உள்ளடக்கத்துக்குச் செல்

திருக்குறள்அகரமுதலி ஒகரவரிசை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

பார்க்க:

திருக்குறள்
திருவள்ளுவமாலை
திருக்குறள் முதற்குறிப்பு அகரமுதலி
திருக்குறள் கடைச்சொல் அகரமுதலி


திருக்குறள் அகரமுதலி ஒகர வரிசை

[தொகு]

ஒக்க

[தொகு]
ஒக்க
= ஒத்திருப்பதாக, 490.
ஒக்கல்
= சுற்றத்தார், 43.
ஒக்கின்
= ஒத்திருக்குமானால், 1100.
ஒக்கும்
= நிகர்க்கும், 972, 1112.

ஒடுக்கம்

[தொகு]
ஒடுக்கம்
= காலம் பார்த்திருக்கின்ற இருப்பு, 486.
ஒடுங்கும்,
= மறைந்திருக்கும், 828.
ஒட்ட
= பொருந்த, 140, 482.
ஒட்டல்
= தாக்குதல், 499.
ஒட்டார்
= பகைவர், 826.
ஒட்டாரை
= பகைவரை, 679.
ஓட்டார்பின்
= இகழ்வார்பின், 967.
ஒட்டி
= நட்பாக்கி, 679.
ஒட்பம்
= அறிவுடைமை, 404, 425.

ஒண்

[தொகு]
ஒண்
= நெறியால் வருகின்ற, 760.
= மிளிர்கின்ற/பிரகாசமான, 1009, 1088, 1101, 1240.
ஒண்மை
= நல்லறிவு, 844.

ஒத்தது

[தொகு]
ஒத்தது
= உலகநடை, 214.
ஒத்தல்
= நிகர்த்தல், 993.
ஒத்தாங்கு
= ஒத்திருக்க, 561.
ஒத்தி
= (நீ)ஒத்திருக்கவேண்டுகின்றாய்(ஆனால்), 1119.

ஒப்ப

[தொகு]
ஒப்ப
= நிகர்க்க, 702.
ஒப்பது
= போல்வது 162, 363, 536, 621;
= (இனிப்) பொருந்துவது, 993.
ஒப்பர்
= நிகர்ப்பர், 413, 730.
ஒப்பாரி
= நிகர்த்தல், 1071.
ஒப்பு
= நிகர்த்தல், பொருந்துதல், 800, 812, 993.
ஒப்புரவிற்கு
= [ஒப்பு = ஒத்திருத்தல், உரவு = வலிமை; ஒப்புரவு = ஒத்தலால் வலிமை பெறுதல், எனவே]
= உலகநடை அறிந்து செய்தல், 218.
ஒப்புரவின்
= ஒப்புரவு போல, 213.
ஒப்புரவினால்
= ஒப்புரவு செய்தலால், 220.
ஒப்புரவு
= உலகநடை, 480, 983;
= உலகநடையினை அறிந்து செய்தல் அதி.22 [ஒப்புரவறிதல்]

ஒரார்

[தொகு]
ஒரார்
= நீங்காதவராய், 658.
ஒரால்
= நீக்குதல், 153;
= செய்யாமை, 662.
ஒரீஇ
= ஒருவி= ஒழிந்து, 116, 422, 797, 830, 1009.
ஒரு
= ஒன்றாகிய, 118, 156, 337, 1042, 1091, 1095, 1146, 1266, 1269;
= ஒருமுறை[ஒருகால்] 248;
= உறுதியாக[ஒருதலையா], 119;
= தெளிய, 357;
= துணிவாக, 634;
= ஒருசார்பின் கண் [ஒருதலையான்], 196;
= ஒப்பில்லாத, 168.
ஒருங்கு
= ஒருசேர, 343, 554, 610, 760, 951, 1056;
= முழுவதும், 733.
ஒருத்தியை
= ஒரு பெண்ணுக்கு, 1313.
ஒருமை
= ஒரு பிறப்பின் கண், 835;
= கவராத மனத்தினையுடைய/ கற்பையுடைய, 974.
ஒருமைக்கண்
= ஒரு பிறப்பில், 398.
ஒருமையுள்
= ஒரு பிறப்பில், 126.
ஒருவந்தம்
= உறுதியாக, 563;
= ஊறுதியாகிய[ஊக்கம் ஒருவந்தம் கைத்துடையார்], 593.
ஒருவரால்
= ஒருவராலும், 1004.
ஒருவர்கண்
= ஒருவரிடத்தில் (மட்டும்), 1197.
ஒருவற்கு
= ஒரு மகனுக்கு, 40, 95, 398, 400, 414, 454, 600, 797, 971, 988, 1023, 1026, 1052.
ஒருவன்
= ஒரு மகன், 38, 161, 181, 220, 226, 336, 397, 405, 609, 661, 838, 871, 875, 967;
= ஒருவனுக்கு, 1021.
ஒருவனை
= ஒரு மகனை, 366.
ஒருவுக
= விடுக, 800.
ஒருவுதல்
= ஒழிதல், 652.
ஒரூஉம்
= ஒழியும்[ஒரூஉம் கேண்மை], 812.

