சில்லறை
Appearance
பொருள்
சில்லறை(பெ)
- பெரிய தொகையை மாற்றினால் ஈடாகக் கிடைக்கும் சிறிய பணத்தாட்களும் காசுகளும்; சில்வானம்
- சிறிய மதிப்புள்ள நாணயம்; காசு
- வியாபாரத்தில் நுகர்வோருக்கு நேரடியான விற்பனை
(உ)
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்:
விளக்கம்
- ஒரு பெரிய தொகையை சில பகுதிகளாக அறுப்பதால் கிடைப்பவை 'சில்லறை' என்று வழங்கப்படுகிறது. இச்சொல் சில்லரை என்று தவறாக வழங்கப்படுவதும் உண்டு.
பயன்பாடு
- 10 ரூபாய்க்குச் சில்லறை கிடைக்குமா?
- சில்லறை வியாபாரி
- சில்லறைத்தனமான செயல்
ஆதாரம் --->David W. McAlpin என்பவரின் கருவச் சொற்பொருளி - சில்லறை
:சில் - சிறுவாடு - சில்வானம் - சில்லுணா - சில்மிஷம் - சில்லொண்டி