திருக்குறள்அகரமுதலி ஓகாரவரிசை
Appearance
பார்க்க:
திருக்குறள் அகரமுதலி ஓகார வரிசை
[தொகு]ஓ
[தொகு]ஓ
- ஓ
- = அசைநிலை=பொருளின்றிச் சீர்நிரப்ப அசையாகி நிற்பது, 31, 99, 211, 318, 819, 987, 990, 1004, 1016, 1029, 1048, 1070, 1081, 1089, 1170, 1171, 1178, 1184, 1195, 1206, 1240, 1241, 1267, 1329;
- = எதிர்மறை, 71, 85, 190, 304, 315, 483, 591, 626, 705, 707, 775, 846, 1014, 1149, 1154, 1159, 1245, 1258, 1260;
- = கழிவு/ கழிவிரக்கம், 340, 1088, 1252, 1253, 1254;
- = தெரிநிலை, 1257;
- = இடைவிடாமை, 1204;
- = பிரிநிலை: மிகுதியின் வந்த குறிப்பு, 1176, 1247;
- = வினா, 968, 1085, 1117, 1143, 1181, 1208, 1222, 1237, 1293, 1318, 1323, 1328.
- ஓஒ
- = வியப்பின் குறிப்பு, 1088;
- = மிகுதிப் பொருளில் குறிப்பு 1176;
- = இடைவிடாமை, 1204.
- ஓஒதல்
- = தவிர்தல்=(தவிர்க), 653.
ஓசை
[தொகு]- ஓசை
- = ஒலி 27.
- ஓச்சி
- = செலுத்தி, தொடங்கி 562,
- ஓச்சும்
- = செலுத்தும், 544, 545.
ஓட
[தொகு]- ஓட
- = தாட்சண்யப்பட[கண்ணோட] = செலுத்த, 578.
- ஓடா
- = ஓடமாட்டா, 496.
- ஓடாதவர்
- = தாட்சண்யப்படாதவர்[கண்ணோடாதவர்], 576.
- ஓடாது
- = தாட்சண்யப்படாமல்[கண்ணோடாது], 541.
- ஓடி
- = தாட்சண்யப்பட்டு[கண்ணோடி], 579;
- = (மீறிச்)சென்று[மருங்கோடி] = கொடுநெறிக்கண் சென்று, 210.
- ஓடு
- = உம் 632;
- = உடன்(3-ஆம் வே.உருபு, உடனிகழ்ச்சிப் பொருளில்), 37, 338, 410, 413, 426, 482, 499, 516, 576, 636, 698, 702, 704, 890, 983, 1310.
- ஓடும்
- = ஒடும், 496.
- ஓட்டத்து
- = தாட்சண்யத்தின்கண்[கண்ணோட்டத்து], 572.
- ஓட்டம்
- = தாண்சண்யப்படுதல்[கண்ணோட்டம்], 571, 573, 574, 575, 577, 983;
- = அதி.58 [கண்ணோட்டம்]
- ஓட்டு
- = ஓட்டம் = தோல்வி, 775ழ
ஓதி
[தொகு]- ஓதி
- = கற்று, 834.
- ஓத்து
- = மறை, 134.
ஓம்பப்படும்
[தொகு]- ஓம்பப்படும்
- = காப்பாற்றத்தகும், 131.
- ஓம்பல்
- = வழுவாமற் செய்தல், 43;
- = புறந்தருதல் 89;
- = பேணல், 390;
- = ஓம்புக = ஒழிக, 612;
- = காக்க, 642;
- = நீக்குக, 820;
- = அழுங்குவிப்பாயாக, 1155;
- = அதி.9 [விருந்தோம்பல்].
- ஓம்பா
- = (புறந்தருதலை) இகழுகின்ற, 89;
- = ஒழியாமல், 861.
- ஓம்பி
- = போற்றி, 81;
- = மிசைவித்து, 85;
- = பேணி, 86, 132, 244, 549;
- = காத்து, 88;
- = மனத்தை ஒருக்கி, 132.
- ஓம்பின்
- = காப்பாற்றினால், 1155.
- ஓம்பு
- = அஞ்சாதே, 1149.
- ஓம்புக
- = ஒழிக, 506, 861.
- ஓம்புதல்
- = குறிக்கொண்டு காப்பாற்றுதல், 322;
- = இவறுதல் = லோபஞ்செய்தல், 626.
- ஓம்பும்
- = காக்கும்[ஓம்பும் வாழ்க்கை], 968.
- ஓம்புவான்
- = காப்பாற்றுபவன், 83, 84.
ஓர்
[தொகு]- ஓர்
- = ஒரு = ஒன்றாகிய, 429, 465, 588, 645, 704, 796, 848, 902, 932, 1053, 1098, 1153, 1307;
- = ஒரு குறிப்பிட்ட[ஓர் ஐந்தும், ஓர் எழுபது],24;
- = சற்றேறக் குறைய, 639.
- ஓரா
- = ஆராய்ந்து, 548.
- ஓரார்
- = செவிகொடுத்துக் கேளார், 695.
- ஓரும்
- = அசைநிலை, 40, 366.
- ஓர்த்து
- = தெளிய ஆராய்ந்து, 357.
- ஓர்ந்து
- = நாடி, 541.
ஓவா
[தொகு]- ஓவா
- = நீங்காத, 734;
- = ஒழியாமல், 1205.
- ஓவாது
- = ஒழியாமல் 33;
- = இடைவிடாமல், 933.
திருக்குறள்அகரமுதலி ஓகாரவரிசை முற்றும்
[தொகு]பார்க்க:
[தொகு]திருக்குறள் அகரமுதலி-அ- இ- ஈ- உ- ஊ- எ- ஏ- ஐ- ஒ- ஓ-
ச, சா, சி, சீ, சு, சூ- செ-- சே, சொ, சோ. || ஞா. || த- தா,தி,தீ- து,தூ,தெ,தே.| ந- | நா, நி- | நீ,நு,நூ- | நெ,நே,நொ,நோ.|| ப- | பா,பி,பீ-| பு,பூ-| பெ,பே,பை-| பொ,போ- || ம- | மா- |மி, மீ, மு, மூ- | மெ, மே, மை, மொ, மோ- || யா || வ-|