மதி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

மதி(பெ)

மதி:
 1. பூமியின் துணைக்கோள்
  வெண்மதி வானில் தவழ்கின்றது
 2. அறிவு
  விதியை மதியால் வெல்லலாம்
  மதிநுட்பம் - கூரிய அறிவு
மொழிபெயர்ப்புகள்
(பூமியின் துணைக்கோள்)
ஆங்கிலம்- moon
வெண்மதி - bright moon
(அறிவு, புத்தி)
ஆங்கிலம்- knowledge
சொல் வளப்பகுதி

 :பூமியின் துணைக்கோள் - நிலவு - நிலா - திங்கள் - சந்திரன்


பொருள்

மதி(வி)

 1. மரியாதை செய், கண்ணியப்படுத்து
  உன்னைப்போல் பிறரையும் மதி
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்- respect


பொருள்

மதி(இ)

முன்னிலை அசைசொல்
பயன்பாடு
 • சென்மதி பெரும
 • "மியா, இக, மோ, மதி, இகும், சின் என்னும் ஆவயின் ஆறும் முன்னிலை அசைச்சொல்" - தொல்காப்பியம் 2-7-26

சொல்வளம்[தொகு]

மதி, மதிப்பு, மதித்தல்
மதிமுகம், மதிமகன், மதிமயக்கம்
முழுமதி, கூறுமதி, நிர்மதி, வட்டமதி, காந்திமதி, பிறைமதி
ஏற்றுமதி, இறக்குமதி
மிதி, மீதி.


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) Nuvola apps bookcase.svg+ DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மதி&oldid=1969785" இருந்து மீள்விக்கப்பட்டது