இளங்கிளை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

இளங்கிளை(பெ)

  1. இளம் கிளை
  2. தம்பி, தங்கை, மகன், மகள், மைத்துனன், தோழன், மாணாக்கன் முதலிய இளஞ்சுற்றத்தினர்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. shoot or tender branch of a plant or tree
  2. young relative such as younger sister, younger brother
விளக்கம்
  • இளங்கிளை = இளமை + கிளை = இளம் கிளை
  • "ஏவாது மாற்று மிளங்கிளையும்" (திரிகடுகம், பா.49)என்பதில் "மக்கள்" என்னும் பொருளிலும், "சீல மறியா னிளங்கிளை" (திரிகடுகம், பா.13) என்பதில் "மாணாக்கன்" என்னும் பொருளிலும், "எழுமையும் பெறு வின்ன இளங்கிளைச் சுற்ற மென்றான்" (சீவக.கனகமாலை இலம்பகம்,பா.10) என்பதில் "மைத்துனன்" என்ற பொருளிலும், இத்தொடர் வந்துள்ளமை காண்க.
  • "ஏவாது மாற்று இளங்கிளையும்" என்பதில் "இளமக்கள்" என்னும் பொருளேயன்றித் "தம்பி" என்னும் பொருளும் பயப்பதாகும். இனி, "இளங்கிளை யாரூரன்" (தேவாரம், திருக்குருகாவூர் பதிகம், பா.10) என நம்பியாரூரர் தம்மைக் கூறிக்கொள்ளுதலின், இது "தோழன், தொண்டன்" என்னும் பொருள்களும் பயப்பதாகும். (இளங்கிளை, தமிழ்மணி, 01 ஜூலை 2012)
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • மாலவற் கிளங்கிளை (சிலப். 12, 68).

(இலக்கணப் பயன்பாடு)

ஒத்த சொற்கள்[தொகு]

சொல்வளம்[தொகு]

ஆதாரங்கள் ---இளங்கிளை--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=இளங்கிளை&oldid=1986611" இலிருந்து மீள்விக்கப்பட்டது