கயந்தலை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
தமிழ்


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

கயந்தலை(பெ)

  1. குழந்தையது போன்ற மெல்லிய தலை
  2. குழந்தை
  3. யானைக் கன்று
  4. மனத்துயர்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. soft head, as of a child
  2. child
  3. young elephant, having a tender head
  4. sorrow, grief
விளக்கம்
பயன்பாடு
  • "என்னேண். இது உமையம்மை நாச்சியாருக்கு வயக்கரையில்லா?.."
"எந்த உமையம்மைலே?"
"கீளத்தெரு...செத்துப்போன இசக்கியா பிள்ளைக்குப் பொண்டாட்டி"
"அதுக்கு?.."
"பாவப்பட்ட அறுதலி வயத்திலே மண்ணுவிளும்... இந்தப் பதினெட்டு மரக்கா விதைப்பாட்டை வச்சுத்தான் நாலஞ்சு கண்ணுங் கயந்தலைகளைக் காப்பாத்துகாவ.." (உடைப்பு, நாஞ்சில்நாடன்)

(இலக்கியப் பயன்பாடு)

பிடியூட்டிப் பின்னுண்ணுங் களிறெனவு முரைத்தனரே (கலித். 11)

ஆதாரங்கள் ---கயந்தலை--- DDSA பதிப்பு + வின்சுலோ +

சொல் வளப்பகுதி

 :மென்மை - கய - கயம் - கயப்பு - யானை - கன்று - களிறு

"https://ta.wiktionary.org/w/index.php?title=கயந்தலை&oldid=1263356" இருந்து மீள்விக்கப்பட்டது