தரங்கம்
Appearance
பொருள்
தரங்கம்(பெ)
- அலை, நீர்த்திரை
- நீர்த்தரங்க நெடுங்கங்கை(பெரியபு. தடுத்தாட். 165).
- கடல்
- தரங்கம் பரமபதம் (அஷ்டப். திருவேங்கடத்தந். 56).
- மனக்கலக்கம், கலக்கம்,
- தரங்கமெய்திச்சனங்களெல்லா மிரீஇ (கந்தபு. நகாழி. 78).
- இசையலைவு
- ஒண்டரங்கவிசைபாடு மளியரசே (தேவா. 87, 1).
- ஈட்டி
- தரங்கத்தாற் பாம்பைக் குத்தினான்
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- கத்தும் தரங்கம் எடுத்தெறியக் கடுஞ்சூல் உளைந்து வலம்புரிகள்
- கரையில் தவழ்ந்து வாலுகத்திற் கான்ற மணிக்கு விலையுண்டு (திருச்செந்தூர் முருகன் பிள்ளைத் தமிழ், பகழிக்கூத்தர்)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---தரங்கம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +