உண்டாட்டு
Appearance
பொருள்
உண்டாட்டு(பெ)
- களியாட்டம், கொண்டாட்டம், விழா
- கள்ளுண்டு மகிழ்தலைத் தெரிவிக்கும் புறத்துறை
- விளையாட்டு
- மகளிர் விளையாட்டு வகை
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- festivity, joviality, as of warriors celebrating the seizure of cows by indulging in drink
- poems describing the merry-making of victors
- play, game
- a ladies' game
விளக்கம்
பயன்பாடு
- இன்று மாலை நாஞ்சிலுடன் திருவண்ணாமலைக்கு, நாளை ஞாயிறு மாலையில் பவா நண்பர்களின் உண்டாட்டு , நண்பர்கள் அனைவரும் வரலாம் (உண்டாட்டு – நாஞ்சில் விழா, ஜெயமோகன்)
- வெட்சி கரந்தைப் போர்களில் ஈடுபட்டு வென்று மீண்ட வீரர்களைப் பெருமைப் படுத்துவதற்காக ஊரவர் உண்டாட்டு நிகழ்த்திக் கொண்டாடிய நிகழ்வுகளைச் சங்க இலக்கியங்கள் சுவைபடப் பேசுகின்றன. உண்டாட்டு நிகழ்வுகளின் போது வீரர்கள் பாராட்டப்பட்டனர், மதித்துப் போற்றப்பட்டனர். ஊரே திரண்டு ஒப்பனைசெய்து புதுக்கோலம் புனைந்து புத்துணவு சமைத்து மதுப்பிழிந்து விடை வீழ்த்தி வெற்றி வீரர்களைப் பாராட்டியது (தந்தை வழிச் சமூகம், வெ.பெருமாள் சாமி, கீற்று)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---உண்டாட்டு--- DDSA பதிப்பு + வின்சுலோ +
:களியாட்டம் - விழா - விளையாட்டு - கொண்டாட்டம் - # - #