சீம்பால்
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
சீம்பால்(பெ)
- பசு, ஆடு முதலிய விலங்குகள் கன்று ஈன்றவுடன் சுரக்கும் அடர்ந்த, சற்று மஞ்சளான பால்
- காய்ச்சித் திரட்டிய சீம்பால்; திரட்டுப்பால்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- the first milk from an animal, especially cattle, after calving; beastings of an animal, especially cow; colostrum
- beestings boiled into a paste
விளக்கம்
பயன்பாடு
- பசுமாடு கன்று ஈன்ற முதல் ஐந்தாறு நாட்களுக்குச் "சீம்பால்" என்ற கெட்டியான பாலைச் சுரக்கும். அந்தப் பாலைக் கறந்து, கருப்பட்டியைச் சேர்த்துக் காய்ச்சினால் திரள்திரளான பாலாக மாறும். அந்தச் சீம்பாலைத் தித்திப்புக் காரணமாகக் குழந்தைகள் விரும்பிக் குடிப்பார்கள். சீம்பாலைப் பிறருக்கு விற்பனை செய்ய மாட்டார்கள். பெரும்பாலும் மாட்டின் உரிமையாளர்கள், நெருங்கிய உறவினர்கள் மட்டும்தான் சீம்பாலைக் குடிப்பார்கள்., பிறருக்குச் சீம்பால் தரும் வழக்கமில்லை. (ஆடும் மாடும் எங்கள் கூட்டம், ந. முருகேசபாண்டியன், உயிர்மை)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
- சீழ்ப்பால் - சீ - கடும்பால் - கடும்புப்பால் - சீப்பால் - நச்சுப்பால் - பீயூசம்
ஆதாரங்கள் ---சீம்பால்--- DDSA பதிப்பு + வின்சுலோ +