திருக்குறள்அகரமுதலி ஏகாரவரிசை
Appearance
பார்க்க:
திருக்குறள் அகரமுதலி ஏகாரவரிசை
[தொகு]ஏ
[தொகு]- ஏ
- = ஈற்றசை(யாக)= தனக்கென ஒரு பொருளின்றிச் சீர் நிறைத்தலே பொருளாக இறுதியில் நிற்றல்.
9, 15, 16, 77, 92, 129, 155, 173, 179, 182, 213, 215, 271, 332, 338, 401, 408, 415, 443, 450, 503, 531, 551, 613, 673, 716, 728, 740, 779, 855, 887, 906, 925, 940, 950, 962, 974, 987, 1054, 1064, 1105, 1121, 1134, 1139, 1176, 1187, 1190, 1193, 1240, 1285, 1287, 1288, 1290;
- = எதிர்மறை(ப்பொருளில்) = எதிராக மறுத்தல், 113, 447, 1299;
- = தேற்றம் = தெளிவுப்பொருளில், 1, 25, 29, 33, 39, 40, 64, 76, 93, 113, 132, 139, 171, 222, 240,261, 282, 289, 333, 349, 354, 370, 394, 395, 418, 505, 513, 521, 527, 541, 557, 566, 585, 587, 640, 679, 715, 764, 765, 788, 871, 889, 923, 928, 967, 977, 1024, 1027, 1044, 1071, 1075, 1088, 1101, 1108, 1129, 1186, 1191, 1202, 1204, 1215, 1283;
- = வினா(ப்பொருளில்), 555.
- = பிரிநிலை= பலவற்றுள் ஒன்றைப் பிரித்துரைத்தல், 27, 49, 57, 108, 111, 125, 223, 227,229, 242, 293, 305, 319, 366, 373, 434, 487, 489, 502, 548, 579, 600, 657, 766, 847, 97, 933, 980, 982, 1029, 1031, 1033, 1041, 1060, 1099, 1102, 1164, 1167, 1173, 1296, 1309;
- = செய்யுள் விகாரத்தால் தொக்கவை, 23, 72, 165;
- = விளிவேற்று்மை/ எட்டாம் வேற்றுமை, 1112, 1237, 1243, 1244, 1245, 1247, 1291, 1293, 1294.
- ஏஎர்
- = அழகு, 1053, 1305;
- = நன்மைக்குறிப்பு, 1098.
ஏகி
[தொகு]- ஏகினான்
- = நடந்தவன், 3.
- ஏக்கற்று
- = ஆசையால் தாழ்ந்து, 395.
- ஏங்கி
- = ஆசையால் தாழ்ந்து, 1248.
- ஏங்குபவர்க்கு
- =வருந்துபவருக்கு, 1269.
ஏத
[தொகு]- எதப்பாடு
- = குற்றம் உண்டாதல், 464.
- ஏதம்
- = குற்றம், 136, 432, 884,885;
- = துன்பம், 164, 275;
- = கேடு, 83;
- = நோய், 1006.
- ஏதில்
- = முன்னறியாத/ புதிய, 913.
- ஏதில
- = பழுதுடையன, 440;
- = வேற்றுமையுடைய(அணிகள்), 1089.
- ஏதிலர்
- = அன்பிலர், 1129, 1130;
- = பகைவர், கொலைஞர் 1224.
- ஏதிலார்
- = இயைபில்லார், 837;
- = முன்னறியாதவர், 1099;
- = பகைவரது, 440.
- ஏதிலான்
- = பகைவனது, 862.
- ஏதின்மை
- = பகைமை, 816.
- ஏத்தும்
- = போற்றும், 970.
ஏந்
[தொகு]- ஏந்தல்
- = தாங்குதல், 772.
- ஏந்திய
- = உயர்ந்த, 899.
ஏம்
[தொகு]- ஏம்
- = பித்து [ஏமுற்றவரின்], 873.
- ஏம
- = அரணாகிய, 1131, 1164;
- = அரணாகிய உபதேசமொழிகளை உபதேசிக்கும் புணை, 306.
- ஏமம்
- = அரண், 766,815;
- = காவல்,738.
- ஏமரா
- = காவலற்ற, 448.
- ஏமாப்பு
- = வலியாதல், 112, 458, 459, 1068;
- = அரணாதல், 126;
- = உதவுதல், 398;
- = துணையாதல், 868.
- ஏமார்த்தல்
- = ஏமத்தையடையப் பண்ணுதல், 660.
ஏர்
[தொகு]- ஏர்
- = கலப்பை, 872;
- = ஏருடையார், 1031;
- = ஒத்திருக்கின்ற, 1089, 1272.
- ஏரின்
- = ஏரினால், 14;
- = உழுதலைக் காட்டிலும், 1038.
ஏல்
[தொகு]- ஏல்
- = ஆயின், 18, 368, 386, 556, 573, 575, 996, 1014, 1118, 1144.
ஏவ
[தொகு]- ஏவ
- = சொல்லாநிற்க(வும்), 848.
- ஏவல்
- = கட்டளையிடுதல், 515;
- = ஏவியதொழில், 907, 909.
ஏழ்
[தொகு]- ஏழை
- = அறிவில்லாதவன், 873.
ஏற்
[தொகு]- ஏறா
- = ஊர்தலைச்செய்யாத, 1137.
- ஏறி
- = இவர்ந்து, 29, 758.
- ஏறினார்
- = இவர்ந்துநின்றவர், 476.
- ஏறு
- = ஆண்சிங்கம், 59;
- = ஏறு(காளை)போல்வான், 381.
- ஏறும்
- = (மடல்மாவினை) ஊரும், 1132, 1264;
- = (ஏறும்மடல்) ஊருகின்ற, 1133.
- ஏற்றல்
- = எதிர்தல், 861.
- ஏற்று
- = (நெஞ்சுட்)கொண்டு, 716.
ஏன்
[தொகு]- ஏனும்
- = ஆனாலும், ஆயினும், 277, 430, 997.
- ஏனை
- = மற்ற, 392, 505, 704, 760.
- ஏனைய
- = மற்ற, 268.
- ஏனையவர்
- = மற்றவர்/கல்லாதவர், 410.
அக இணைப்பான்கள்
[தொகு]ஏ ஏக் ஏத் ஏந் ஏம் ஏர் ஏல் ஏவ ஏற் ஏன்
திருக்குறள் அகரமுதலி ஏகாரவரிசை முற்றும்
[தொகு]- பார்க்க
நெ,நே,நொ,நோ. ப- | பா,பி,பீ-| பு,பூ-| பெ,பே,பை-| பொ,போ- || ம- | மா- |மி, மீ, மு, மூ- | மெ, மே, மை, மொ, மோ- || யா || வ-|