இயைபு
Appearance
தமிழ்
[தொகு]
|
---|
பொருள்
[தொகு]- இயைபு, பெயர்ச்சொல்.
- புணர்ச்சி (தொல். சொல். 308.)
- பொருத்தம்
- இது கேட்டபின் இது கேட்கத்தக்கதென்னும் யாப்பு (நன். சிறப்புப். விருத்.)
- காண்க...இயைபுத்தொடை (காரிகை. உறுப். 16.)
- நூல்வனப்புளொன்று (தொல். பொ. 552.) (யாப்பு)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- combination, union
- harmony, agreement, conformity, consistency, symmetry, concurrence, compatibility, unity, unanimity
- sequence of study; appropriateness; logical arrangement of subject matter which determines the order in which topics should betaken up for study
- see...இயைபுத்தொடை
- A long, continuous, narrative poem consisting of verses which end in any one of the possible consonantal endings, viz. ஞ், ண், ந், ம், ன், ய், ர், ல், வ், ழ், ள்
இலக்கியப் பயன்பாடு
[தொகு]- இயைந்து ஒழுகும் (இளம்பூரணர் உரை மேற்கோள்)
- குயில் எழுந்து இயைபுடன் நோக்கல் செல்லாது (அகநானூறு 297-9) = ஆண், பெண் குயில்கள் ஒன்று சேரக் கூவும்.
- ஏறு தொழூஉ புகுந்தனர் இயைபுடன் ஒருங்கு (கலித்தொகை 101-9)
- இன்னகைத் துவர்வாய்க் கிளவியும் அணங்கே
- நன்மா மேனிச் சுணங்குமார் அணங்கே
- ஆடமைத் தோளி ஊடலும் அணங்கே
- அரிதமர் மழைக்கணும் அணங்கே
- திருநுதல் பொறித்த திலதமும் அணங்கே.
இலக்கணப் பயன்பாடு
[தொகு]- "இயைபே புணர்ச்சி" - தொல்காப்பியம் 2-8-11
- "இறுவாய் ஒப்பின் அது இயைபு என மொழிப" தொல்காப்பியம் 3 செய்யுளியல் 92
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +