திருக்குறள்அகரமுதலி காகாரவரிசை
Appearance
திருக்குறள் அகரமுதலி காகார வரிசை
[தொகு]அக இணைப்பான்கள்
[தொகு]கா காட் காண் காத் காய் காம் காய் கார் கால் காவ காழ் கான கிட கிழ கிள கீழ்
கா
[தொகு]கா
- கா
- = (காவடி) காத்தண்டு, 1163;
- = காவடிச் சுமை, 1196.
காக்க
[தொகு]- காக்க
- = காப்பாற்றுக, 122, 127, 132, 281, 305, 434;
- = பரிகரிக்க, 883.
- காக்கின்
- = தடுத்தால், 301;
- = காப்பாற்றிக் கொள்ள நினைத்தால், 305.
- காக்கும்
- = காப்பாற்றுவான், காப்பாற்றும் 547;
- = காப்பாற்றும்,[காக்கும்-காப்பு, கருவி, அறிவினார்க்கு, பெற்றியார்] 57, 421, 429, 442.
- காக்கை
- = காவெனக் கத்துதலையுடையது: காகம், 481, 527.
காடிக்கு
[தொகு]- காடிக்கு
- = புளிப்புநீருக்கு (நீராகாரத்திற்கு), 1050.
- காட்சிக்கு
- = காண்டற்கு, 386.
- காட்சியவர்
- = அறிவுடையவர், 174, 199, 218, 654, 699.
- காட்சியவர்க்கு
- = அறிவுடையார்க்கு, 352.
- காட்சியார்
- = அறிஞர், 258.
- காட்ட
- = காண்பித்தலால், 1171.
- காட்டி
- = காண்பித்து, 167, 334;
- = புலப்படுத்தி, 454.
- காட்டிய
- = காண்பிக்க வேண்டி, 1313.
- காட்டிவிடும்
- = கண்கூடாகக் காண்பிக்கும், 28.
- காட்டுதல்
- = காட்டித் தெளிவித்தல், 929.
- காட்டும்
- = கொண்டு காட்டும், 706;
- = காண்பிக்கும், 959;
- = [காட்டும் பளிங்கு] கொண்டு காட்டும் (பளிங்கு), 706.
- காட்டுவான்
- = அறிவிக்கப் புகுகின்றவன், 849.
காண்
[தொகு]- காண்
- = இலக்கணச் சொல்: முன், அசை, வியப்புக்குறி, 1185, 1202;
- = (உரையசை) 1294.
- காண
- = உண்டாக்க, 1079;
- = பார்க்க, 1119, 1140, 1210, 1281.
- காணப்படும்
- = அறியப்படும், 114, 185, 349, 1327;
- = உண்டாம், 298.
- காணல்
- = பார்த்தல், 1244.
- காணா
- = காணமாட்டாத, 866, 1285.
- காணாக்கால்
- = காணாதபோது, 1286.
- காணாதவர்
- = கண்டறியாத மகளிர், 1219.
- காணாதான்
- = பிறரால் ஒன்று அறியாத தன்மையில்லாதவனை, 849.
- காணாது
- = காணாமல், 1178, 1283.
- காணார்
- = அறிய மாட்டார், 857, 1220.
- காணான்
- = நினையான், 859;
- = அறியான், 1197;
- = அறியாதவன், 849.
- காணின்
- = கண்டால், 488, 1040, 1051, 1056, 1057, 1074, 1079, 1112, 1114;
- = (வாய்க்குமிடம்)பெற்றால், 821.
- காணுங்கால்
- = பார்க்கும்போது, 710, 930, 1286.
- காணும்
- = பார்க்கும் = நினைக்கும் 859;
- = [காணும் ~ அளவு, பூ] பார்க்கும் (அளவும்), 224;
- = பார்க்கப்படும் (பூ), 1112.
- காணேன்
- = நான் காண்கின்றிலேன், 1167, 1286;
- = காணமாட்டேன், 1285.
- காண்க
- = காண்பேனாக, 1265.
- காண்கம்
- = காணக்கடவோம், 1301.
- காண்கிற்பின்
- = காணமுடியுமானால், 190, 436.
- காண்டலின்
- = கண்ட காட்சியால், 1213.
- காண்பது
- = காணுதல், 355, 358, 423, 424.
- காண்பர்
- = பார்ப்பார், 620, 1034.
- காண்பவர்
- = இயைந்து அநுபவிப்பவர், 379.
- காண்பான்
- = அநுபவித்து அறிகின்றவன், 99;
- = பார்ப்பவன், 656.
