ஒற்றி
Appearance
பொருள்
- இச்சொல் தமிழிலக்கணப்படி, பல்பொருள் ஒரு மொழி ஆகும்.
மொழிபெயர்ப்புகள்
ஒற்றித்தல் (வி) | ஆங்கிலம் | இந்தி |
ஒற்றுமைப் படுதல் | be united with; to become one with | |
ஒற்றையாயிருத்தல் | be odd, as numbers |
விளக்கம்
- அவற்றினான் ஆன்மா ஒற்றித்துக் காணி னல்லது (சி. போ. சிற். 5, 1)
- ஒற்றித் தொத்தலும் இரட்டித்தொத்தலும் (சிலப். 3, 152, அரும்.)
பொருள்
(பெ) - ஒற்றி
- ஒத்தி = சொத்தை அனுபவிக்கும் பாத்தியதையுடன் கூடிய அடைமானம்.
மொழிபெயர்ப்புகள்
(ஆங்)
- mortgage with possession, as of land, trees, cattle, etc
விளக்கம்
- ஒரு சொத்தின் உரிமையாளருக்கு குறிப்பிட்ட தொகையைக் கொடுத்து, அதற்கு ஈடாக குறிப்பிட்ட காலத்துக்கு அவருடைய சொத்தை தொகை கொடுத்தவர் அனுபவிக்கும் உரிமை பெறுவது. கால முடிவில் உரிமையாளர் தொகையைத் திருப்பிக் கொடுத்துவிட்டுச் சொத்தைத் திரும்பப் பெறுவார்
- "மாதாமாதம் வாடகை கொடுத்து இருப்பதைவிட ஒற்றிக்கு வீடு கிடைத்தால் நன்றாக இருக்குமே; வாடகைப் பணமாவது மிச்சம் ஆகுமே" என்று நினைத்தார் (He thought he could save the monthly rent if he could get a house on mortgage with possession)
- "மூன்று லட்ச ரூபாய்; மூன்று ஆண்டு ஒற்றி" என ஒப்பந்தம் போட்டு புதிய வீட்டில் குடியேறினார் (He moved into a house on mortgage of Rs. 3 lakhs that allows him to possess the house for 3 years)
{ஆதாரங்கள்} --->