உள்ளடக்கத்துக்குச் செல்

சல்லிக்கட்டு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


சல்லிக்கட்டுநிகழ்படம்
சல்லிக்கட்டு
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

சல்லிக்கட்டு (பெ)

மொழிபெயர்ப்புகள்

(ஆங்)

விளக்கம்
  • தமிழகத்தில் பொங்கலன்று நடைபெறும் சல்லிக்கட்டு (மஞ்சுவிரட்டு) பழம்பெருமை வாய்ந்தது. சல்லி என்பதற்கு பணம் என்பது பொருளாகும். பண முடிப்பை, மாட்டின் கொம்புகளுக்கிடையே கட்டி விடுவர். அம்மாட்டினை அடக்குவோர், அப்பணமுடியை எடுத்துக் கொள்ளலாம்.
  • பலர் ஜல்லிக்கட்டு என்றே உச்சரிக்கின்றனர்.. இது சரியான தமிழ் பலுக்கல் அல்ல.
  • மஞ்சு + வெருட்டு -->மஞ்சிவிரட்டு--மஞ்சுவிரட்டு=ஏறு(காளை)தழுவல்=சல்லிக்கட்டு-->ஜல்லிக்கட்டு.
  • மஞ்சு என்ற சொல்லுக்கு யானையின் முதுகு என்று பொருளும் உண்டு. யானையின் முதுகில் பயன் செய்வது, வீரமாகக் கருதப்படுகிறது. அரசன் மட்டுமே செய்யமுடியும். அதற்கு ஈடான வீரம் உடைய விளையாட்டு.

(வாக்கியப் பயன்பாடு)

பயன்பாடு
  • பரிசுத் தொகையாக சல்லி (காசுகளை) கொம்பில் கட்டப்பட்ட காரணத்தால் சல்லிக்கட்டு என்று அழைக்கப்பட்டது இவ்விளையாட்டு (தலையங்கம்:இப்படி யோசித்தால் என்ன? தினமணி, 21 சன 2011)
  • ஜல்லிக்கட்டு என்பது தமிழ்நாட்டில் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொருவிதமாக நடைபெறுகிறது. மதுரை அலங்காநல்லூர் போன்ற இடங்களில் வாடிவாசல் வழியாக வெளியேறும் காளைகளை இளைஞர்கள் விரட்டிச் சென்று அதன் திமில் மீது தொங்கியபடி குறிப்பிட்ட தூரம் செல்கிறார்கள். வேலி மஞ்சுவிரட்டு எனப்படும் விளையாட்டில் ஒரு திடலில் காளை அவிழ்த்துவிடப்படுகிறது. அவை எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் ஓடுவதும் அவற்றை இளைஞர்கள் விரட்டுவதும் நடைபெறுகிறது. வடதமிழகத்தில் வடம் மஞ்சுவிரட்டு என்ற பெயரில், 20 அடி நீளக் கயிற்றால் காளையைக் கட்டி, இருபுறமும் காளையை ஆண்கள் இழுத்துப் பிடிக்க, ஒரு சிலர் மட்டும் அதன் முன்னே நின்று கொம்பில் உள்ள பரிசுப் பணத்தை எடுக்க முயல்வது. (தலையங்கம்:இப்படி யோசித்தால் என்ன? தினமணி, 21 சன 2011)

{ஆதாரம் சென்னைப் பல்கலைக் கழக இணையப் பேரகரமுதலி }

"https://ta.wiktionary.org/w/index.php?title=சல்லிக்கட்டு&oldid=1245336" இலிருந்து மீள்விக்கப்பட்டது