- காண்பு
- = காணல், 16.
காதல்
[தொகு]- காதல்
- = வேட்கை, 284, 440, 921, 1298;
- = காமவேட்கை, 1195, 1242;
- = [காதற்சிறப்புரைத்தல்]= தலைமகன் தன் காதல் மிகுதி கூறலும், தலைமகள் தன் காதல் மிகுதி கூறலுமாம், அதி. 113.
- காதல
- = காதலித்த பொருள்கள், 440.
- காதலம்
- = காதலையுடையேம், 1314.
- காதலர்
- = காதலையுடையவர், 1150, 1185, 1208, 1211, 1216, 1219, 1224, 1246, 1278, 1308.
- காதலவர்
- = ஆசையுடையவர் 286;
- = காமவேட்கையுடையவர் = காதலர், 1126, 1127, 1128, 1249.
- காதலன்
- = காதல் (=அன்புசெய்தல்) உடையவன், 209.
- காதலார்கண்
- = காதல் உடையவர் மாட்டு, 1099.
- காதலிக்கும்
- = காதலைச் செய்யும் = விரும்பும் (சூதன்), 940.
- காதலை
- = காதலையுடையாய், 1118.
- காதற்று
- = காதலையுடையது, 940.
- காதன்மை
- = அன்புடைமை, 507, 832.
- காத்த
- = காப்பாற்றியவை, 385.
- காத்தல்
- = தடுத்தல், 29;
- = காப்பாற்றுதல், 385, 632.
- காத்து
- = காப்பாற்றி, 56, 130, 549;
- = போற்றி, 642.
காப்ப
[தொகு]- காப்ப
- = (மறதிபுகாமல்) காப்பாற்றிக் கொள்ள, 878.
- காப்பான்
- = காப்பாற்றுபவன், 24, 301.
- காப்பின்
- = பாதுகாப்போடு, 744.
- காப்பு
- = காவல், 57, 781, 1038;
- = காத்தல், 388.
காம
[தொகு]- காம
- =[காமக்கலன்] விரும்பிய (மரக்கலம்), 605;
- = காமமாகிய, 1134, 1159, 1164, 1167, 1175, 1251, 1255, 1280.
- காமத்தால்
- = காதலால், 1257.
- காமத்தான்
- = காமம் உடையவன், 866.
- காமத்தில்
- = மெய்யுறு புணர்ச்சியில், 1092.
- காமத்திற்கு
- = காமமுடையவருக்கு, 1281;
- = காமநுகர்ச்சிக்கு, 1330.
- காமத்து[]
- = காம நுகர்ச்சியாகிய (கனி), 1191;
- =[காமத்துப்பால்] அதி. 109 முதல் 133 வரை.
- காமத்தை
- = காதலை, 1253.
- காமம்
- = காதல் = பெண்ணின்பால் இன்பம் விழைதல், 360, 1090, 1109, 1110, 1131, 1137, 1138, 1139, 1144, 1145, 1148, 1163, 1166, 1196, 1201, 1202, 1247, 1252, 1254, 1282, 1289, 1306, 1326;
- = இன்பம், 1214;
- = காமத்துடன், 1264.
- காமன்
- = வேள், 1197.
- காமுறுதல்
- = விரும்புதல், 402.
- காமுறுவர்
- = விரும்புவர், 399, 649.
- காமுற்றார்
- = காதல் மிக்கவர், 1133.
- காமுற்று
- = விரும்பினாற் (போலும்), 402.
- காம்பு
- = மூங்கில், 1272.
காய்
[தொகு]- காய்
- = (இன்னாத) காய், 100;
- =[கருக்காய்] இளங்காய், 1306.
- காயார்
- = வெகுளார், 1208.
- காயின்
- = சினந்தால், 707.
- காயும்
- = எரிக்கும், 77;
- = வெகுளும், 1313, 1319, 1320.
- காய்தி
- = நீ வெகுள்கின்றாய், 1246.
- காய்வார்
- = (குளிர்)காய்பவர், 691.
- காய்வு
- = சினத்தல், சினம், (நிலையில்)வெறுப்பு, 1246.
கார்
[தொகு]- கார்
- = கருமையுடைய = இருண்ட (அறிவு), 287.
- காரணத்தின்
- = ஒன்று குறித்து = நிமித்தத்தால், 530.
- காரணம்
- = முதல், அடிப்படை, 270 529, 929.
- காரிகை
- = அழகு, 571, 1262, 1272;
- = அலங்காரம், 777.