ஒலித்தக்கால்

[தொகு]
ஒலித்தக்கால்
= ஆரவாரித்தால், 763.
ஒல்காமை
= தளராமை, 662.
ஒல்கார்
= சுருங்கார், 136;
= தளரார், 218, 597.
ஒல்லா
= முடியமாட்டா, 136;
= (துயிறலைப்) பொருந்தா, 1136;
= ஒல்லாத= உடம்படாத, 1064;
= உடம்படாமல், 1271.
ஒல்லாக்கால்
= இயலாதவிடத்து, 673.
ஒல்லாது
= செய்யாது, 559;
= மேவாது, 870.
ஒல்லானை
= மேவாதானை, 870.
ஒல்லும்
= இயலும், 33, 673, 789;
= முடியும், 818.
ஒல்லை
= கடிதின், 563, 564, 826, 1096.
ஒல்வது
= இயல்வது, 472;
= கூடும், 1149.

ஒவ்வா

[தொகு]
ஒவ்வா
= நிகர்க்கமாட்டா, 972.
ஒவ்வேம்
= நிகர்க்கமாட்டோம், 1114.

ஒழித்து

[தொகு]
ஒழித்து
= கடிந்து= நீக்கி[ஒழித்துவிடின்], 280.
ஒழிபு
= ஒழிந்தது/மிச்சமானது, அதி.96-108வரை [ஒழிபியல்]
ஒழிய
= நீங்க, 113, 338;
= உண்டாகாமல், 240;
= நிற்க, 1231.
ஒழுக
= நடந்துகொள்ள, 111, 446, 855.
ஒழுகப்படும்
= நடந்துகொள்ளத்தகும், 154;
= (பொருந்த) ஒழுகுதல் செய்யப்படும், 598.
ஒழுகல்
= நடந்துகொள்ளுதல், 140, 286, 482, 524, 845;
= நடந்து கொள்க, 602, 694;
= அதி.70 [மன்னரைச் சேர்ந்தொழுகல்]
ஒழுகலான்
= நடந்துகொள்ளுதலால், 30, 445, 1073.
ஒழுகலான்
= நடந்து கொள்ளாதவனாய், 474.
ஒழுகின்
= நடந்துகொண்டால், 294, 359, 892, 974.
ஒழுகுதல்
= நடந்து கொள்ளல், 444.
ஒழுகுபவர்
= நடந்து கொள்பவர், 908.
ஒழுகும்
= நடந்து கொள்ளும், 141, 278, 551, 563, 603, 874;
= செய்து திரிகின்ற, 907.
ஒழுகுவார்
= நடந்து கொள்பவர், 143, 246, 691, 896, 921.
ஒழுகுவான்
= நடந்து கொள்பவன், 326;
= நடந்து கொள்வானாய், 1197.
ஒழுக்க
= ஒழுக்கமாகிய/ஆசாரமாகிய (நெறி), 6.
ஒழுக்கத்தின்
= ஒழுக்கத்தினின்றும், 136;
= ஒழுக்கத்தினால், 137.
ஒழுக்கத்து
= ஒழுக்கத்தின் கண்ணே (நின்று), 21.
ஒழுக்கம்
= (நல்)நடத்தை/ ஆசாரம், 131, 132, 133, 134, 135, 138, 139, 271, 275, 415, 952;
= ஒழுக்கத்தினை(ஆசாரத்தை) உடையராதல், அதி.14[ஒழுக்கமுடைமை]
= அதி.28[கூடாவொழுக்கம்]
ஒழுக்கி
= ஒழுகப் பண்ணி, 48.
ஒழுக்கு
= நீர் ஓடுதல், 20;
= ஆசாரம், 148, 161.

