-wooded fig. See அத்தி




( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பரம்&oldid=1283264" இலிருந்து மீள்விக்கப்பட்டது