கால்
[தொகு]- கால்
- = [ஒரு கால்] (ஒரு)பொழுது, 248;
- = பொழுது, 36, 379, 674, 710, 733, 859, 930, 1064, 1104, 1166, 1179, 1218, 1285, 1286;
- = முதல் = அடிமரம் (வழிக்கு உரியார்), 1030;
- = உருளை, 496;
- = பாதம் = அடி, 500, 840;
- = முளை, 959;
- = முகிழ் = காம்பு, 1115;
- = இலக்கணப் பொருள்: எதிர்மறை வினையெச்ச விகுதி, 14, 127, 301, 305, 362, 489, 503, 673, 695, 763, 773, 830, 987, 1080, 1094, 1270, 1296.
- காலத்தால்
- = காலத்தோடு பொருந்த, 686.
- காலத்தினால்
- = காலத்தோடு = இறுதி வந்த எல்லைக்கண், 102.
- காலத்தோடு
- = உரிய பொழுதொடு(படுத்து), 516.
- காலம்
- = காலப்பொழுது, பருவம், 483, 485, 487, 631, 675, 696, 830, 949;
- = செவ்வி, 687;
- = [காலமறிதல்] = வலியான் மிகுதியுடையனாய்ப் பகைமேற் சேறலுற்ற அரசன் அச்செலவிற்கேற்ற காலத்தினையறிதல், அதி.49.
- காலை
- = காலத்தில், 799;
- = பொழுது, 937, 1094;
- = முன்னே, 1236;
- = விடியல், 1227.
- காலைக்கு
- = விடியற்காலைக்கு, 1225.
காவலன்
[தொகு]- காவலன்
- = காத்தலில் வல்லவன் = மன்னன், 560.
- காவாக்கால்
- = காப்பாற்றா விட்டால், 127;
- = தடுக்காவிடில், 301, 305.
- காவாதான்
- = (குற்றம்)கடிந்துகொள்ளாதவனது, 435.
- காவாது
- = காக்காமல், 535.
- காவார்
- = காக்கமாட்டார், 127.
- காவான்
- = காக்க மாட்டான், 560.
காழ்
[தொகு]- காழ்
- = பரல் = விதை, 1191.
- காழ்த்தவிடத்து
- = முதிர்ந்த நிலைமையில் = வைரம் பாய்ந்தால், 879.
- காழ்ப்ப
- = இறப்ப மிக = முதிர, 760.
கான
[தொகு]- கான
- =[கானமுயல்] கானத்தின்கண் ஓடும் (முயல்),772.
கிகர வரிசை
[தொகு]கி
கிடந்தது
[தொகு]- கிடந்தது
- = கூடியது, 446, 583, 1001.
- கிடந்தமை
- = இயல்பு = உள்ளபடி, 959.
- கிடந்தேன்
- = படுத்திருந்த நான், 1187.
கிழக்கு
[தொகு]- கிழக்கு
- = கீழ்(இடம்) = (தலை)கீழாகும், = கெடுவர், 488.
- கிழமை
- = உரிமை, 785, 805.
- கிழமையை
- = உரிமையை = உரிமையாற் செய்வனவற்றை, 801.
- கிழவன்
- = உரியவன், 1039.
கிளத்தல்
[தொகு]- கிளத்தல்
- = சொல்லுதல் [நெஞ்சொடு கிளத்தல்], அதி.125.
- கிளவா
- = சொல்லாத, 715.
- கிளைஞரை
- = நட்பாளரை, 796.
கீகார வரிசை
[தொகு]கீ
கீழ்
[தொகு]- கீழ்
- =(7-ஆம் வேற்றுமை உருபு) இல், கண் 389;
- = உள்ளாக, 558, 929, 1034;
- = கீழான இடம், 973;
- = கீழ்க்குலம், 409;
- = சிறியர், 973;
- = கீழாயினான், 1074, 1079;
- = கீழாயினார், 1078.
- கீழ்களது
- = கயவரது, 1075.
- கீழ்ந்திடா
- = சிதையாத, 801.
அக இணைப்பான்கள்
[தொகு]கா காட் காண் காத் காய் காம் காய் கார் கால் காவ காழ் கான கிட கிழ கிள கீழ்
பார்க்க:
கெகரம்,கேகாரம்,கைகாரம்- திருக்குறள்அகரமுதலி கேகாரவரிசை கொகரம்,கோகாரம்,கௌகாரம்- சகரம்,சாகரம்,சிகரம்,சீகாரம்- செகரம்- சேகாரம்,சொகரம்,சோகாரம்-ஞாகாரம்- [[]]