ஒள்

[தொகு]
ஒள்
= கூர்மையான, 727;
= பிரகாசமான, 1088, 1125.
ஒளி
= பிரகாசம் 27, 267, 1118;
= விளக்கு, 390;
= புகழ், 556, 870, 921, 939, 970;
= தலைவி [ஒளியிழை], 1329;
= நன்கு மதிக்கப்படுதல், 653, 971.
ஒளிக்கும்
= மறையும், 1070.
ஒளித்தது
= மறைந்த குற்றம், 928.
ஒளியார்
= (மிக்காரும் ஒத்தாருமாகிய) அறிஞர், 714.
ஒளியோடு
= (உறங்காநிற்கவும் தாம் உலகங்காக்கின்ற அரசரது) கடவுட்டன்மையோடு, 698.
ஒள்ளியர்
= அறிஞர், 714.
ஒள்ளியவர்
= அறிவுடைய அரசர் 487.

ஒறுக்கிற்பவர்

[தொகு]
ஒறுக்கிற்பவர்
= எள்ளுதற்கு உரியார், 779.
ஒறுத்தல்
= தண்டித்தல், 314, 550.
ஒறுத்தாரை
= தண்டித்தவரை, 155.
ஒறுத்தார்க்கு
= தண்டித்தவருக்கு, 156.
ஒறுத்து
= தண்டித்து;
= தண்டிக்கும் (இயல்புடையார்),[ஒருத்தாற்றும்- ஒருசொல் நீரது], 579.
ஒறுப்பது
= தண்டிப்பது, 561.
ஒற்கத்தின்
= தளர்ச்சியில், 414.
ஒற்றி
= உளவறிந்து, 583, 588;
= மறைத்து, 927;
= தொட்டு (எண்ணுதலால்), 1261.
ஒற்றினால்
= உளவாளியால், 588.
ஒற்றினான்
= உளவாளியால், 583.
ஒற்றின்கண்
= உளவாளியிடத்தில், 590.
ஒற்று
= உளவாளி, 581, 584, 585, 586, 587, 588, 589;
= ஒற்றரை ஆளுதல், அதி.59 [ஒற்றாடல்]

ஒன்றல்

[தொகு]
ஒன்றல்
= கூடுதல்/பொருந்தல், 886.
ஒன்றன்
= ஒன்றினுடைய, 253, 257, 259.
ஒன்றாமை
= பகைமை, 886.
ஒன்றியார்கண்
= தனக்கு உள்ளாயினார் மாட்டு, 886.
ஒன்று
= அளவு, 87;
= ஒன்றை, 109;
= ஒன்று (ஆயினும்), 128;
= ஓர் அறம், 111;
= ஒரு பொருள், 155, 221, 232, 334, 344, 800, 838, 1006, 1007, 1035;
= ஒன்று என்னும் எண், 253, 438, 831, 875, 932, 934, 1091, 1202, 1241, 1252, 1255, 1257, 1275;
= இணையில்லாதது, 233, 323;
= ஒரு = உபாயம், 380;
= ஒரு வினை, 758;
= ஒரு தாழ்வு, 778;
= ஒரு துன்பம், 839, 1080, 1202;
= ஒரு பாவி, 1216;
= ஒரு காரியம், 1271;
= ஒரு குறிப்பு, 1273, 1274;
= இன்பம், 1325;
= விகல்பப் பொருள் [ஒன்று காமம் விடு, ஒன்று நாண்விடு], 1247;
= சிறிதாயினும் [எனைத்தொன்றும்], 209, 281, 300, 825, 1241;
= சிறிதாயினும் [யாதொன்றும்], 291, 324, 462, 833, 1049.
ஒன்றோ
= அதுமட்டுமா? 148, 805, 836.

ஒன்னார்

[தொகு]
ஒன்னார்
= பகைவர், 165, 264, 630, 756, 828.
ஒன்னார்கண்
= பகைவர் மாட்டு, 827.
ஒன்னார்க்கு
= பகைவர்க்கு, 608.

திருக்குறள் அகரமுதலி ஒகரவரிசை முற்றும்

[தொகு]

பார்க்க:

திருக்குறள் அகரமுதலி

திருக்குறள்

இகரவரிசை|ஈகாரவரிசை |உகரவரிசை |ஊகாரவரிசை || எகரவரிசை|ஏகாரவரிசை| ஐகாரவரிசை|ஒகரவரிசை|ஓகாரவரிசை

ககரவரிசை|காகாரவரிசை